28/12/23

என் காதல் உனக்காக

உன் வார்த்தைகளால் மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கும்

 என் காதலை அதே வார்த்தைகளால் வழி அனுப்ப நினைக்காதே......... 

நான் இருக்கும் வரை எனக்குள் துடித்துக்கொண்டே 

இருக்கும் இதய துடிப்பாய் என் காதல் உனக்காக...... 

அந்த கடவுளுக்கும் என் கண்ணீருக்கும் மட்டுமே தெரியும் 

நீ என்னை மறுக்கும் ஒவ்வொரு நொடியும் அனாதையாய் 

நிட்பது நான் மட்டும் அல்ல என் காதலும் தான் என்று........ 

உன்னை கட்டாய படுத்தவில்லை காதலிக்கையும் சொல்லவில்லை

 கடந்து போய்விடாதே என்கிறது  உனக்காக துடிக்கும் 

27/12/23

என்னை விட நீ அழகென்று

 மாங்குயிலும் மன்றாடி  கேட்குதடி மங்கை உன் இசைக்குரலோ?😅

 தேனீக்கள் மொய்க்குதடி மங்கை உன் தேனிதழில்?🫂

 வெளிச்சம்  மயங்கி முத்து மணி  முறைக்குதடி மங்கை உன் சிரிப்பழகில்?💋 

தோகை மயில் தோற்குதடி மங்கை உன் தோளழகில்?🌀♥️

மாங்கனிகள்  மண் விழுந்து மன்றம் வந்து  மாய்குதடி மங்கை உன் மார்பழகில்?

 சுற்றி கட்டிய  சேலையே  சுற்றி வந்து  சுத்துதடி மங்கை உன் இடையழகில்🙈💋 

கட்டழகு வடித்தே கொள்ளுதடி💯 படித்த உதடும் படுத்துதடி  என்னவென்று  

சொல்ல ஏங்கி தவிக்க விட்டாய், இது போதவில்லை என்றால்  நிலவை கேள்!! 

அதுவே வெட்கப்பட்டு கூறும் என்னை விட நீ அழகென்று!!!

26/12/23

இதுதான் காதலா

 உருவத்தால் தொலைதூரம் கண்ட நாம் உணர்வுகளால் 

ஒன்றாய் விடியல் காண நினைப்பது ஏனோ இதுதான் காதலா? 

 எனக்கான நண்பனாய் துணையாக என் வாழ்வில் வந்த நீ, 

என் வாழ்க்கை துணையாக மாறிய மாயம் என்னவோ. 

இருளில் நுழைந்த ஒளி கீற்றாய் என் வாழ்வை அலங்கரித்தவனே. 

உன்னவள் நான் உன் மூச்சுக்காற்றில் வாழ காத்துகொண்டிருக்கிறேன்.


18/12/23

காதலே உன் கனவிற்க்காக

   காதலே ! நீ தூறல் போல் தொட்டுவிட்டு , துறவி போல் 

இருந்த - என்னை  தூங்காமல் செய்து விட்டாய் !  காதலே !

 நீ பனித்துளி போல் முத்தமிட்டு, பகலவன் வந்தவுடன் 

என்னை  விட்டு மறைத்துவிட்டாய்!  காதலே ! 

நன் உன்னை படித்திருக்கிறேன் , ஆனால், துடித்ததில்லை! 

இன்று துடிக்கிறேன் - இதயத்தில்  அடிக்கின்ற ஓர் ஆணியைப்போல்!

  காதலே! கணவகள் வந்ததுண்டு எனக்கு , ஆனால், நான் காத்திருக்கவில்லை ! 

இன்று காத்திருக்கிறேன் , காதலே உன் கனவிற்க்காக .......

விடை குடுக்கிறேன் பறந்து செல்

   புழுவாக இருக்கையில் அரவணைத்து கொண்டேன்,
 
றெக்கை முளைத்தபின் என்னை விட்டு பறக்க துடிக்கிறாய்,
 
அன்பு என்னும் கூட்டில் உன்னை கட்டி வைப்பதைவிட விடை குடுக்கிறேன்

 பறந்து செல், நீ பறந்து செல்லும் அழகை காண்பது கூட அன்புதான்.

17/12/23

வின்னில் மின்னும் நட்சத்திரம்

 பூந்தேனைப் பருகிய போதையிலே மயங்கித் தள்ளாடிய வண்டொன்று 

கானக இருட்டிலே கவிழ்ந்தபடி வானக அழகை வர்ணித்துக்கொண்டிருந்து.  

நிலவில்லா கருவானத்திலே நட்சத்திர நயணங்களின் ஆட்டம்!

 வின்னிலே மின்னும் விண்மீன்களின் பூந்தோட்டம்! 

மின்னும் பூக்கள் வின்னிலிருந்து  மண்ணில் விழத்தொடங்கியது,
 மின்மினிப்பூச்சியாய்!
 
அடர்க்காட்டிலே ஆயிரம் விளக்குகள் அதை அசதியில் ரசித்த வண்டோ
 
"மின்னும் அழகு என்னில் இல்லையனில் என்ன? வின்னில் மின்னும்
 
நட்சத்திரம் நீயெனில் மின்னும் ஒளியின் பின்னணியான காரிருள் நான்"

 என்னும் எண்ணத்தை மனதில் நிறைத்தபடி மின்மினிப்பூச்சியின்
 
மத்தியில் பூந்தேனின் போதையில் மெய்மறந்து மண்ணில் உறங்கியது

கனவை நோக்கி ஒரு பயணம்

நிலையில்லா வாழ்க்கையில் பல கனவுகளை மனதில் சுமந்து கொண்டு ஓடுகிறான்..!! 
 
அதனை அடைய தடைகளை உடைக்கிறான்..!! உண்மைகளை ஏற்றுக் கொள்கிறான்..!!  

பிரிவுகளை கடந்து போகிறான்..!!  வலிகளை  பாதையாக  உருவாக்கிறான்..!! 

 அதில் அறிவை பயன்படுத்தி  பயணம் செய்கிறான்..!!  நேரத்தை  கருவியாக பயன்படுத்துகிறான்..!!
 
 எண்ணத்தைத்தை  ஒன்று சேர்க்கிறான்..!!  இப்படி நெடிய பாதையில் பயணித்து 

கனவாக  இருந்த  ஒன்றை இலக்காக மாற்றி வெற்றி அடைகிறான் மனிதன்!!!

காமராஜர்

 காமராஜர் கவிதை  கருப்பு வைரம் ஐயா நீ, 
 
கல்வி தந்தை ஐயா நீ,
 
 எளிமையின் உருவம் ஐயா நீ,
 
 ஏழைகளுக்கு தெய்வம் ஐயா நீ,
 
  சாதியை ஒழிக்க செய்திட்டாய் - மக்கள்

  சாதிக்க வழிவகை செய்திட்டாய்

 புண்ணியம் செய்திட்ட பூமியிலே - ஐயா

 புகழ் பாடி என்றும் மகிழ்ந்திடுவோம்!!!  

        காமராஜர் ஐயா புகழ் பாடி என்றும் மகிழ்ந்திடுவோம்!!!   

மரணம் வரை சுவாசிப்பேன்

 உன்னை முதலில் பார்த்த நெடியே முற்றிலும் விழுந்தேன்..... 

உந்தன் முழுமையை தேடியே நாளும் அழைந்தேன்.. 

கார்மேக மழையில் நனைந்த புல்லின் பசுமையோ... 

வெண்மேகம் முட்டி மோதும் மலையின் பதுமையோ... 

தேனீயின் தேடலுக்காய் மலர்ந்திருக்கும் பூக்களின் புதுமையோ...

வெள்ளி மணியாய் கொட்டி தீர்க்கும் அருவியின் ஆர்பறிப்போ....

இல்லை யாதும் ஊரென பறக்கும் பறவையின் கீச்சொலியோ....

நிசப்த நிமிடங்களின் வெண்பணியோ... வெதுவெதுப்பான கதிர் ஒளியோ... 

உன்னில் யாவும் அழகு தான் இங்கே.. இத்தனை அழகு கொண்ட உன்னை

 அந்த அழகின் அரசி விண்மீனும் வியந்து பார்க்கிறதே...

 என்னை வருடும் காற்றுக்கு காரணம் நீயே... 

காதலியே நான் வாழ கண் இமையும் நீயே.... 

கணம் கணம் உன்னால் என் கவலைகள் மறக்கிதே... 

தினம் தினம் என்னுள் புதுமைகள் பிறக்கிறதே... 

என்னையே என்னில் தேடும் அளவிற்கு உன்னில் மாயம் கொண்டேனே.... 

உயிர் தந்த உன்னிலே உயிர் வாழும் வரை உரைகிறேனே... 

மனம் கவர்ந்த உன்னை மரணம் வரை சுவாசிப்பேன்.......

மாயை தரணியில்

தரணியில்...நீர் துளி பல கலந்து கடலாய் படர்ந்து வெப்பமுற,

 கருமேகம் கருவுற்று  மழைத்துளி பிறந்தென்னை முத்தமட்டு தழுவும்.  

ஆறாக பெறுத்தோட நிலவொளியும் நழுவும். பச்சிலை மரங்கள்,

 இச்சையில் ஆடும் இலைகள்,  காற்றுடன் அன்பு பாட,

 மலர்கள் மகரந்தம் வீச பொன்மாலை மயங்கும்.  

பின், இரவு அது இயற்க்கை விதி இருளில் ஒளிரும் எழில்,மதி. 

ஏளனம் மிகுந்து மிளிரும் எழில். எனக்கிணை ஏதென்று 

ஒலிரும் பொருள். கதிரவன் உதிக்க, மின்னும் அதிகாலை துளி பனியும், 

 கர்வம் கொண்டு மதியும் வெட்க்கிகுணியும்.  

மாயை தரணியில்! கதிர் அவன் தன்னை போர்த்த, 

தரணியின் தோற்றம் அவிழும். மாயை தரணியில்...

14/12/23

விடை கொடுக்கிறேன் பறந்து செல்

   புழுவாக இருக்கையில் அரவணைத்து கொண்டேன், 

றெக்கை முளைத்தபின்  என்னை விட்டு பறக்க துடிக்கிறாய், 

அன்பு என்னும் கூட்டில்  உன்னை கட்டி வைப்பதைவிட

விடை கொடுக்கிறேன் பறந்து செல்,

 நீ பறந்து செல்லும் அழகை காண்பது கூட அன்புதான்.

13/12/23

நீ என் தேவதை

 நீ என் தேவதை. என் வாழ்வின் தேன்மழை. 

இன்பம் தந்து என்னை ,கொல்லும் காதல் மாயை, 

உன் இதய கோவிலில், என் உயிரே ஏற்றுவேன், 

வாழும் நாள் வரை, நாளும் எழுதுவேன்,

 உன் பெயரில், காதல் வாசகம், 

காதல் யோகி நான், உன் பார்வை ஓர் வரம், 

தேவன் சாட்சியாய், நெஞ்சம், கைகள் கோர்த்து, 

மாலை சூடலாம், ஏங்குதே என் எண்ணங்கள், 

உன்னிடத்தில் தண்டனைகள் கேட்கிறதே, 

நீயும் நானும், ஒன்றில் ஒன்றுமாய், 

தேகம் சூட்டில்,இரவை தீயிடலாம்...,

அவன் மயில் போலே

 வெள்ளி ரதம் மேலே வேலன் அவன் வீதி வர,

 வள்ளி அவள்  வாசலிலே வண்ணமிட, 

வையகமே காதல் கொண்டு 

ஆடுதங்கே அவன் மயில் போலே.....

12/12/23

வினாவுடன் காத்திருக்கிறேன்

 இலைமறைகாயாக இருந்த என் வாழ்க்கையை
 
இலையுதிர்காலமாக மாற்றியவளே!!!!!!!!!!

  இத்தனை காலமும் எங்கிருந்தாய்?… 

இதுவரை வீசாத வசந்தம் என் வாழ்வில்……

காணாத சுகந்தம் என் முகத்தில்…

தாமதித்தது உந்தன் பிழையா? 

அல்லது தேடாமல் இருந்தது எந்தன் பிழையா??……

வினாவுடன் காத்திருக்கிறேன்…

விடையாக நீ வருவாய் என்ற நம்பிக்கையில்……

ஏழையின் வாழ்க்கை

 வண்ணங்கள் நிறைந்த வானவில்லை போல்
 
நிறங்கள் நிறைந்ததல்ல ஏழையின் வாழ்க்கை,

 காக்கையின் கருமை போல் விடாது துரத்தும் பசி...
 
அதை விரட்ட நினைக்கும் கைகள்  பாலின் வெண்மை போல, 

எழுதபடாத காகிதங்களை போல வெறுமையானது. 

அந்த வெறுமையை துரத்த ஓடும் கால்கள் முட்களால் 

காயப்பட்டு வெறுமை செம்மை ஆகிறது...

செம்மை செழுமை ஆகிறது... இப்படி கருப்பு,வெள்ளை,

சிவப்பு கோடுகளால் நிறைந்ததே ஏழையின் வாழ்க்கை !..

8/12/23

உன் நினைவில் நான்

 காலையில் தோன்றிய கதிரவனாய்!
 
இரவில் தோன்றிய சந்திரனாய்!
 
என் மனதில் தோன்றியவள் நீயே...!
 
 இருள் போன்ற என் உள்ளத்தில்!
 
ஓர் அழியா ஜோதி போல் வந்தவளே!

 நதி போன்ற உன் நினைவால்

 என் உள்ளத்தை அலைபாய வெய்த்தவலே... 

ஒற்றை மரமாய் வாழ்ந்திட இருந்தேனே! 

உன் பாசத்தை என்நூல் விதையாய் விதைத்து! 

தனியாய் வாழ்ந்திட நினைத்த 

நான் உன்னால் உறவாய் ஆணெனே....

அவள் பார்வை என்னை துளைக்க

 அம்பாக அவள் பார்வை என்னை துளைக்க,
 
இரக்கமற்ற இந்த இந்த பெண் மீண்டும்

 புன்னகை என்னும் வேல் கொண்டு 

எந்தன் இதயத்தில் யுத்தத்தை நிகழ்த்துகிறாள்

 அடிமை படுத்ததானே போர் இவளிடம் 

அடிபணிந்த என்னிடம் எதற்காக போர்....  

3/12/23

காதலிக்க துடிக்கும் என் இதயத்தை

முன் ஜென்ம சாபம் தான் காதல் போலும்

  சிலருக்கு சுமையாக, சிலருக்கு சுவையாக.,,,,,.  
   
    என் காதல் பயணம் பாதியில் முடியும் 

என்று தெரிந்து இருந்தால் அன்றே நிறுத்தி இருப்பேன்

 காதலை அல்ல,,, காதலிக்க துடிக்கும் என் இதயத்தை,,,. 

உயிர் ஆனேன்

உன் நெற்றியில் குங்குமம் இட்டு  
   
 உன் கழுத்தை அலங்கரித்தேன்…
 
உன் புருவத்திர்க்கு இடையில் திலகம் ஆனேன் 
  
 உன் கால் விரல்களுக்கு இடையில் உயிர் ஆனேன்… 

நம்மை காக்கும் இயற்கையே

 இயற்கை  காப்பது நமது பொறுப்பு,  
அதில் காட்ட வேண்டாம் வெறுப்பு, 

 இயற்கை என்பது நமது பொதுவுடமை,
 அதைக் காப்பதே நம்தலையாய கடமை, 

 இன்று மரங்களிடம் நாம்காட்டும் நேசம், 
 அதுவே நம் சந்ததிகள் சுவாசிக்கும் சுவாசம்,
 
பகைஇல்லா வாழ்க்கையை கொடுப்பதை விட, 
புகையில்லா சூழலை  வழங்கிடுவோம் நம்குழந்தைகளுக்கு, 

நீலவண்ணம் கொண்ட நம்பூமி  மீதிலே,  
பச்சைவண்ணம்  பூட்ட புதுசபதம் ஏற்போம், 

 மனிதன்இன்றி இயற்கையால் செழிக்க முடியும், 
  மரங்கள்இன்றி நம்இதயம் எவ்வாறு சுருங்கிவிரியும், 
 
ஆளுக்கொருமரம்  வளர்க்கும் காலம் வரும்,  
அதுவே நல்லதொரு பாடம் கற்றுத்தரும்,

  நம்சந்ததிக்கு சொத்துகள் சேர்ப்பதில் பெருமைஇல்லை, 
 நல்லதொரு இயற்கையை உருவாக்க பொறுமைஇல்லை, 

 புத்தகங்களின் பாரம் வளைக்கட்டும் தண்டுவடத்தை,  
காற்றுஉருளைகள் பிடித்துவிடக்கூடாது அந்த இடத்தை,

 நாம் எவ்வாறு காக்கிறோம் இயற்கையை, 
தன்னாலே நம்மை காக்கும் இயற்கையே,

 இயற்கை என்பது கடவுளின் வரமாகும், 
அதுவே மனிதஇனத்தை காக்கும் அரனாகும்,

 நமது இயற்கை நமது பொறுப்பு, 
அதை காப்பதே நமது சிறப்பு,  

கண்ணாடியும் காதலும்

 எத்தனை எத்தனை முறை  எங்களை ரசித்து இருப்பாய்! 

எத்தனை எத்தனை முறை எங்களை கண்டு வஞ்சம் கொண்டிருப்பாய்! 

 எப்படி எல்லாமோ உன் முன் எங்களை அழகாக்கி கொண்டோம்!!

 இதுவரை இருவரும் உன் எதிர் நிற்கையில் ஆனந்தம் மட்டுமே!!  

ஆனால் இப்போதெல்லாம் அப்படி தெரிவதே இல்லை!!!  

அந்த ஒற்றை நொடி, நூழிலை வருத்தத்தாலா? 

இப்படி இருவரையும் காட்டுகிறாய்!!! கண்ணாடியே!  

  கண்ணாடியே, நீ இன்று உடைந்து சிதறாமல்,

 நாங்கள் சிதறியதை காட்டிவிட்டாய்!!!!!

தேடல் தான் தீராத வியாதி

 தேடல் தான் தீராத வியாதி என்னில்😒,

தேவையில்லா சிந்தனை ஏராளம் பெண்ணில்......

 😢இருந்தும் என் காதல் குறையாது உன் கண்ணில்....
 
இதுவே நிம்மதி🌹🫂என்றும் அன்பில்....

காதலித்தவரை காதல்  செய்வது உலகின் வழக்கமாய்

  இருந்தாலும் கண்டு கொள்ளாத உன் கண்ணை

 காதல் செய்வது என்னிருந்தே தொடக்கமாகட்டும்.......

2/12/23

அன்பு இல்லாத உலகில்

 அன்பு இல்லாத உலகில் ஆனந்தம் இல்லை,

ஆனந்தம் இல்லாத உலகில் நீ இருந்தும் பயன் இல்லை. 

அன்பு என்னும் பண்பு உன்னிடம் இருந்தால்,
 
நீயே பலர் வாழ்வில் ஆனந்தம் ஆவாய்.

அவள்

அவள் உதிரம் நமக்கு பாலாகிப்போனது...

அவள் சிந்திய வியர்வை துளி நமக்கு உணவாகிப்போனது...

அவள் வாங்கிய கடன் நமக்கு படிப்பாகிப்போனது....

அவள் செய்த தியாகம் நமக்கு வாழ்வாகிப்போனது...

அவள் கைக்குள் இருக்கும் வரை உலகம் சிரியதாகிப்போனது...

அவள் கையை விட்டு போனபோது அவளுடன் நிம்மதியும் சேர்ந்து போனது...

அன்று உணர்ந்தேன் அவள் தான் என் உலகம் என்று 

28/11/23

இறுதி மூச்சுவரை

 நீ என் முதலாக இல்லை,முடிவாக வேண்டும்... 

நீ என் கனவாக இல்லை, நினைவாக வேண்டும்...

 நீ என் கண்ணாக இல்லை, பார்வையாக வேண்டும்... 

நீ என் காமத்தில் இல்லை, காதலில் வேண்டும்...
 
நீ என் இளமையில் மட்டும் இல்லை, முதுமையிலும் வேண்டும்...
 
நீ என் துணையாக இல்லை, நிழலாக வேண்டும்... 

நீ என் மூச்சாக இல்லை, இறுதி மூச்சுவரை என்னோடு இருந்தால் போதும்!!!

27/11/23

உன் நினைவில் நான்

 என்னை கவிஞன் ஆக்கிய பெருமை உன்னையே சேரும்..! 

உன்னை பார்க்காமல் இன்றுடன் மூன்று வருடங்கள் கடந்து செல்கின்றன... 

உன் மீது நான் கொண்ட அன்பில் சிறுதுளி கூட மாற்றம் இல்லை...

இன்று மட்டும் இல்லை என்றும் உன் நினைவில் நான்...

என்னுடன் இருப்பாயா

 என்னுடன் இருப்பாயா எனக்கே எனக்காக மட்டும்  என்னை புன்னகைக்க வைத்தவனாய்
 
இருப்பாயா என்னை சுற்றி சுற்றி வருவாயா  என் ரசிகனாக இருப்பாயா  இல்லை 

என்னை வர்ணிக்கும் கவிஞனாக இருப்பாயா மார்போடு அனைத்துக் கொள்வாயா 

 என் உணர்வுகளை புரிந்து  கொள்வாயா என் அழுகையை துடைப்பாயா  

என்னுடன் கை கோர்த்து நடப்பாயா அல்லது குழந்தை வேடம் அணிந்து
 
என்னை தூக்கி செல்வாயா என் மனம் உன்னை நினைக்கையில்  என் அருகில் 

வருவாயா முழுமையாக காதலிப்பாயா எப்படி தான் இருப்பாய் 

அதுவாக இருப்பாயா அல்ல இதுவாக இருப்பாயா  இப்படியெல்லாம்

 இருப்பாயா என்னவனாக என்னுடன் இருப்பாயா  என்னுடன் இருப்பாயா !!!!!

26/11/23

காத்திருந்த காதல்

 கண்ணிமைக்கும் நொடிப்பொழுதிலே என் கனவோடு கலந்தவனே
 
கனவில் கலந்த நீ என் நிஜத்தின் நிழலாக வருவது எப்போது... 

காத்திருப்புகளே காதலாய் மாறி போன நம் வாழ்வில் 

காத்திருந்த காதல் காவியமாய் மாறுவது எப்போது...

கானல் காதல்

ஒரு பொன் மாலை பொழுதினிலே, ஓவியமாய் பெண்ணொருத்தி
 
அவளை என் ஒற்றைக் கண்களால் ஒருமுறை கண்டேன்...
 
 சேனைகள் ஆறாயிரம் அவளருகில், பாவனைகள் ஒராயிரம்
 
அவள் முகத்தில், நின்றது பெண்ணா பதுமையா என்ற ஐயம் ஓங்க...  

விழுந்தேன் காதலில், பின் அறிந்தேன் அவளை என் 

பகைவனின் மகளென்று! மனம் செய்வதறியாது திகைத்து 

விழித்தேன் தெரிந்தது கனவென்று புரிந்தது கானல் நீரென்று! 

25/11/23

கண்டதெல்லாம் அதிசயம்

கண்டதெல்லாம் அதிசயம், புரிந்து கொண்டான் மனிதன். 

கண்ணில் தெரியாதவாறு படைத்ததால்,
 
காற்றின் அருமை புரியாமல் போனது.

  "அது படைத்தவன் தவறு என்று பதில் தேடாமல்,

 கொடுத்தவன் ஈகை குணத்தை நீ புகழ்பாடு!",
 
புலப்படாத காற்றையும், புகை கலந்து வீதியில் உலாவவிட்டு, 

கண்களுக்கு புலப்படுத்துவதா மனிதனின் அறிவு.
 
இனி மாசு வேண்டாம், அதை தூசாக நினைத்து தூர வீசு.
 
உன்னை மாற்றிக் கொள், இனி மின்னொளியாய் மாறி,மாற்று வழி,
 
மின் , ஒளி, என நாம் நலம்பெற, பலவகையில் பலன்தர பலயிருக்க.

23/11/23

எனக்கென நீ உனக்கென நான்

உன்னை முதல்முறையாகப் பார்த்தப்பொழுது என் மனதிற்குள் ஏதோ 

புது மாற்றம் உன்னை பிடித்ததற்குக்  காரணமோ உனது தோற்றம்!! 
 
உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன் பிறகு வேண்டாம் என்று நினைத்தேன்

  நண்பர்களாகப் பழகினோம் காதல் என்னும் மொட்டில் இருந்து காதலர்களாக மலர்ந்தோம்!! 
 
 நீயும் ஓரிடத்தில்  நானும் ஓரிடத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது ஒரே இடத்தில்

 பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்கும் கண்கள் பேசத் தயங்கும்

 உதடுகள் புன்னகையுடன் நம்முடைய காதல் தருணங்கள்  உன் விரலை பிடித்துக் கொண்டு

 பிரிய மனதில்லாமல்  துடிக்கும் என் இதயம்  கால அவகாசமும் இல்லை!!  பிரிய மனதும் இல்லை!! 

 விரலை விடும் பொழுது  தீராதக் கண்ணீர்த் துளிகள்  நம் காதலின் அடையாளமாய்!!
 
மீண்டும் கை கோர்க்க  இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ???

  அன்றும் இன்றும் என்றும் என் வாழ்விற்கு உன்னால் மட்டுமே வண்ணம் பூசி ஒளி வீச முடியும்!!
 
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எனக்கென நீ உனக்கென நான் என இருப்போம்!!! 

21/11/23

கடவுளின் வடிவம் தாயாக

  "பசியோடு தாயிருப்பாள் இருந்தும் தன் பிள்ளைக்கு, தவறாமல் பால் கொடுப்பாள்! 
 
 புத்தாடை உனக்கு தந்து, கந்தலை புத்தாடையாய் உடுத்திடுவாள்!
   
சுடும் தரையில் அவள் நடப்பால் தன் இடுப்பில் உனை சுமப்பால்!
  
 பரீட்சைக்கு நீ படிக்க துணையாக விழித்திருப்பாள்!
 
  கருவிலே சுமந்த உன்னை மட்டுமன்றி, உன் புத்தகப் பையினையும் சுமந்திடுவாள்!
  
 தோல் அளவு வளர்ந்த உன்னை குழந்தை என்றே, குளிப்பாட்டுவாள்!
  
 முன்னாலே நீ நடக்க, பின் நின்று ரசித்திடுவாள்!
 
  பட்டத்தை நீ பெற, தாய் பட்ட கஷ்டத்தை சொன்னதில்லை!
 
  அன்பின் ஆழம் கடலாக, கடவுளின் வடிவம் தாயாக!!!   

20/11/23

முத்தம்

தன் பெண்மைக்கு, மேன்மை சேர்க்கும்
 
தாய்மை நிலைஅளித்த குழந்தைக்கு,

 அன்னையின் முதல் பரிசு "முத்தம்."

என் முதல் நாயகனே

கருவினில் சுமக்காமல், தன் உயிரினில் சுமக்கும்... என் முதல் காதலனே..,

 என் முதல் நாயகனே.., உன் கஷ்டத்தை மறந்து, எனக்கு இஷ்டப்பட்டதை தந்தாய்...

 உன் அன்பினால் வளர்த்து, எனக்கு இன்பத்தை மட்டும் கொடுத்தாய்...
 
உன் அக்கறையை தந்து, எனக்கு எக்கறையுமில்லா பாசத்தை வடித்தாய்...

 எனக்கு வெற்றியை மட்டுமே, கற்றுக் கொடுத்தாய்... ஆனால் இன்று
 
தோற்று விட்டேன்... என் தந்தையின் அன்பின் முன்னால்!!! 

11/11/23

சாரல் மழை

 சாரல் மழையாய் எனை தீண்டி சிலிர்க்க வைத்து !  

மனம்தனில் குறுகுறுப்பை உண்டாக்கி! 

எந்தன் மாற்றம்தனை என்னையே விந்தையாய் 

பார்க்கும்படி செய்துவிட்டாயே கள்வா!

10/11/23

இரவின் நிழலில்

 இரவின் நிழலில் உறங்கிகொண்டிருந்தன  குப்பத்து வீடுகள்

  இரயிலின் கூவலில் விழித்துக்கொண்டது தெருவிளக்கு 

 குப்பைத்தொட்டி  பிரசவித்த குப்பைகளுக்கு நாய்குட்டிகள்

 முத்தமிட்டுக்கொண்டிருந்தன  நின்றுவிட்ட மணிகூண்டின்

 கடிகாரத்தில் நடந்துக்கொண்டிருந்தது   நாலுகால்பூச்சியின்
  
கட்டிட வேலை  மூன்றாம் உலகப்போருக்கு போய்க்கொண்டிருந்தன
 
முறுக்குமீசை பூனைக்குட்டிகள்  தூரத்தில் காணல் நீரில் மிதக்கும் 

                     நிலவுபோல் மின்னொளியில் கரைந்துகொண்டிருந்தது கட்டிடங்களின் இரவு.                      

9/11/23

நீயோ உனக்கான பொறுமை

 நான் விதையாக தோன்றினேன்.. நீயோ கருவாக தோன்றினாய்.. 

நான் செடியாக வளர்ந்தேன்.. நீயோ மானிடராக வளர்ந்தாய்.. 

நான் கனியாக மாறினேன்.. நீயோ மாறாமல் நிற்கின்றாய்..
 
என்னுடன் வா மானிடனே.! ஐம்பூதங்களையும், காலத்தையும்

 எனக்கேற்றவாறு மாற்றினேன் கனியாக மாறினேன்! 

நீயோ உனக்கான பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி என 

அனைத்தையும் என்னிடம் இருந்து பெறுவாய்.. கனியாக மாறுவாய்!

8/11/23

அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று

 என் மனம் கவர்ந்த இளைய பிராட்டியைப் பற்றி எழுத வாய்ப்பளித்த, அந்த 
இறைவனின்

 மேல் சிறிது கோபம் தான்!!! ஏனெனில் அவளைப்பற்றி எழுத சொன்னவன், 

அவளின் எக்குணத்தைப் பற்றி வர்ணிக்க என்று என் கனாவில் கூறவில்லை!!
 
வந்தியரை மணந்தும் என்னை மயக்கும் அவள் அழகைப் பற்றி வர்ணிப்பதா?

 அருண்மொழிக்கு இரண்டாம் தாயாக திகழ்ந்தவர் அன்பைப் பற்றி வர்ணிப்பதா?
 
அரசியலில் சிறந்து என் மனம் ஆள்பவளின் அறிவைப் பற்றி வர்ணிப்பதா?

சோழ குலத்தில் உதித்த பெண் புலியின் வீரத்தைப் பற்றி வர்ணிப்பதா?

 அவளின் கருநீல கண்களைப் பற்றி வர்ணிப்பதா?
 
மல்லிகை மொட்டினை ஒத்த அவளது மூக்கைப் பற்றி வர்ணிப்பதா?

பன்னீர் மொட்டின் இதழ்களை ஒத்த அவளது இதழ்களைப் பற்றி வர்ணிப்பதா? 

கூந்தல் கோபுரமாய் எழுந்து அவள் அழகை உணர்த்தும் அழகைப் பற்றி வர்ணிப்பதா? 

 இப்படி எல்லாம் என் சிந்தனை பொன்னி நதி போல் ஓட, என் மனம் குழம்ப,

ஒரு நொடி கண் மூடி அவளைப்பற்றி நினைக்க, என் மனமும் மதியும்
 
ஒன்று சேர்ந்து சொன்னது, அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று!!!!!  

7/11/23

என் உயிரே

 வலிகள்தான் என்றாலும் வரவேற்கிறேன்.. வா என் அன்பே.. 

விதியென்ற ஒன்று உன்னை என்னுள்ளே கோர்க்க... 

என் உயிரோடு வளர்ந்த விதை நீ.. விருட்சமானாய்... 

வாழைப் போலே நீ குலை விடும்போது கண்ணீரோடு உன்னை ஏந்திக் கொள்வேன் கண்ணே..

 நீலம் பூத்த வானமும் திசைகள் எங்கும் ஊர்களுமாய்  இந்த உலகம் உனக்கு புதிதுதான்...
  
அன்பை மட்டும் எதிர்பார்க்காதே... வஞ்சகமும் வம்பும் கூட சேர்ந்து வரலாம்.... 

கண்ணில் தூசி விழுமுன்னே இமைகள் மூடிக் கொள்வது போலதான்... 

உன்னை நீயே காத்துக் கொண்டால்  இந்த உலகம்  உனக்கும் அழகாய் தெரியும்....
  
 உறவுகள் குறையலாம் .. நட்பும் பிரியலாம்.. காதல் கண்ணீர் தரலாம்... 
 
உடைந்து விடாதே...   உனக்கான நம்பிக்கை உனக்குள்ளே உண்டு... 

நீ ஆலமரமாய் விழுது விடும் நேரம் உன் அன்னை நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... 
  
அதற்காக இன்றே உன்னை வரவேற்கிறேன்...

  என் உதிரத்தில் வளர்ந்தாலும் உன்னிடம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை..

   யாருக்கும் காயம் தராமல் வாழ்ந்து காட்டு அதுவே போதும் என் உயிரே...

6/11/23

நீ ஓர் வரையாத ஓவியம்

  இயற்கை  இயற்கையே ! நீ ஓர்  வரையாத ஓவியம்
  
பாற்கடலை அருவியாக்கி  வின்மீன்களை மலர்களாக்கி
 
உணர்வுகளை ஊமையாக்குகின்றாய் உன்னை ரசிக்கத்தான்

எத்தனை கண்கள் அட அடடா ! குயில்களின் கூக்குரலும்  

மயிலின் அழகிய நடனமும் கருமேகத்தின் குளிர்ந்த காற்றும் 

இடியின் மேளதாள இசையும்  வண்ண நிலவின் ஒளியும் 

 சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களும்  உன்னை 

வரவேற்க காத்திருக்கின்றன  வானவில்லின் ஏழு வண்ணங்களும் 

 ஏழு ஸ்வரங்களாக இசைகின்றன   இயற்கையே ! 

நீயும் உயிர்களின் பிறப்பிடம்தான்  மனதின் மனப்போராட்டங்களும் 

 உன் மடியில் இறக்கிவிக்கப்படுகின்றன  உன்னை
                                                             
                                                                வர்ணிக்க வார்த்தைகளின்றி விடைபெறுகிறேன்                                                                                                   


5/11/23

மனம் எனும் கூண்டில்

 மறதி வேண்டும் என்று மனம் துடிக்கிறது..!! 

மறக்க முடியாமல் நினைவுகள் மனதில் இருக்கின்றது..!! 

உன்னோடு பேசிய போது உன் விழி பார்த்து கிடந்தேன்!!! 

நீ என்னோடு பேசாத போது என் விழி இழந்து கிடந்தேன்!!! 

மனம் திறந்து பேசுவாய் என மங்கை மனம் எதிர்பார்க்கிறது... ஏனோ!!

 தெரியவில்லை, உன் மனம் கூற மறுக்கிறது. என் பாவம் செய்தேனோ!!!! 

ஒவ்வொரு நொடியும் என் சித்தம் முழுதும் பித்தம் கொண்டு,

 அழுகிறேன் உன் ஒற்றை குறுஞ்செய்தி வந்து விடும் என்று...!! 

உன் மீது இருக்கும் என் காதல் சிறு துளியெனும் குறையாது..!! 

சேராமல் போனாலும் உன் நினைவு  என்றும் மறையாது..!! 

இனிய நினைவுகளோடு எப்போதும் உறைந்து இருப்பாய் என் மனம் எனும் கூண்டில்...!!!

விரைவில் சந்திப்போம்

 உந்தன் வெண்மையான உள்ளத்தில் பல பொய்களை தீட்டினேன் 

என் பொய்களை உண்மையாக காட்டினாய் நீ எனக்களித்த வெகுமதி 

இந்த உலகறியும் நான் உனக்களித்த அவமதிகள் யாரறிவார் நானறிந்தேன்

என் தீட்டலின் வேதனை எவ்வளவு கொடியதென்று துளிகூட சிந்திக்காத 

என் மதியும் சுயநலமிக்க என் கரங்களும் இனிமேல் உன்னை 

சந்திக்காது உண்மையாக சிந்தித்தால் விரைவில் சந்திப்போம்

4/11/23

காதல் என்னும் உளி

வலிகளில் மிகவும்  கொடியது காதல்  வலி ..  

அதை தாங்கவும் கற்றுக்கொடுத்தது  உன் விழி.. 

தாங்கிய பின்னும் கொடுத்தாய் மறு வலி.. 

அதையும்  தாங்கிக் கொள்ள  கண்டுப்பிடித்தேன் ஒரு வழி.. 

அது தான் காதல் என்னும்  உளி..

3/11/23

உன் சமையல் அறையில்

சமையல் அறையில் நான் சமைத்திடும் போது  

வாசம்  நுகர்ந்து  அறையில் நுழைந்தாய் சமையலை 

சுவைக்க வந்தாய் என்று நினைத்தேன் ஆனால் நீ 

என்னை நெருங்கி வந்தார் நீயோ என்னை ரூசித்தாய் 

நானோ உன் குரும்புகளை ரசித்தேன் என்னை 

சினுங்க வைத்தாய் இறுதி வரை சமையலை ருசிக்கவில்லை

26/10/23

என் காதல் மட்டும் எப்படி உன்னைச் சேரும்

என் வானம் நிலா கண்டதில்லை,

என் மண் மழை கண்டதில்லை,

 என் தோட்டத்தில் பூக்களும் இல்லை, 

என்னிடத்தில்புன்னகையும் இல்லை,

 கல்லறைப் பூக்கள் என்றும் கருவறை

சேர்வதில்லை...என் காதல் மட்டும்

 எப்படி உன்னைச் சேரும்...?

25/10/23

தாய் தமிழ் கவிதை

 அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! 

உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா

 வண்ணம் கண்ணிமையென காத்து  நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு 

துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே

 வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ

        அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!       

தாய்




13/10/23

உண்டா தமிழ் கவிதை

வாழ்க்கை கவிதைகள்

 "மனதிற்கு அமைதி தரும்
கடல் ஆலைகளை இரசித்தது
உண்டா?...

உடலுக்கு புத்துணர்வு தரும்
நீர்வீழ்ச்சிகளில் குளித்தது
உண்டா?...

உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும்
மழை நீரில் ஆடியது 
உண்டா?...

முகத்தை மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் காற்றை உயர்ந்தது  
உண்டா?...

பச்சை பசுமையான 
வயல்வெளிகளை கண்டது
உண்டா?...

நண்பர்களுடன் ஒன்றாக
ஆற்றில் எதிர்நீச்சல் போட்டது
உண்டா?...

நுகர்ந்தவரை மதிமயக்கம்
பூக்களை நுகந்தது 
உண்டா...

அன்னாந்து தண்ணீரை தேடும் 
கருமேகங்களை பார்த்தது
உண்டா?...

கண்களுக்கு விருந்தளிக்கும்
சூரிய உதையத்தை பார்த்தது 
உண்டா?...

சிறுவயதில் மரங்களில் 
மரக்குரங்கு விளையாடியது
உண்டா?...

கடும் தாகத்தில்
மண்பானை நீர் அருந்தியது
உண்டா?...

இத்தனையையும் உணந்தவனுக்கு
தான் இயற்கையின் அருமை புரிவது

உண்டு."

காளையார்கோவில் - ப.பவித்திரன்

Kavithai Competition 2023 & 24

15/9/23

முட்டாள்தனம்!

முட்டாள்தனம்


இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை: 

பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்; 

மேலும் பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு 

உறுதியாகத் தெரியவில்லை...