உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி: 2023
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி துவங்கப்பட்டுருக்கு , விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவேண்டிய லிங்க்:
கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள் 03-July-2023 முடிவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் நமது கவிதை தளத்தில் அறிவிக்கப்படும்.
2.) இரண்டாம் பரிசு Rs: 200 (Paytm Recharge)
3.) முன்றாம் பரிசு Rs: (100 Paytm Recharge) மூன்று நபர்களுக்கு.
* பொது கவிதைகள்: (புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக் கவிதை)
வெற்றி பெற வாழ்த்துக்கள்! (முதல் பரிசு ரூபாய் 500)
- கவிதை போட்டி தொடங்கும் நாள்: 08-08-2022
- கவிதை போட்டி முடியும் நாள்: 30-07-2023
- கவிதை வெற்றியாளர் அறிவிப்பு நாள்: 03-08-2023
- பரிசு அனுப்பப்படும் நாள்: 15-08-2023
![]() |
Kavithai Competition 2022 & 2023 |
பரிசு:
1.) முதல் பரிசு Rs: 500 மதிப்புள்ள (Amazon gift voucher)2.) இரண்டாம் பரிசு Rs: 200 (Paytm Recharge)
3.) முன்றாம் பரிசு Rs: (100 Paytm Recharge) மூன்று நபர்களுக்கு.
கவிதை போட்டிக்கான விதிமுறைகள்:
1.) கவிதை - நீங்கள் எழுதிய கவிதையாக இருக்க வேண்டும். (கவிதை வேறு இணைய தளத்தில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது)* பொது கவிதைகள்: (புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக் கவிதை)
2.) கவிதை போட்டி தலைப்புகள்: தமிழ் கவிதைகள் - காதல், நட்பு, தாய்மை, இயற்கை, குடும்பம், வாழ்கை, அரசியல் போன்றவற்றை சார்ந்ததாக இருந்தால் நன்று.
3.) உங்களின் கவிதை சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 60 மணி நேரத்தில் உங்களின் படைப்பு CompetitionArt.com தளத்திலும் இடம்பெறும்.
4.) குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள்
5.) அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள்
6.) வெற்றியாளர்கள் - அந்த கவிதைக்கு கிடைக்கும் பாராட்டு மற்றும் விமர்சனங்கள் வைத்தும் பரிசு அளிக்கப்படும்.
7.) உங்களது கவிதை வெளியிட்டதும் மறக்காமல் உங்களது நண்பர்களுக்கு ஷேர் (Share) செய்யுங்கள். EX: Whatsapp, Facebook, Google+, Twitter...
சிறந்த கவிதை தேர்வு:
கவிதை போட்டி முடிவுகள்: மேலும் ஒரு நற்செய்தி உங்களது சிறந்த கவிதை தேர்வு செய்பவர் கவிஞர் செல்வி. மனுஷி அவர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.Subit Your Poem
கவிதை புத்தகம் வெளியீடு:
உங்களது கவிதை அனைத்தும், 2023 வருட இறுதியில் புத்தகமாக ( AP Digital Publisher) அமேசானில் கிண்டலில் வெளியிடுகின்றேன். அந்த கவிதை தொகுப்பில் உங்களது கவிதைக்கு கீழ் உங்களது பெயர் வெளியிடப்படும் என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களது கவிதை அனைத்தும், 2023 வருட இறுதியில் புத்தகமாக ( AP Digital Publisher) அமேசானில் கிண்டலில் வெளியிடுகின்றேன். அந்த கவிதை தொகுப்பில் உங்களது கவிதைக்கு கீழ் உங்களது பெயர் வெளியிடப்படும் என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் ஒரு நற்செய்தி உங்களது கவிதையின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ( 50 மேல் கவிதைகள் ) தனி புத்தகமாக எனது ( AP Digital Publisher) பப்பிளிகேஷன் மூலமாக வெளியிடமுடியும். இதற்க்கு என்னை தொடப்பு கொள்ளவும்.
2022 சென்ற வருடம் கவிதை போட்டிக்கு வரவேற்கப் பெற்ற அனைத்து கவிதைகளின் தொகுப்பு Amazon.in இப்போது நீங்கள் படிக்கலாம். கீழே உள்ள லிங்க் தொடவும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ் கவிதை போட்டி 2023: Tamil kavithai competition 2023, Tamil kavithai Potti, Latest Tamil Kavithai Competition, Tamil poem writing competition, Poem writing competition online, Poem writing competition in India. kavithai competition 2023, Tamil kavithai competition 2023, Tamil kavithai Potti 2021, kavithai competition in Chennai, online Tamil poetry competition, Tamil kavithai Competition 2022, online Poetry competition India 2023, Tamil kavithai competition online, Tamil Poetry Competition 2023.Poetry Competition Starting Day: 08-08-2022
Poetry Contest Date: 30-07-2023
Poetry Winner Notification Date: 3-08-2023
The prize will be sent by on 15-08-2023
101 Please share your thoughts and suggestions!:
அப்பா
""""""""""
தாயின் கருவறை விட்டு வெளிவந்த
அடுத்த கணம்
தகப்பன் பிரசவித்தான்
என்னையும் என் அன்னையையும்
இன்றளவும் சுமக்கிறான்
சுமை என்று எண்ணாமல் ...
அவனோ ..
பெறு முள்ளாய் என்னை
ஒரு படி முன்னேற்ற
நொடி முள்ளாய் என் பின்னே
60படி ஓடுகிறான் ஓய்வின்றி...
அந்நியனாய் கோபிக்கிறான்
அடுத்தவனிடம்
அம்பியாய் அணைக்கிறான் என்னை கண்ட
அடுத்த கணம் ...
என் பிரிய உணவோ அவனுக்கு
பிடிக்காமல் போகிறது
அவன் பங்கும் எனதாகும்
என்பதாலே ...
இன்றளவும் எனக்கு
வலி காட்டாமல்
வழி காட்டுகிறான்
அவனை
இன்னார் அன்று
இன்னார் தகப்பன் என்ற
சொல்லால் நிறைப்பேன் ...
-Bharath
உனக்காய் சிரித்தேன் உனக்காகவே வாழ்ந்தேன் உன்னையே இதயத்தில் சுமந்தேன் உனக்காக மட்டுமே துடிக்கிறது என்னிதயம் உன் இதயம் ஏனடி என்னை ஏற்க மறுக்கிறது உதிர்ந்தால் சருகாகும் வாழ்க்கை உன்னோடு வாழத் துடிக்குது வேட்கை என்னை கொள்ளை கொண்ட அன்பு ராட்சசியே என்னோடு இணைந்திட வா இமைகளில் தேங்குது கண்ணீர் இளமையின் நினைவலைகள்... நேரங்கெட்ட வேளையில் கதவை மூடிகிட்டு என்ன வேலை அங்கே திவ்யா டான்ஸ் கிளாஸ் போக ரெடியாயிருக்கா.. அவசமாய் மூடுகையில் சிரித்தாள் என் திவ்யா மனதில்...
சாதத்தை மிச்சம் வைக்காதே என்று சொல்லுவதும் தாய் தான்
மிச்சம் வைத்த சாதத்தை உண்ணுவதும் தாய் தான்
சிந்தாமல் உண்ணு என்று சொல்லுவது தாய் தான்
சிந்திய உணவை பொறுக்குவதும் தாய் தான்
வேகமாக சாப்பிடு என்று சொல்லுவது தாய் தான்
போரக்கை யேறினால் தண்ணீர் தருவது தாய் தான்
இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...
ஒரு தலை காதல் : என் கதையிலும் நான் வேண்டாம் என்றாய் நீ... என் கணவிலும் நீ மட்டும் வரவேண்டும் என்பேன் நான்...
நீ இன்றி உறவேது.. உன் துணையின்றி சொல்லேது.. நீ இன்றி உண்ர்வேது.. நாடே உண்ணை காதலித்தாலும்.. நானும் உண்ணை நேசிக்கிறேன் என் உயிர் தமிழ் மொழியே..
அருமை
தலைப்பு:நான் யார்?
பெரியார் வாழ்ந்த மண்ணிலே
பிள்ளையார் வணங்கும்
நான் யார்?
ஊமைகள் வாழும் மண்ணிலே
உடமைகள் இழக்கும்
நான் யார்?
சிற்றெறும்பென எண்ணி
சிறுவண்டுகள்
சிறம் தூக்கும் போது
சிங்கமென எழுந்த
சிங்கார மெரினா!
கையூட்டுக்குக் கூனிகுறுகி
பல் காட்டும்
விலங்கிடையே,
உன்(மெரினா)இல் வாழும்
நான் யார்?
கட்டுத்தறியில் கவிப்பாடிய காலம்
அல்ல!
இது
கணினிவழிக் கவிப்பயிலும் காலம்!
எனினும்,
தூசிலும்
மாசுகண்ட
நான் யார்?
தட்டிக்கேட்டால் துப்பாக்கிச்சூடு
மானங்கெட்ட
நான் யார்?
தாய் காக்கத்
தவிக்கும்
நான் யார்?
நான் யார்?
தளிர்ந்த நான்
துளிரும்போது தெரியும்
நான் யார்?
-சூரியா
குழியில் விழுந்துவிட்டேன்
நீ சிரித்ததால்
உன் கன்னக்குழியில்
“விழி வழி மொழிதல்”
பாவை விழியின் அழகைப் பாடாத கவிஞன் இல்லை!
மொழி இல்லை, இவ்வுலகில்..
நானும் ஒரு கவிஞனன்று!
முன்நிறுத்த வரக்காரணம் மொழியால் இல்லை…..
“அணுஆயுதங்கள் கைக்கட்டி கடக்கும்
உன் சுடர்விழியின் அனலால்
செந்தமிழில் நனைந்தபுலவனும்
சற்றேதிகைப்பான், உன் கண்கள் பேசும் வார்த்தையால்
இமைத்திரை அசைந்தாடும் பேரலையில் சிக்கிப் புருவச்சிகரத்தில் பிழைத்தெழுந்து உரைப்பேன்
உன் முன்,
மொழியால் கவிஞனாகவில்லை
உன் விழியால் கவிஞனானேன்று”
அம்மா
நான் பேசிய முதல் கவிதையும்
நான் வாங்கிய முதல் பரிசும் உன்னால் தானே அம்மா
அம்மா என்று அழைத்தேன்
நீ ஒடிவந்து தந்த
அந்த முதல் முத்தமே
என் முதல் பரிசு
"வாக்குரிமை"
குணம் அறியாமல் பணம் கேட்டு நாம் போடும் வாக்கு!
நாளை நமக்கு நாமே போட்டு கொள்ளும் தூக்கு!
வாக்கு கேட்டு வருவோர் கொடுக்கும் லஞ்சம்
அது எத்தனை நாள் நமக்கு தஞ்சம்
பணம் கேட்டு போடும் வாக்கின் முடிவு!
உணவளித்த விவசாயிக்கு
நாமளிக்கும் அழிவு!
தமிழகமே! ஒரு விவசாய பூமி வரும் தேர்தலில் உன் முழு வலிமையைகாமி
பணத்தின் மீது நண்பா!
கொள்ளாதே மயக்கம் வாக்களிக்கபோகும்
உனக்கெதற்கு தயக்கம்
வாக்களிப்பது தமிழரின் உரிமை
நல்ல தலைவனை காண்பது தமிழகத்துக்கு
பெருமை
நன்றி!
என்னவள்
என்
துயரங்களை
தூரிகையால்
ஓவியமாக்கி
மறைத்தவள்......
என்னவள்
என்
கவலைகளின்
கண்ணீர்த்துளிகளை
கலையென
பிறர்போற்றச்செய்தவள்......
என்னவள்
என்
இமைதிறக்கா
விழிகளுக்கு
மேல்
பார்வை
வரைந்தவள்......
என்னவள்
என்
அசைவுகளை
தன்
இதயஅசைவாய்
சுவாசித்து
நேசிப்பவள்.......
என்னவள்
என்
கண்கள் பேசும்
மொழிகளோடு
தன் கனவிலும்
பேசுபவள்
என்னவள்
என்
சின்னா பின்னமான
எண்ணங்களுக்கு
வண்ணமடித்து
வெற்றியின்
சின்னமாக்குபவள்.......
என்னவள்
என்
நினைவில்
என்ன அவள்
என்றால்
என்
உயிரின் எஜமானி........
அம்மா!
நீ மட்டும் தான் நான் அழுவதை விருப்பாதவள்!!!
நான்
பிறக்கும் போது கூட என் அழுகையின் வலியை சுமந்தவள்....!
ஆனால் இன்று என் மனம் தவிப்பில் ஆழ்கின்றது தாயே!
௨ன் பாதம்தனில் முத்தமிட்டு அங்கே கண்ணீரை
நீதியாய் ஓடச் செய்ய வேண்டும்!!!...
காரணம் எனது சுமையான வலி கூட ௨ன் பார்வையில்
சுவையான நீராய் மாறும்....!!!
௨ன் அன்பில்... ❣❣❣❣
Vara level thalava
💓💓
காதல்
உனக்கென இருப்பேன் என கடற்கரை காற்றில் நீ பேசிய வார்த்தை மறந்து அழுது அனாதையாக திரிகிறது என் காதல் அதே கடற்கரையில் ....
மாற வேண்டியது என் நெஞ்சில் பதிந்த சில விஷயங்கள் என் கருத்தில்
மாற வேண்டியது என் நெஞ்சில் பதிந்த சில விஷயங்கள் என் கருத்தில்
என் எண்ணங்களில் தோன்றிய கருத்து
மாறவேண்டும்
போதையூட்டும் பொருட்கள் எல்லாம் விஷமாய் மாறவேண்டும் துண்டிக்கப்படும் விவசாயிகளின் வாழ்க்கை மாற வேண்டும் கண்டிப்பாக இருக்கும் பெண்களை தொட்டால் புதைந்து போகும் கருவியாய் பெண்கள் மாறவேண்டும்
ஆசையாய் திரிந்து போக அருமையான வாழ்க்கை மாற வேண்டும்
நிரந்தரமற்ற இந்த உலகை நிலையான
ஒரு சுதந்திர வாழ்க்கை வேண்டும் கைப்பேசிக்கு பயந்த காலம் போய் கருவிகளாக மாறி இருக்கும் மஇக்காலத்தில் கருங்கூந்தல் கோத பாட்டி கதை சொல்லி தூங்கவைத்தலாக மாறவேண்டும் பத்து வயதிலேயே பூப்பு நீராட்டு விழா நடத்துதல் மாற வேண்டும் பதினெட்டு வயதில் கல்யாணம் செய்து வைத்தல் மாற வேண்டும் அடிமையான பெண்கள் எல்லாம் அழிவு பெண்கள் ஆக மாற வேண்டும் பாரதியார் கண்ட பெண் எங்கே எங்கே என்று தேடாமல் பாரதியார் நான் தான் என்று பாரதியார் மகளாக நான் மாற வேண்டும் இயற்கை உணவு உண்டு மற்ற உணவுகள் கொஞ்சம் அடித்தட்டு மாற வேண்டும்
இயற்கை பொருளின் விலை அதிகமாக மாற வேண்டும் வேண்டும் வேண்டும் என அப்பா கடன் என்னால் சரி செய்ய வேண்டும் வேண்டும்
ராதையின் காதல்

வந்தது வசந்த காலம்
பொன் தூவும்
மழைக்காலம்
வானமென்னும் வீதியிலே
வளைய வரும்
வெண்ணிலவே
என்னை பித்தன் என்பார்கள்
ஆம் உனதழகில் மயங்காதவர்
எவரும் உண்டோ
நெஞ்சத்தை கில்லும்
நீர் நிலைகயின் நேர்த்திகள்
நிலமகளை தாலாட்டு ம்
தாய்மடியில் தவழத்தான்
வந்தாயோ வெண்நிலவே
உன் வரவினால் பூலோகம்
உயிர் வாழும்
மங்கையிவள் உனதழகில்
மயங்கி நின்றதும்
மணவாளன் வந்து கை
கோர்த்து சென்றானோ
பார் புகழும் வண்ணம்
கண்டேன் காதலை
வரவழைத்து கிருஷ்ணனை
தேடச் செய்தாய்
அம்மா
கனம் தாங்கி என்னை கருவில் ஏந்தினாய்!
மரண வலியை சில மணித்துளியில் அனுபவித்தாய்!
இரத்தம் முறித்து எனக்கு அமுதலித்தாய்!
சத்தமிட்டு அழும்போதெல்லாம் முத்தமிட்டு அனைத்தாய்!
சோர்ந்து விழும்போதெல்லாம்
என்னோடு சேர்ந்து நின்றாய்!
பொய்யான இந்த உலகில்
நான் கண்ட உண்மை நீயே
என் அன்பு தாயே...
மு.மங்கை
முயற்சி
தோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்
முயற்சியை கண்டு ஓடுவேன்
முயல் போல் அந்த வெற்றியை தொடுவேன்
காலத்தைக் கண்டு அஞ்சமாட்டேன்
இலக்கை வைத்து ஓடுவேன்
ஏறிய ஏணியை விட்டு விலக மாட்டேன்
இறைவனின் துணையோடு வெற்றியை பெறுவேன்
உன் காதனி கூட சொல்கிறது, நான்
உன் காதலன் என்று, நீ
இல்லை என சொல்லும் பொழுது
இந்த கவிதை சேர்க்கப்பட்தா
*இது வேற கொடி*
பல்வேறு முகங்கள் பலவகையான வாகனங்கள்...
மறித்து நின்றால் மதித்து நிற்க்கும் சில மனிதாள்களுக்கு போலியான ஓர் சிரிப்பு நன்றிகள்...
மசியாமல் போகும் பல மனிதாள்களுக்கும் ஓர் மனமார்ந்த நன்றிகள்...
அருமருந்தான புன்சிரிப்பை என்னிடம் பணமருந்தாக மாற்ற வைத்த என் முதலாளிக்கும் ஓர்...!
பல்லுக்குத்திக் கொண்டு வரும் பணக்காரரை பார்த்து பசியாற்றிக் கொள்ளும் பாவப்பட்ட கொடி...
எப்போதாவது உள்ளே இருக்கும் உணவை உண்டு களிப்போமா என்ற ருசியறியா கொடி...
உச்சி வெயிலும் உறை நிலை பனியுமே வந்து உச் கொட்டினாலும் சுழல்வதை நிறுத்தாக்கொடி...
கோட்டைக்காக கொடி பிடிக்காத இந்தக் கரம்..
என் வீட்டைக் காக்க கொடி பிடிக்கிறது செய்வதறியாத இந்த மனம்...
ஒவ்வொரு உணவகம் முன்பும் கொடி அசைக்கும் மாமனிதர்களுக்காக - இன்னும் பயணிப்போம்
மணிகண்டன் சுப்பிரமணியம்.
ஆம் கண்டாங்கியும் தாவணியும் கட்டிய போது கண்ணியமாக பார்த்த கண்கள் இன்று இல்லை தான்...!
பாவம் துப்பட்டாவில் என்ன துயர் கண்டயோ நீ..
உள்ளாடை தெரிய உடை உடுத்துவதில் அப்படி என்ன உடன்பாடோ..!
உடலோடு ஒட்டிய உடை உமக்கு பேரழகு தான் ஆனால் உரித்தெடுக்க நினைக்கும் உள்ளங்கள் ஏராளம்...!
அரும்புகளிலிருந்து அப்பத்தாக்கள் வரை பாவப்பட்டவர்களே இந்த ஆணியத்திடம்..!
நல்ல உடைக்கே இந்த நாட்டு நடைமுறையில்
கொஞ்சம் பதைபதைப்பு தான்..!
அயோக்கியன் இல்லாத ஆண்மகன் யாரேனும் உண்டோ?!
நாகரீகமும் தொழில்நுட்பமும் இங்கு நல்லதை தாண்டிய நல்ல தவறுக்கே...!
பார்த்து இரு..
சுற்றி இருக்கும் கூட்டம் பரிதாபப்படுவதை விட பங்கு போடவே நினைக்கும்..!
போதுமடா சாமி போதும்
இந்த மனித பிறப்பு
இத்தோடு போதும்
பெண்ணாய் பிறந்து
வாழ்வதும் கடினம்
என்று முன்னோர்கள்
கொன்றதன் காரணம் இதுவோ
காமுகர்கள் களியாட்டம்
தொடரும் இந்த பூமியில்
போதும் எனக்கு மனித பிறப்பு
மழலை என்று பாராமல்
இச்சையை தீர்க்க நினைக்கும்
மிருகம் வாழும் பூமி இது
பஞ்சம் பிழைக்க வந்தவரையும்
ருசி பார்க்கும் ஈனப் பிறவி
பிறந்த தேசம் இது
பள்ளிக்கு போனால்
மேலாடை கீழ் ஆடை என
கேளிக்கெயாக ரசிக்கிரான்
கல்லூரிக்கு போனால்
கட்டியனைக்க நினைக்கிறான்
படம் பிடிக்க பார்க்கிறான்
நான்கு சுவர் என்று சொல்லி
நாலாயிரம் இணையத்தில்
வெளியிடுகிறான்
காதல் புனிதத்தை
புரியாத சாத்தான் கும்பல்
நட்பின் உரிமையை கூட
நஞ்சாக பார்க்கிறானே
நாய் என்று சொல்லவும்
நா கூசுதடா நன்றி கெட்ட
மிருகமே
பாண்டிய ராஜ்
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
பாரத தேசம் இது என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று பாரதி சொன்னதை
அவனை புதைத்த இடத்திலேயே
போட்டு புதையுங்கள்
வல்லரசு நாடாகிறாதாம்
இந்த பாரதம் ஐயகோ
இது என்னடா உலக மகா
மிகப்பெரிய பொய்யாக இருக்கிறது
படிக்காத பாமரன் சாதி என்றான்
படித்து பட்டம் வாங்கியவனும்
சாதி சாதி என்கிறானே
என்னடா உலகம் இது
உலகம் அழகானது
அதில் மனிதன் அதிசமானவன்
அதை ரசித்து வாழ்வதை விட்டு
என்னதான் பேதமோ
மேல் சாதி கீழ் சாதி
நடு சாதினு எல்லோரும்
அந்த வயிற்றில் தானே
பிறக்கிறார்கள்
அந்த மண்ணிற்க்கு தானே
இறையாக மாண்டு போகிறார்கள்
பிறகு ஏன் தான் இந்த சாதி பற்று
இந்த நாடு இப்படியே இருப்பின்
நாடும் நாட்டு மக்களும்
நாசமாகவே பொகட்டும்
பாண்டிய ராஜ்
ஒரு உயிர்காக மறு உயிர் துடிக்கும் உன்னை காணாமல் விழிகளும் உறங்க மறுக்க தனி தனியே தடுமாறிய நாம் திருமணத்தால் உனக்குள்ளே நானும் எனக்குள்ளே நீயும் திசை மாறி போனோம்
காதலும் நம்மில் கொஞ்சி விளையாட காமமும் நம்மில் காணாமல் போக நட்பெனும் பந்தமும் நம்மிடையே உண்டாக கண்டேனே இம்சைகள் செய்யும் குமரி உன்னை குழந்தையாக உன் மடினில் தவழ்ந்தேன் மறு குழந்தையாக மாறாத காதல் முடி உதிர்ந்து வயது முதிர்ந்தாலும்
உன் தோல் சாய்ந்தேகிடப்பேன் இறக்கும் வரத்தையும் பெறுவேன்
01. பேனையும் பென்சிலும்
சிறு வயதில் எழுதி எழுதி
அழித்தோம் பென்சிலில்...
இப்போது பேனையால் ௭ழுதுகிறோம்
ஆனால் முன்பு போல்
அழிக்க முடிவதில்லை...
சிறு வயதில் பிழைகளை அழித்து மாற்றிடலாம்...
பெரியவனானால் அழிக்க அல்ல மறைக்க கூட முடியாது....
இதை உணர்த்தவே
படைக்கப்பட்டனவோ
பென்சிலும் பேனையும்...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
01. பேனையும் பென்சிலும்
சிறு வயதில் எழுதி எழுதி
அழித்தோம் பென்சிலில்...
இப்போது பேனையால் ௭ழுதுகிறோம்
ஆனால் முன்பு போல்
அழிக்க முடிவதில்லை...
சிறு வயதில் பிழைகளை அழித்து மாற்றிடலாம்...
பெரியவனானால் அழிக்க அல்ல மறைக்க கூட முடியாது....
இதை உணர்த்தவே
படைக்கப்பட்டனவோ
பென்சிலும் பேனையும்...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
02. ஆசான்
என்னையும் ஓர் ஆசானாய் வளரந்திட வாழ்த்தினீர் அன்று...
உம் அடுத்த வாரிசு என
என்னைக் கூறினீர்...
அன்று... ஆசிரியத்தொழிலில் பிடிப்பில்லாக் காலம்...
விரும்பாமலே கால் வைத்தேன்
கல்லூரி வாசலில்...
இன்று ஆசானாய் மாறிட என்னுள் எத்தனையோ மாற்றங்களை செய்துக் கொண்டே இருக்கிறேன்...
ஆனாலும் சிலருக்கு நான்
மாற்றிக்கொண்ட மாற்றங்கள்
தெரிவதில்லை போலும்...
ஆசிரியப்பணிக்கு தகுதி இல்லை என்கிறார்...
ஆனால் என்னை ஆசிர்வதித்த ஆசான்களே.... நான் தயாராகி விட்டேன்...
ஆசிரியப்பணிக்கு... உம் போல் சேவை புரிந்திட...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
03. கல்லூரி மைதானம்
வெண் புறாக்கள் போல்.... வெள்ளை உடையில் அலங்கரித்த நாட்கள்
அதி காலையில் எழுந்து
உசைன் போல்ட்டை விடவும் வேகமாய் ஓடி வந்து...
உனை தரிசித்திட நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்ட நாட்கள்
பீட்டி ஆசானைக் கண்டால்
கால்கள் மின்னல் வேகம் எடுத்த நாட்கள் மறவாது....
வாழ்வையே வெறுத்ததாய்
உணர்ந்த நாட்கள்....
மகாவலி மைதானமே
மறவாது ஒரு போதும்...
நீ தந்த அனுபவங்களை
என் நெஞ்சம்...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
04. நானும் விடுதியும்
இன்று தனியாய் உறங்குகின்றேன்
சாப்பாட்டு தட்டு அருகில் இருந்தும்
சாப்பிட மனமில்லை
அருகில் பல பேர் இருந்தும்
தம்பி இல்லையே என ஏங்குகிறது
என் நெஞ்சம்...
ஆனால்...
அன்னை அருகில் உறங்கிய நாட்கள்
அன்னை ஊட்டி விட காத்திருந்த நாட்கள்...
சண்டை போட தம்பியை சீண்டி விட்ட நாட்கள்
அண்ணனின் முன்னும் தந்தையின் முன்னும் அப்பாவியாய் நடித்த நாட்கள்
மீண்டும் வராதா....?
காலமே விரைந்திடு....
விடுதியிலிருந்து வீடு சென்றிட...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
06. நூலகம்
நான் கேள்வி பட்டதோ ஆறறிவு
ஆனால் ஆயிரக்கணக்கான அறிவைக் கொண்டவன் நீ...
கலை முதல் கண்டுபிடிப்பு வரை
கவிதை முதல் காவியம் வரை
கண்ணெட்டும் தூரம் வரை
வைத்திருக்கிறாய் உன் மொட்டுக்களை....
யார் எடுத்து பிரித்தாலும்
பூ மலர்ந்து தேன் சிந்துவது போல்
நீ மலர்ந்து அறிவு தருவாய்....
அறிவுசாகரமே.... நான் விரும்பும் தளமே...
நம் நூலகமே... நாம் உனை நாடிடுவோம்... அறிவு தனை பெற்றிடுவோம்....
A.F.F. Saalima (shalu),
293/A,
Medihena,
Kolabissa.
08. காலைக்கீதம்
கீச்சிடும் குருவிகளின் நாதம்
என்னை துயில் எழுப்புகிறது....
எந்நாளும் கீச்சொளிகளை
ரசித்திடவே எழுந்திடுவேன்...
அவை பாடும் கானம்
என்ன ராகம் என்று புரியவில்லை...
ஆனால் ஹரிஹரனின் பாடலை விட
மனதிற்கு இதமளிக்கிறது
என்ன ஒரு இனிமை
மெய் மறந்தே போகின்றேன்....
இனிய காலைப் பொழுதுகளே....
குருவிகளின் பாடலை தந்தமைக்கு நன்றி....
கடவுளின் படைப்பில் பாடிடும் பறவைகள் நீங்களும் அதிசயமே...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
09. என் இனிய ஆசான்
குடு குடெனவே நடந்திடுவார்
காலம் தாழ்த்தாது வேலை செய்திடுவார்
எங்களுக்கும் அதையே சொல்லித்தருவார்
கண்டிப்பாய் இருப்பார்
கரிசணையும் காட்டிடுவார்
அவர் ஓர் பார்வை பார்த்து சிரித்தாலே போதும்
தாயின் முத்தம் பெற்ற
திருப்தி வரும்....
என் ஆசானே... உம்மை
என் ஆசான் என அழைப்பதில்
அகம் மகிழ்கிறேன் நான்...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
10. கனவாய் மாறிய நிஜம் நீ
கனவாய் மாறிய நிஜம் நீ
உன்னுடன் ஒன்றாய் பயணித்த அந் நாட்கள் என் கண்ணில் வந்து வந்து போகிறது....
எப்போது என்னவனாவாய் என்று
நினைத்தேன் அப்போது
உன்னிடம் என் அன்பை சொல்ல வந்தேன்....
ஆனால் நீயோ மணமகன் கோலத்தில் தரிசனம் தந்தாய்...
இப்போது நீ இன்னொருத்தியின் சொந்தக்காரன்
அப்போதும் இப்போதும் கனவாய் மாறிய நிஜம் நீ....
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
11. ஞாபக அலைகள்
தோழா வா பழங்கதை பேசிட
சீதா தேவியாம் நம் அரண்மனை
காக்கை கூட்டம் போல
ஈரேழு பேர் நாம்...
நான்கே அறைகளில்....
மூன்றாம் மாடியையே
ஆக்கிரமித்தோமே....
கொய்யா மரத்திலேறி பழம் பறித்தோமே...
உணவைக்கண்டால் ஒட்டு மொத்தமாய் கூவிட்டோமே...
சில இரவுகளில் பயங்கர சத்தத்தில்
தூக்கம் தொலைத்தோமே...
பின் வாசல் வழியாய் காடுமுண்டு
அதிலே விறகு உடைத்து
ஆளில்லா அறையொன்றிலே...
கல் வைத்து விறகு மூட்டி
பீங்கானிலே உரொட்டி சமைத்து சாப்பிட்டோமே...
இணைப்பாடவிதான செயற்பாட்டிற்கு
செல்ல மணமில்லாது அறைகளுக்குள்ளே ஒளிந்தோமே...
அலுமாரிக்குள் ஒழிந்து
பலகை உடைந்து போனதே...
படி வழுக்கியும் வீதியில் ஓடியும்
கால் பிரண்டு கை பிரண்டு
ஆழ் யோசனையில் சென்று
படியேறி முழங்கால் வீக்கமெடுத்து
பல நால் அயர்வில் மயங்கியும் வீழ்ந்து
பூச்சிகளும் தேடி தேடி கடித்து
இப்படி பல சோக வரலாறுமுண்டு...
மணி ஆறு முப்பது தாண்டி விட்டால்
நம் ஒளிபரப்பு சேவையில்...
பருப்புதான் எனக்கு பிடிச்ச கறியாம்...
அதை திண்ண திண்ண எச்சில் ஊறும் பாரு... பாடல் ஒளிபரப்பாவதும்
சாப்பிட்டு வந்த பின்னும் பசிக்குதென்று பிஸ்கட் தேடுவதும்
நினைவிருக்கிறதா...?
சந்தோசங்களையும் சோகங்களையும்
பார்த்திட்ட நம் அரண்மனை...
நண்பா நினைவிருக்கிறதா...?
அது ஒரு காலம்...
இப்போது பல அறைகளாயும்...
சில மாடிகளாயும்...
சில விடுதிகளாயும்...
பிரிந்து போனோமே...
நண்பா நம் நினைவுகள்
என்றும் அழியாது...
பசுமை நிறைந்த நினைவுகளாய்
நிலைத்திருக்கும்....
நம் நெஞ்சங்களில்...
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
2020. 03. 07
11. 01. P. m.
12. அன்பின் ஏக்கம்
நீ என்னை மணந்து கொண்டால்...
உன்னை தினம் தினம் கிறங்க வைப்பேனடா....
உன் நினைப்பே என்னை
ஏங்கித் தவிக்க வைக்குதடா....
இதிலும் ஓர் சுகம் ஆளுதடா....
௭ன் மன்னவனே எப்போது வருவாய்
என் முன்னே....
உன்னை மணவரையில் சந்திக்க
தவமிருக்கும் இவள்
உன் அன்பில் நனைய காத்திருப்பவள்....
A.F.F. Saalima (Shalu),
293/A,
Medihena,
Kolabissa.
24.03.2020
5.44 am
13. மீண்டும் வருமா...?
நீ என்னோடு கதைத்த
நொடிகள் மீண்டும் வருமா...?
அன்று மௌனம் காத்த நான்...
இன்று கதைக்க துடிக்கிறேன்...
நீ சொன்ன அன்பு மொழிகளுக்கு
இன்று பதில் சொல்ல நினைக்கிறேன்...
ஆனால் இன்று என் பதிலைக் கேட்கும் மன நிலையில் நீ இருப்பாயா...?
நீ கதைத்த நொடிகள் மீண்டும் வந்தால்...
உன்னை என் தலைவனாய் ஏற்றுக் கொள்வேன்...
A.F.F. Saalima (shalu),
293/A,
Medihena,
Kolabissa.
வணக்கம். நான் சில நாட்களுக்கு முன்பு "அப்பாவுக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் ஒரு கவிதை அனுப்பினேன் தங்களை அது சென்றுஅடைந்த என்று தெரியவில்லை. கவிதை வந்தால் கவிதையில் உள்ள நிறை குறைகளை தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.நன்றி
பெற்றோர்...
உறவாக மட்டும் இல்லாமல் தம் உயிர் கொடுத்து நம்மை உருவாக்கி,
உயர்ந்து நிற்க சொல்லும்..உன்னதர்கள்
Inspirational words..
அருமை 😍
நன்று
பள்ளி இறுதிநாள்
அமைதியாக இரு
என்ற குரல்
ஆலோசனை வழங்குது
பேசிய குரலும் மெளனம்
காக்குது
கரும்பலகையும் பிரிவை கண்டு
கறுப்பு மழை பொழியுது
பிரியும் தருணம்
அமைதியான மெளனம்
மாணவருக்கு ஒரு வருட
பிரிவு
ஆசிரியருக்கு வருட வருட
பிரிவு
கண்ணீரும் கறைந்து போக
நினைவுகளே நிலைத்து நிற்க
விடை பெற்று செல்வோம்
வெற்றி பெற்று வருவோம்
இயற்கை என்னும் அழகியே!
இயற்கை என்னும் ஓவியமே!
உன் அதிசயம் என்ன?இவ்வுலகை
மயக்கும் ரகசியம் என்ன?
உன்னை வர்ணிக்க வார்த்தைகளே
இல்லை, இயற்கை காவியமே!
நீ தந்த "மழை" குளிர்ச்சியானது...
நீ தந்த "வெயில்"இதமானது...
இயற்கையே உன்னை காணும்போது
-என் உள்ளம் பரவசமாகிறது
என் மனதைக் கவர்ந்த
இயற்கை என்னும் நாயகியே!ரசித்துக் கொண்டே இருக்கலாம்
உன் அழகை.... நீ "தென்றலாய்" வீசும் போது நான்
-சிலிர்த்துப் போகிறேன்!
மண் வாசனைக்கு; "மழையைத்"
-தந்தாய்
நிழலுக்கு; "மரத்தைத்" தந்தாய்... அமுதம் போன்ற ;"கனிகள்" தந்தாய்...
அழகிய மலர்களில் ருசியான
-தேனைத் தந்த
இயற்கை கண்மணியே!
நீ "மனித வாழ்வின் வரம்"
அழகிய காட்சிகள் பல கொண்டு
மனதை ஈர்க்கும் இயற்கையே...
உன்னை நான் நேசிப்பதால் என்னவோ!உன்னை கவிதையாக வர்ணித்து விட்டேன்...!
பா.மஞ்சு பார்கவி
நன்றி
நன்றி . நல்ல அறிவிப்பு . கலந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன் .
தாயின் அன்பு!!
தாயின் கருவறையில் உயிர் பெற்றேன்,
தாயின் மார்பிலிருந்து பால் குடித்து அவள் வாங்கும் சுவாசம் பெற்றேன்
தாயின் மடியில் உருண்டு விளையாட இடம் பெற்றேன்.
தாயின் அரவணைப்பால் வளர்ந்தேன்.
இன்று அவளின் அன்பு எனக்கு குழந்தை போல் தெரிகிறது.
ஆனால்!!
அவள் செய்ததை நான் செய்ய இயலாமல் நிற்கிறேன்.
கேளடா மானிடா..!
வேடிக்கையே பார்ப்பேன் இறுதிவரை என்றால்
வேதனை மட்டுமே பரிசாய் விழும் நமக்கு....
வேள்விகள் எழும்போது கேள்விகள் கேளுங்கள்...
புகை மூட்டியவர் முகம் திகைப்பில் நிற்கும் மறு கேள்வி கேட்பதற்கு.....
--கார்த்திக்
அமுதம் பருகினால் மரணம் இல்லை
என்பார்கள்!!!!
அவர்கள் அறியா????
காதல் கொண்டவர்கள் மரணம்
கூட அறியா????
என் காதலியின் காதலை கண்டு
மரணம் கூட அச்சம் கொள்ளும்
அவளை கண்டு!!
இன்றும்.
அவளுக்காக அவன்......
விவசாயமும் விஞ்ஞானமும்
இறைவன் வரைந்த அழகான ஓவியம் உ"..
அதில் நீலம் கொடுத்து நீர் அளித்தான்...
பச்சை கொடுத்து பசுமரம் அளித்தான்..
ஆனால் உழவு கொடுத்து தான் "உயிர்" அளித்தான்..
அளவு கடந்து உயிரை நாம் அழி(ளி)த்தால்
மார்ஸ்க்கு செல்வதை விட வேறு மார்க்கமில்லை
அன்னை
எனக்கு உயிர் கொடுத்த
அன்னையே..
உன் உதிரம் கொண்டு
உயிர் கொடுத்தாயே
பத்துத் திங்கள் உறக்கம் கலைத்து
எனக்காக கண்விழித்தாயே
தூக்கத்தில் கூட
தூங்காமல் எனையே
நினைத்திருப்பாயே
நான் உனக்கு கொடுத்த
வலிகளோ அதிகம் அம்மா
அத்தனையும் எனக்காக
பொறுத்தாயே
பொறுமையின் சிகரம்
யாரென்று என்னைக் கேட்டால்
தாயென்று உனைக் கூறுவேனே
இவ் உலகில் நீயின்றி
நானில்லை தாயே
இறைவனே உனை வரமாக
கொடுத்தாலும்
அந்த இறைவனிற்கும்
கிடைக்காத
வரம் நீ அம்மா....
நன்றி.நல்லதொரு வாய்ப்பு கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
சில தினங்களுக்கு முன்பு'எழுத இயலா சொல்'என்ற கவிதை ஒன்று அனுப்பினேன் வந்தடைந்துள்ளதா என்று தெரியவில்லை.அதனால் கவிதையின் நிறை குறைகளைக் கூறினால் நன்றாக இருக்கும்.நன்றி
அக்கா தம்பி உறவு சிறு வயதில் உன்னை நான் தூக்கி கொஞ்சவில்லை
நீ என் அம்மாவை என்னிடம் பிரித்தாய் நினைத்து
சிறுவயதில் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம்
நான் பிரியும் போது உன் கண்களில் வரும் கண்ணீர்
நீ எனக்கு கொடுத்த சீதனம்
கார்க்காலம் என்பதால் காற்றும் மழையும் கூட காதல் கொள்கிறது!!!.எனக்கோ போர்க்காலம் இங்கே!என்னவள் என்னுடன் இல்லாததால்!!!.கார்மேகம் கூட மறைப்பது போல மறைத்து தன் காதலை மழையாய் பொழிந்து விடுகிறது !!...என்னவளோ!கருந்திரையில் ஒளிந்துகொண்டே!என்னை ஏமாற்றி விடுகிறாள்!!..ஒரே குடையில் அவளும் நானும் ஒருசேர காதல் செய்யும்!!..அற்புத தருணத்தின் நினைவில்!!கனவின் காதலில் !!வகுப்பறைக்காதலானாக!!!
கார்க்காலம் என்பதால் காற்றும் மழையும் கூட காதல் கொள்கிறது!!!.எனக்கோ போர்க்காலம் இங்கே!என்னவள் என்னுடன் இல்லாததால்!!!.கார்மேகம் கூட மறைப்பது போல மறைத்து தன் காதலை மழையாய் பொழிந்து விடுகிறது !!...என்னவளோ!கருந்திரையில் ஒளிந்துகொண்டே!என்னை ஏமாற்றி விடுகிறாள்!!..ஒரே குடையில் அவளும் நானும் ஒருசேர காதல் செய்யும்!!..அற்புத தருணத்தின் நினைவில்!!கனவின் காதலில் !!வகுப்பறைக்காதலானாக!!!
அன்பின் உருவமே ஆசையின் நாயகனே இன்பமாய் என்னை நெருங்க ஈசல் என என்னை நோக்கும் உன் பார்வையில் உள்ளம் எல்லாம் படபடத்து ஊஞ்சலாய் ஆடுதடா எங்கிருந்து வந்தாய் என எண்ணுவதற்குள் ஏற்றமென மனதினுள் நின்றாய் ஐயம் ஏதும் இல்லாவிடில் ஒற்றை வார்த்தையில் கூறி விடுவேன் ஓராயிரம் கவிதைகள் உனக்கானவையாக������
என்னுடைய கண் இமைகள் சிமிட்டும் அந்த ஒரு நிமிடத்தில்குட உன் முகம் என் முன்பாக தோன்றுதடி....அவ்வாறு உன் முகத்தை பார்த்தவுடன் என் மனம் மகிழ்ச்சியின் மூச்சடைத்து தவிக்குதடி உன்னை நேரில் காண!!.
மேகங்களை தொட்டு உடுத்தா..
பாலாடை..
நான்!
வயல்களை வகையறியா..
பச்சைப்பிள்ளை..
நான்!
கலங்கம் இல்லா..
நிலவு..
நான்!
சொல்லை மெல்லும்..
மழலை..
நான்!
காணா கனவின்..
கவிதை..
நான்!
உறங்கா இரவின்..
ஓசை..
நான்!
புரியா புதிரின்..
விளக்கம்..
நான்!
உணரா மொழியின்..
அர்த்தம்..
நான்!
வெளிச்சம் குறையா..
மின்மினி..
நான்!
செவி இல்லா..
இசை..
நான்!
பிழை இல்லா..
எழுத்து..
நான்!
துளிர் இல்லா..
கிளை..
நான்!
சுவை இல்லா..
அணி..
நான்!
விலை இல்லா..
விகிதம்..
நான்!
கண்ணில் படா..
காற்று..
நான்!
எண்ணில் அடங்கா..
கனவு..
நான்!
இம்மாய உலகின்..
உயிர்ஓவியம்..
நான்!
- பால நிவேதா. இ
கவிதை போட்டி.
( பூ.சா.கோ.கலை அறிவியல்
கல்லூரி , கோயமுத்தூர்)
Nambikai earundhal un valvil vatriparamudium. Nala nanbargal earundudal. Un valvil munaramudium earutil earundu allunduva un athirkalathi noki odiva. Thankyou. Writien by. A.karthickraja
நட்பு
துடிக்கும்
இதயத்தில்
கேள்வி கேட்டால்,
கண்ணீர் வடிக்குமே
நட்புக்காக.........
BY
JPK-ERODE
தாய்மை
வந்தவரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது பழமொழி
வந்தவரின் வாழ்வை வலுப்படுத்தும் வளநாடு என்பது புதுமொழி...
உம்மிடம்
வந்தவரின் வாழ்வினை வளர்ச்சிப்பெற முயல்பவள் நீ...
வாழ்க்கைத் துணைவரைத் தாெழில் முனைவராய் ஆக்கியவள் நீ...
விலைச் சொல்ல முடியாத புன்னகைச் சிரிப்பின் பாசமுகம் நீ...
வீழ்ச்சியில் வருபவரின் தடைக் கற்களை படிக்கற்களாய் மாற்றியவள் நீ...
வாழ்வுக்கு வழித்தேடி வருபவருக்கு வழித்துணையாய் வழிகாட்டியவள் நீ...
சவூதி முதல் பன்னாட்டு பரம்பரியத்தையும் பட்டியல் பாேடுபவள் நீ...
வெற்றிகளின் ஏணிப்படியாய் வாகைசூடும் வெண்முக உள்ளமாய் இருப்பவள் நீ...
வேதங்களையும் செந்தமிழையும் படித்து பகிர கிரியா ஊக்கியானவள் நீ...
வேடிக்கைப் பார்க்கும் உலகத்திலே வேலையாட்களிடமும் வேலையின் வேளை நீ...
வைகறையிலே எழுந்து கணவருடன் இணைந்து
வலையொலியில் கருத்து பகிருபவள் நீ...
அறிவாெளியாய் அறிவுக்கே ஆரம்பமாய் அகல்விளக்காய் இருப்பவள் நீ...
வரைவோலையில் மகிழ்ந்து விருந்தோம்பலின் அரசியாய் இருப்பவள் நீ...
வௌவாலின் இருப்பிடம் இருள்சூழலும் எம்
வெளிச்சத்தின் பிறப்பிடம் நீ....
என்றென்றும் நம் அனைவரின் குடும்பத்தின் அடிவேராய் இருப்பவள் நீ..
அன்னை என்றாலே அரவணைப்பு நீ..
அன்பின் மகத்துவம் அக்கறையே நீ..உன்
தாய்மைக்கு எந்த அளவுமில்லை...
நன்றி.
கவிதை
தலைப்பு : முயற்சி
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட படிகள்
அதின் எண்ணிக்கை அதிகமானால் அனுபவசாலி
எண்ணிக்கை குறைந்தால் நீ அதிர்ஷ்டசாலி
வீழ்கிறோம் என்று நீர்வீழ்ச்சி கலங்குவதில்லை
வீழ்ந்தாலும் நதியாக ஓடுவேன் என்பதே முயற்சி
தோற்றுவிட்டேன் என நினைப்பது வெற்றி அல்ல
தோல்வியையும் வெல்வேன் என்பது முயற்சி
அலைகள் அடிப்பதால் கடல்மண் கரைவதில்லை
வாய்ப்புகள் தடையுற வெற்றி தூரம்போவதில்லை
திரும்பச் செய்வோம் மீண்டும் மறுபடியும்
எறும்பு ஊறக் கல்லும் கரைந்து துகள்களாகும்
எலிகள் குடைய மலையும் சிறு குன்றுகளாகும்
இயன்றவரை முயற்சி செய்தால் - முயன்றவரை முன்னேறலாம் வாழ்க்கையில்.........!
இப்படிக்கு
முத்து செல்வன்
கிளம்பும் அவசரத்தில்
அரைவயிறுவரை மட்டுமே காலை உணவு உண்டு..
மனைவியின் முகத்தை கூட முழுதாய் பார்த்திடாமல்...
சம்பள உயர்வுக்காக ஓடும் அலுவலகஸ்தர்களும்..
சகுனம் பார்த்து சாமி கும்பிட
கிளம்பும் குடும்பங்களும்..
அவர்களை சவாரி ஏற்றி செல்லும்
ஆட்டோ ஓட்டுநர்களும்..
கோடியும் சேர்ந்த பணத்தில்..
கோடீஸ்வர இறுமாப்புடன் சொகுசு காரில் பயணிக்கும் வஸ்தாதுக்களும்
வழிப்பாட்டு மணி அடிப்பதற்குள்.. வளாகத்துள் நுழைந்திட வேண்டுமென.. மிதிவண்டியை வேகமாக நகர்த்தும்
பள்ளி மாணவர்களும்..
சாலையில் ஸ்தம்பித்து..
அனைவரது எண்ண்வோட்டமும்..
பூஜ்ஜிய காந்த புலத்தில் மறைந்துபோக...
மனிதம் மட்டும் மேலோங்கி நின்றது..
ஸைரன் அலர காற்றை கிழித்துகொண்டு விரைந்த
ஆம்புலன்ஸிற்கு
வழி விட்ட பொழுது..!!!
... நட்பு...
ரோஜாவிற்கு அடையாளம் இதழ்
என்றால் எங்களுக்கு அடையாளம்
நட்பு....
எங்கள் நட்பின் அடையாளம் கண்ணீரை
துடைப்பது அல்ல.
கண்ணீர் வராமல் தடுப்பது
தான் எங்கள் நட்பு...
குடும்பத்தில் உண்டான கவலையை
மறக்க கிடைக்கும் சந்தோஷம்
நட்பு என்ற கூட்டத்தில்
உரையாடும் போது
மட்டுமே....
இன்று பார்ப்போம்
நாளை பார்ப்போம் என்ற
ஏக்கத்துடன் நம்
நம் நட்பின் கண்கள்...
அம்மா'
அம்மா என்று சொன்னாலே கண்ணீரும் நின்று போகும்...
அம்மா உருகாத நெஞ்சும் உருகி போகுதே உன்னை நான் நினைக்கையில்...
காணாத ஏக்கமும் அடங்கிப்போகுதே அம்மா உன்னை நான் கூப்பிடையில்...
நான் இந்த பூமிக்கு வரும் முன் என்னை பூ போல் சுமந்தவள் அம்மா நீ..
உன் பசியை கூட பொருட்படுத்தாமல் உன் ரத்தத்தை பாலாய் கொடுத்த அமுதம் நீ...
பிள்ளையின் முகத்தைக் கண்டே பசியை அறியவும் பிறவியும் நீ..
யார் தவறு செய்தாலும் பழிவாங்கும் இவ்வுலகில் .பாவி நான் ஏதும் சிறு தவறு செய்தால் கூட அதை மன்னிக்கும் குணம் கொண்டவள் நீ ஒருவளே அம்மா...
இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் அம்மா என்ற ஒரு உயிருள்ளதனால் மட்டுமே உயிர்வாழ்கின்றது...
அம்மா உன் மேல் நான் சில நேரம் கோபம் கொண்டாள் என்னை அறியாமலே உன்னிடம் பேசி விடுகிறேன்...
கோபம் கூட உன்னை எதிர்க்க முடியாமல் தோற்றுப் போகிறது அம்மா உன் பாசத்தில்...
உன் பிள்ளை நான் ஏதும் சோகத்தில் இருந்தால் உன் மனம் கலங்குதே அம்மா...
நான் உன்னிடம் ஒன்று கடனாய் கேட்கிறேன்...
அம்மா பத்து மாதங்கள் இருந்த உன் வயிற்றில் மீண்டும் ஒருமுறை குழந்தையாக இருந்திட ஆசை...
ஏதுமறியாத பிள்ளையாக உன்னிடம் கொஞ்சி விளையாட ஆசை...
மீண்டும் உன் அரவணைப்பில் தாலாட்டு நீ பாட
என் கண்கள் மூடி நான் தூங்கிட
இப்பவும் ஆசையாகவே இருக்கிறது அம்மா...
கவிஞன்
தஞ்சை சரோவ்
Unnai yaar enpathi
Unarthi.... Ulagai verum kanavaga poipithu... Katpanai kootil unnai paravaiyakki....
Thinam unnai kollai kollum.... Valigal pala irupinum avalin oru paaravail
Palan kandu..... Unai thinam aalum mana
Kadawul kadhal.... Kadhal...
அம்மாவை நான் திட்டி இருக்கிறேன்,
அம்மாவும் என்னை திட்டி இருக்கிறாள்,
எத்தனை கோபத்தில் அவள் இருந்தாளும்
என்னிடத்தில் அந்த கேள்வி கேட்க அவள் மறந்ததே இல்லை ஆனால்
அந்த கேள்விக்கு அவள் அதிகம் பொய்களையே சொல்லி இருக்கிறாள்
.
.
.
அந்த கேள்வி சாப்பிட்டாய ப்பா ?
ஹைக்கூ கவிதை
தலைப்பு: காதல்
கனவில் பேசும் இதழியிலே
உன்னை இழுத்து கொள்வேன்
நினைவிலே
பனியில் உருகும் நீரிலே
நாம் நனைந்து செல்வோம் இரவிலே
ர.குகன்
உன்னக்குள் இருந்த என்னை பார்த்து கொண்டாய்
சிப்பிக்குள் இருக்கும் முத்தை போல
உனக்குள் இருந்து உன்னை பார்க்க நானும்
காத்து கிடந்தேன் உன்னுள் இருந்து வெளிவர நினைத்து ,
அந்த நேரமும் இனிதே வந்தது - உன்னுள்
இருந்து வெளி வந்த என்னை பார்க்க மறுத்தாய் நான் பெண் என்ற காரணத்தால் , கடவுளை வேண்டுகிறேன் அடுத்த பிறவியிலாவது
என் அன்னை நினைக்கும் ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று -
இப்படிக்கு
* உன்னால் உயிரழந்த பெண் குழந்தை *
இன்றைய சமுதாயம்
என் வாழ்க்கையை எனக்கே விற்பதல்லவா
இன்றைய சமுதாயம்
மாற்றத்தின் ஆதாயத்தால் பிறந்ததே
மனித சமுதாயம்
மாற்றத்தையே அழிக்கும் அறிவைத்
தேடி அலைகிறது
ஆரறிவு பெற்ற மனித சமுதாயத்தை உயிரற்ற
பணமோ ஆள்வது
பகுத்தறிவு பெற்ற பச்சோந்திகளால் இச்சமுதாயம்
முகவரி அற்றுப் போகுமே...
காதல் வலிகள்
காதல் என்னும் கல்லை
கடலில் தூக்கி எறிந்தால்,
கண்டுபிடிக்க, கடலில் குதித்தேன்.
தேடினேன் கிடைக்கவில்லை,
கல் மட்டும் அல்ல. நானும்.
அருமை
தொலை தூர உறவை இணைக்க வந்த
தொலைபேசி உறவுகளையே
தொலைத்துவிட்டது.
Vignesh
க ொரோனா.
தொடக்கமும் இன்றி,
முடிவும் இன்றி
முற்றுப்புள்ளி அன்றி
கேள்விக்குறியாய்
எம் வாழ்வை க ொரோனா
எனும் கொடிய
முந்தானையில் முடிச்சிட்டது
யார்......
விடையில்லா இக் கேள்விக்கு
விடையளிக்க
விலை மதிப்பில்லை
உயிர் ஒப்படைக்கப்பட்டது
கொரோனா எனும்
பிணத்தின் கையில்..
யாரும் பதிலளிக்க
முடியாத
இக் கேள்விக்கு
பிணமே பதில்
கூறட்டும்.....
உண்மை
Super
Anaithu kavithai kalum arumai
ஒளியின் தேடல் உன் விழியில் முடிந்தது !
பூவின் தேடல் உன் நிறத்தில் முடிந்தது !
குயிலின் தேடல் உன் குரலில் முடிந்தது !
குணதின் தேடல் உன் அகதில் முடிந்தது !
வில்லின் தேடல் உன் புருவில் முடிந்தது !
தேனின் தேடல் உன் எச்சில் முடிந்தது !
மருந்தின் தேடல் உன் நகைபில் முடிந்தது !
வனபின் தேடல் உன் படைப்பில் முடிந்தது !
தலைப்பு - காதல் !!!
வாழ்க்கை.
நாட்களும் அமைதியாய்
நகர்கிறது...
என் மௌனத்திற்கு மறுமொழி
பேசாமல்...
இது theriyaama yen உணர்ச்சிகளை share chat post panniten 😭😭😭😭😭😭😭😭😭😭😭yen kavidhay idhil post saidhaal print seyveergala at least one 🙄please
Superb. All poetries are super. but especially Bharath anna ur appa poetry was heart melting in each lines.thank you so much.keep it up to all.and again thank you so much.
கடைசி வாக்கியம் அருமை நண்பா
சிறந்த சிந்தனைகள்
சிதைந்தாலும்
சிதைவுகள் கூட
சிலப்பதிகாரம் தான்!
- ம. டிலோஷனி
வாழ்வேன் உனக்கென...
தனிமையிலே நான் தவிக்கின்றேனே கொஞ்சம் திரும்பி பார்ப்பதுவே...
தானே தரை மேல் தழுகின்றேனே அந்த நிமிடத்திலே...
அடியே நீ கொல்லாதே..
சிரித்தே எனை வெல்லாதே..
அடி உன்னை கண்ட நிமிடமே தொலைந்துவிட்டேன்...
என்னை நானே எங்கோ தேடுகிறேன்...
சின்ன சின்ன ஆசை வைத்திருந்தேன் உன் மேலே...
சின்ன சின்ன கோபம் வைத்திருந்தேன்.!?
நீ எனை தீண்டிய நிமிடமே சாகிறேன்...
பார்வையால் பார்த்ததும் எங்கோ நான் போகிறேன்...
உன்னை கண்டதும் என் மனம் துடிக்கும் அடி நில்லாதே...அது நில்லாதே...
நெஞ்சின்னுள்ளிலே நீ நுழைந்து விட்டாய்...
அடிநுழைந்து விட்டாய்...
என்னை இழந்து விட்டேன்...
விடியாத வானம் உனக்காக விடியும்...
மடியாத நானும் உனக்காக மடிவேன்....
தங்கள் கவிதை மிகவும் சிறப்பாக உள்ளது
arumai sirappu
arumai
இயற்கை
உலவும் இங்கு பலவும் இயலென
உயிரும் மெய்யும் உடனுறைவதும் இயலென
கயலும் வயலும் பெயலும் இயலென
கன்றும் குருத்தும் விளைவதும் இயலென
தழலும் நிழலும் சுழலும் இயலென
எழலும் விழலும்எரியவன் செயலென
கீ ழ்க்கை கிழக்கென மேற்க்கை மேற்க்கென
உதிப்பதும் சிவந்தே குதிப்பதும்
குருவியும் அருவியும் குன்றிடத்து சேவலும்
குயிலும் மயிலும் கூவிட நடனமிட
தென்னையும் பனையும் வளர்ந்த நிலையும்
தென்றலும் புயலும் எதிர்வினை ஆற்றலும்
சலசல ஆற்றில் இன்னிசை யாகும்
அழகிய குயிலின் மெல்லிசை தானும்
பண்ணமைதிடும் பாங்கும் தானே இயலென
SUPER
EAN KARUTHURAIGAL PADHIVAGAVILLAI
arumai kavithaigal
கருத்துரையிடுக