உன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையே
காதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிது
எத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்
சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளே
கண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையே
உன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..
காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோ
பிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்
அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்
காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்
அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லை
இனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லை
அன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களே
உங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்
நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..
துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்
வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழி
எத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லை
இறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!
எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!
கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும்
கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,
அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக