மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலேஉன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையேகாதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிதுஎத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளேகண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையேஉன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோபிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லைஇனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லைஅன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களேஉங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழிஎத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லைஇறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும்கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.
5/2/25
காதலுக்கு மொழியில்லை
4/2/25
என்னுயிரே
21/1/25
அன்பு
20/11/24
உன் நினைவில்
என் அன்பு ஆசையில் ஒரு கடிதம்
என் உள்ளத்தை நிறப்பும் மகிழ்ச்சிக்கு
என் உயிரை பரிசளிப்பேன் உண்ணாமல்
நீ இருக்க என் உயிர் தந்து உணவலிப்பேன்
உன்னை உயிர் என்றோ அல்லது உடல் என்றோ
சொல்ல மாட்டேன் எனேன்றால் இவை என்றோ
ஓர் நாள் அழிந்து விடும் நீ அழிவில்லா
உலமாக வாழ என் உலகை நான் தருவேன்
அதில் நீ உயிர் வாழ என் உயிரும் நான் தருவேன்
நான் சிரிக்க உன் கவலை மறந்து நீ சிரிப்பாய்
அந்த சிரிப்பில் மட்டுமே என்னிடம் பொய் உரைப்பாய்
உன்னோடு இருக்கும் போது உன் முகத்தில்
நான் தொலைத்தேன் நீ இல்லா நேரங்களில்
உன் நினைவில் தான் தொலைத்தேன்
21/7/24
தாயின் பாசம்
தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!
மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!
எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!
நட்பே
19/6/24
என் உயிர்
2/5/24
கடவுள் வடிவில்
28/4/24
விலகும் முன் யோசி
9/3/24
உயிர் போன்ற நட்பு
நீ என்னுடன் இருப்பதால்
அவள் மணம்
மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும்
மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை
என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்...
ஏனெனில் அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!
உன்னை நினைத்தேன்
அம்மா எனும் உறவு
விடுமுறை இல்லை உனக்கு,
உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,
விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,
ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,
மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,
நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,
வெளிக்காட்டாத உன் உணர்வு,
உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,
நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,
இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,
இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,
இவ்வுலகில் அம்மா எனும் உறவு,
ஆண்டவன் அருளின் படைப்பு.....
23/2/24
அன்பின் முடிவு
15/2/24
அம்மாவின் மடியில்
உன் பஞ்சு மெத்தை கால்கள்
தரையில் படுகையில் தரை
சிலிர்த்து போகிறது! அழகான
கருவாக நீ என் வயிற்றில்
உருவான போத என்னை
ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்!
நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ
விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!
முளைத்தெழும் விதைப் போல நீ
வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........





