வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24/8/24
குழந்தைத் தொழிலாளி
தேய்ந்த தோள்களிலே சாய்க்கும் சுமைகளுண்டு.
தள்ளாடும் தேகத்தை பந்தாடும் வலிகளுண்டு.
கல்லோடும் மண்ணோடும கரகாட்டம் நாளுமுண்டு.
கயிறோடும் பயிரோடும் சதிராடும் ஆட்டமுண்டு.
அனலோடும் புனலோடும் சடுகுடு ஆட்டமுண்டு.
கந்தகத்தில் குளியலுண்டு காலத்தின் அலங்கோலம்.
கால் வயிற்று கஞ்சிக்கு காடு மலை திரிந்ததுண்டு
மருண்ட விழிகளிலே மயக்கத்தின் மருட்சியுண்டு.
பிஞ்சு விரல்களுக்கு நஞ்சோடும் நட்புமுண்டு.
பூந்தளிர் மேனியெங்கும் பிரம்புகளின் தழும்புமுண்டு.
பிள்ளைக் கனியமுதின் பேரின்பக் காப்பியத்தின்
அவல நிலை கண்டு அல்லலுறும் அன்னை மனம்.
சில்லறை சில கண்டு அள்ளிட தினம் நின்று
துள்ளிடும் தந்தையின் தள்ளாடும் நிலை கண்டு
உள்ளிலே உயிர் சுருண்டு உறவதின் நிலை மறந்து
கொள்ளியின் கொதிப்பெனவே கொதித்திடும் மனம் கனன்று.
20/3/24
பாலியல்
காலையில் செய்திதாளில் வாசித்த முதல் வார்த்தை பாலியல்!
மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த
வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து
மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க
அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது
பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்
வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால்
ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?
மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்
வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது
கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.
கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.
30/3/20
பு(பி)ரிதலின் பெருந்தன்மை
அவனின் மனைவியான
எனது காதலி
இன்னும் அப்படியே
புன்னகைக்கிறாள் !
என்னை ஏமாற்றக் கூடாது
என்பதற்காக
என்னை விட்டு பிரிந்தவள் அவள் !
சுற்றயல் அழுத்தங்களால்
நடித்துக் காட்டவென்று புறப்பட்டு
தூண்டப்பட்ட
உணர்வு மயக்கத்தில்
எனக்காக வைத்திருந்த
அந்தரங்க முதல்களை
பறிகொடுத்த அப்பாவி !
காதலை அசிங்கப்படுத்தக் கூடாதென்பதற்காக
எனது நினைவுகளுடன்
அவனுடன் வாழ்கிறாள்
வண்டுக்கு தேனைக் கொடுத்து
நறுமணத்தை இரசிகனுக்கு கொடுக்கும் புஷ்பம் போல !
என்னுடன் அவள்
இலகுவாக இணைந்திருக்கலாம்
இரகசியங்களை மறைத்துக் கொண்டு
ஆனால்
போராடியே பிரிந்தாள்
உண்மைகளைச்
சொல்லிச் சொல்லி !
அவள் என்னைப் பிரிந்ததால்
நாங்கள் இன்னும்
பிரியாத பிரியமான காதலர்களே !
அவள்
இன்னும் அப்படியே
புன்னகைக்கிறாள்
அப்போது
எல்லாப் பூவனங்களும்
தலை குனிந்து நிற்கின்றன
நாங்களும் காதலித்துப்
பிரிந்திருக்கலாமென்று !
6/3/20
மறக்கமுடியவில்லை!
அழகாய் பேசிய வார்த்தையை விட ஆறுதல் கூறிய வார்த்தைகளை மறக்கமுடியவில்லை ! அழுத கண்ணீரின் வலிகளை விட அன்பாய்ப்பார்த்த விழிகள் வழிகாட்டியதை மறக்கமுடியவில்லை ! இருள் சூழ்ந்த மனதை மாற்ற இனிய உறவாய் நான் இருப்பேன் என்ற ஒற்றைச்சொல்லின் அர்த்தத்தை மறக்கமுடியவில்லை ! கைவிரல் பிடித்து நடை காட்டிய அம்மாவைவிட தள்ளாடும் வரை பாதையாய் பாவை உன்னில் பதிந்திருப்பேன் என்பதனையை மறக்கமுடியவில்லை ! உறவுகள் மத்தியில் உரிமையோடு உறவு பேசி உறவாடிய விதத்தை மறக்கமுடியவில்லை ! காதலால் களவாடிய இதயத்தை காட்சியாய் வேறொன்று கிடைத்ததும் காயப்படுத்திய தடையத்தை மறக்கமுடியவில்லை ! ஒளியாய் இருப்பேன் என்று விழியைப்பறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய விதத்தை மறக்கமுடியவில்லை ! இலவம் பஞ்சு இதயத்தை இலகுவாக பேசி தீ மூட்டிய தனலை மறக்கமுடியவில்லை ! ஏழன பார்வையில் ஏகாந்த உரையில் ஏறி மிதித்த சொற்களை மறக்கமுடியவில்லை ! நான் பட்ட அவமானம் உனது கிரீடமாய் தலையில் நிற்பதை மறக்கமுடியவில்லை ! கண்ணீர்விட்ட தலையனையில் சாட்சி சொல்ல துடிப்பதை மறக்கமுடியவில்லை ! நீண்ட பாதையில் நிற்கதியாய் நிறுத்தியதை மறக்கமுடியவில்லை ! மறக்க நினைக்கும் ஓர் சொல் உன் பெயர் மட்டுமே மறையாமல் வாழ்வேன் இதயத்தில் என்று நங்கூரம் பேசுவதை மறக்கமுடியவில்லை ! மறுஜென்மம் எடுத்தாலும் மனதில் மறையா உன் ஞாபக அலைகளை மறக்கமுடியவில்லை ! மறையாமல் வாழ்கிறாய் மூச்சு உள்ள வரை...
- லதா
28/2/20
என்ன நியாயம்?
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்

மணம் இருந்தால் வருவேன் என்றது காதல்
குணம் இருந்தால் வருவேன் என்றது நட்பு

எதுவும் வேண்டாம் இருக்கிறேன்
என்றால் தாய்!!!! 🤱
பணத்துக்காக வரும் சொந்ததய்
நேசிக்கிறீர்கள்
மணதுக்காக வரும் காதலை
நேசிக்கிறீர்கள்♥️
குணத்துக்காக வரும் நட்பை
நேசிக்கிறீர்கள்
♥️
ஆனால்!!! எதுவும் வேணாம் என்கிற தாயே நேசிக்க ஏன்
யோசிக்கிறீர்கள் 
உனக்கு பசிக்கும்போது நிலாவை
காட்டி சோறு ஊற்றிய தாய்
🤱
இன்று அவள் பசியோடு இருக்கிறாள்-காரணம்
உன்னை பத்து மாதம் கருவில்
காத்த தாயே விட🤰... நீ
பத்து நாள் தெருவில் பார்த்த காதல் பெரிதாக தோன்றுகிறதா♥️
காதலுக்காக தாயை விட்டு ஓடுகிறீர்களே
♀️
♂️
தேடல்
By Dinesh Kumar A P2/28/2020அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், புது கவிதை, வேதனைNo comments
இச்சிறு உலகில்,
துரிதமாக நாளும்
வெறுமையாக நானும்
கடக்கிறது.
வழக்கமாக ஆயினும்,
தனிமை பழக சிரமமாக,
செல்கிறது தினம்.
செல்லும் பாதையில்
கண்கள் இல்லை.
கவனமாக
உனைத் தேடுதலில்
மட்டுமே.
கண்ணெட்டும் தூரமே
நீ இருந்தாலும்,
உனை எங்கும் காணவில்லை,
என்னுள் தவிர..
- பாரதி
Kavithai Competition
21/2/20
காதல்
நீயும் நானும் வானமும் பூமியும் போல்!!
பூமியை தீண்டவும் இயலாத தொலைவில் வானம் இருந்தாலும், பூமிக்கு வறட்சி
என்னும் துன்பம் நிகழும் பொழுது, வானம் தன் கண்ணீராகிய மழையால் பூமியை
குளிரச் செய்கிறது
அதுபோல
உன்னை விட்டு நான் விலகி இருந்தாலும், உன் துன்பத்தை தீர்க நான் என்றும் மழையாய் ஒடோடி வருவேன்...!!!
- ஐஸ்வர்யா
Kavithai Competition
வாழ்க்கை என் கைகளில்
சிந்தித்துப் பார்த்தேன்
சிறகை விரித்து
சிரிப்பை உரைத்து
சிறந்த சிற்ப்பமாக மாற
செதுக்க செதுக்க
சிதைந்து போகாமல்
சிந்தனை குறையாமல்
செம்மரமாய் நின்றேன்
உளுக்கிய போதெல்லாம்
உதிர்ந்து போகாமல்
உறுதியை விடாமல்
உண்மையாய் நின்றேன்
விழுந்த போதெல்லாம்
எழுந்து நின்று
விடா முயற்ச்சியுடன்
நகர்ந்துச் சென்றேன்
சந்திரக்கோளும் சந்தரப்பத்தால்
மாறுபட்டு நின்றாலும்
என்றும் நான்
ஒன்றில் நின்றேன்
வெட்ட வெட்ட
மரம் வளர்வதுபோல்
தட்டத் தட்டத்
தழைத்து நின்றேன்
சரித்து பார்க்கும்
மனிதர் இடத்தில்
சரியாமல் நானும்
நிலையாக நின்றேன்
இரவும் பகலும்
நினைத்துக் கொண்டேன்
நினைவில் மட்டும்
ஒன்று கொண்டேன்
தோல்விகள் பலநூறு
சந்தித்த போதிலும்
துவண்டு போகாமல்
நானும் நின்றேன்
வறுமையால் வாடினும்
வயிற்றுப்பசியால் பாடினும்
வெற்றியென்ற மலரைப்பெற
விதையாகப் புதைந்தேன்
வழியை அமைத்து
வலியை மறந்து
வாழ்வில் பறந்து
செல்ல வேண்டும்
என் வாழ்க்கை
என் கைகளில்
அல்லவா .....?
- தமிழ்த்தேன் கவிஞன்
Kavithai Competition
இவளும் பெண்ணே
ஏழ்மையின் சிகரமாய்
விளங்கியவள்
எழுத்தறிவு இன்றி திகழ்ந்தவள்
மாதுளை அழகுடையவள்
மனம் கவரும் பேச்சுடையவள்
தித்திக்கும் இனிப்பில் தேன் கலந்த நிறம்முடையவள்
தீச்சுடராய் மின்னும் கண்ணுடையவள்
எண்ணங்களை எரித்து ஏக்கத்தை புதைத்து
கைம்பெண்ணாய் காலம் கழிக்கிறாள்..
வாழ்நாளை வருத்தி..
- இளவரசன்
Kavithai Competition
4/2/20
என்னவளுக்காக (கவிதை போட்டி)
என்னை கருவில் சுமக்காத
தாயே
உனக்காக என் சுவாசத்தை பிடித்து வைத்து
இருக்கிறேன்
உன்னுடன் ஆண்டுகள் நூறு
வாழ்வதற்கு அல்ல
உன் கருவில் சுமக்காத என்னை
என் விழிகளில்
சுமக்க தான் தவம் கிடக்கிறேன்.
- சே.சரவணன்
25/1/20
8/1/20
அப்பா - (கவிதை போட்டி)
By Dinesh Kumar A P1/08/2020அப்பா, அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, புது கவிதை, வேதனை2 comments
மூன்று எழுத்து
மந்திரம் என் தந்தை
அறிதாய் எனக்கு
கிடைத்தது அன்பு பொக்கிஷம்
உன்னைப் போல் யாரும்
இல்லை
இவ்வுலகில்
உன் ஆசைகளை துறந்து
எங்களை சீறாட்டி
பண்பாய் பாசமுடன் வளர்த்து
ஆனந்த வாழ்வியலை அன்பாய் எங்களுக்கு
காட்டினீர்கள்
விபத்து ஒன்று நடக்கவில்லையெனில்
விருட்சமாய் வளர்ந்த
நாங்கள்
உள்ளகோவிலை உயர்வாய் அமைத்து உங்களை கொண்டாடி மகிழ்கிறோம் இன்று
என்ன ஆச்சரியம்
துன்பம் ஒன்று வரும்போது
அதை துனிவாய் கையாலும் அழகு
துன்பம் ஒன்று வரும்போது
உங்கள் மார்பில்
சாய்ந்து அழ துடிக்கிறது
என் மனம்
நடக்கும் தூரம்
கொஞ்சம் வா மகளே
நளினமாய் நடைப்
பயின்று என் நகைச்சுவையை ரசித்து
மனமகிழ்ந்து கொடுக்கு
முத்தம்
எத்தனை பேரானந்தம்.
இன்றும் என் இன்பநினைவுகளில்
நீங்கா நினைவுகள்
நிதம் தவித்து அழுகிறது
நிஜத்தை எண்ணி
பாசத்தில்
எனக்கு மறு குழந்தையாக
உங்களை சுமக்க ஆசைப்படுகிறேன்
இன்று
உங்கள் பிரிவையென்னி
குருடனாய் பிறந்த
உங்கள் பார்வை தான் குறைந்ததே தவிர
அறிவு பார்வை எவ்வளவு
விசாலமானது
படிப்பறியா மேதை
பாமரரும் போற்றும் வகையில் வாழ்ந்து பரமனின்
பாதம் நோக்கி சென்றாயே
நினைக்கையில் மனம்
பிரமித்து பெருமைக் கொள்ளும்
என் முதல் மாதிரி
என்றும் நீங்கள் மட்டும்தான்
உழைப்பு , கடமை,
கண்ணியம், மனிதநேயம், பாசம், பரிவு இவை எல்லாம் உயர்வாய் உயரமாக இருந்ததால் தானோ கடவுள்
எங்களை தவிக்க விட்டு உம்மை அழைத்து கொண்டாரோ
விதி வலியது கைவண்டி இழுத்தாலும் கண்ணீயமாய் எங்களை வளர்த்தீர்கள்
தீபாவளி பொங்கல்
என்றால் இமையொரம் கனவு தோன்றும் மூன்பே
புத்தாடை வாங்குவிர்கள்
பூரிப்பை புன்னகையால் காட்டுவீர்கள்
பாப்பா என்று அழைக்கையிலே
பக்கத்து வீட்டுகாரும் வியப்பாய் பார்பர்
கண்பட்டு விட்டது
அப்பா நம் அன்பிற்கு
அவ்வளவு அழகு வார்த்தையிலே
அன்பு
நடையும் நளினமும்
இனி யாருக்கு வரும்!
கண்பட்டு விட்டது
அப்பா நம் அன்பிற்கு
மந்திரமாய் மாதவமாய்
நீ கிடைக்க என்ன தவம் செய்தேன் நான்.
என் அப்பா என்று
அழைக்கையிலே ஆசானும் வியப்பாரே பள்ளியிலே
தோழனும் , தந்தையும்,
இரண்டற கலந்த கவிதை நீங்கள் எமக்கு.
சொர்கம் தனிளே சொகுசாய்
வளர்த்து
சோதனையில் விட்டு
சென்றாய்
சொந்தமும் ஏங்கும்
பந்தமும் ஏங்கும் உமது பிரிவை எண்ணி.
நினைத்துவாடும் உங்கள்
நீங்கா நிழல்கள்
கவலை என்று நினைத்தாளே
கண்ணீர் வரும் ஊற்றாய்
கதறும் என் கண்கள்
உம்மை நினைத்து.
- சரண்யா ஆர்
Tamil Kavithai Competition
31/12/19
குண்டுகள் துளைக்காத கவசம் (கவிதை போட்டி)
வேறு மனம்
குண்டுகள் துளைக்காத
கவசம் கொண்டு
கட்டப்பட்ட மனம் -இடிந்தது
கடுஞ் சொற்கள்
கேட்ட கணம் !
காக்க வேண்டும் -வேறு
கவசம் கொண்டு -இல்லை
கேட்க வேண்டும் எதையும்
கடந்து செல்லும் மனமொன்று
குண்டுகள் துளைக்காத
கவசம் கொண்டு
கட்டப்பட்ட மனம் -இடிந்தது
கடுஞ் சொற்கள்
கேட்ட கணம் !
காக்க வேண்டும் -வேறு
கவசம் கொண்டு -இல்லை
கேட்க வேண்டும் எதையும்
கடந்து செல்லும் மனமொன்று
-வி .ஆஷாபாரதி
Tamil Kavithai Competition
12/12/19
பட்டாம்பூச்சி கவிதைகள் - (கவிதை போட்டி)
![]() |
| Pattampoochi kavithai in Tamil |
பட்டாம்பூச்சி காதல் கவிதை
அடர்ந்த காட்டில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மேனியில் குறுந்தகை மின்னிட
இளஞ்சூரியன் ஆரஞ்சு வண்ண
மை தெளித்து தங்க பொட்டு வைத்த
பட்டாம்பூச்சி ஒன்று
என்னருகே வந்தது!
தொட்டுப்பார்க்க கரம் நீட்ட
வெட்கத்தில் நாணி சிவந்து கொண்டது!
உயர்திணை அஃறிணை கடந்து
பட்டாம்பூச்சி என்னிடம் ஏதோ பேச வர
புது உலகில் ஐக்கியமானோம்
சுதந்திரவாதி என்னை
அருங்காட்சியத்தில் சிறை
வைக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக்கொண்டது!
பொதுவாய் சொல்லி வைத்தேன்
சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் என்று!
ஒப்புக்கொள்வதாய் இறக்கை அசைக்க
புன்னகையோ என நான் அதிசயிக்க
பெயரென்ன என கேட்டதற்கு
மெல்லமாய் காதருகே
செல்லமாய் "காதலி" என்றது!
பெயரா? அழைப்பா? என்றேன்...
இயற்கை காதலர்கள்
நீங்கள் மட்டும் தானா?
இயற்கை உங்களை
காதலிக்க கூடாதா?
என்றவாறே பறந்து சென்றது...
காதல் சிறையில்
நான் சிக்கிக் கொள்ள
என் “காதலி”
பட்டாம்பூச்சியோ சுதந்திரமாய்
வானில்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மேனியில் குறுந்தகை மின்னிட
இளஞ்சூரியன் ஆரஞ்சு வண்ண
மை தெளித்து தங்க பொட்டு வைத்த
பட்டாம்பூச்சி ஒன்று
என்னருகே வந்தது!
தொட்டுப்பார்க்க கரம் நீட்ட
வெட்கத்தில் நாணி சிவந்து கொண்டது!
உயர்திணை அஃறிணை கடந்து
பட்டாம்பூச்சி என்னிடம் ஏதோ பேச வர
புது உலகில் ஐக்கியமானோம்
சுதந்திரவாதி என்னை
அருங்காட்சியத்தில் சிறை
வைக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக்கொண்டது!
பொதுவாய் சொல்லி வைத்தேன்
சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் என்று!
ஒப்புக்கொள்வதாய் இறக்கை அசைக்க
புன்னகையோ என நான் அதிசயிக்க
பெயரென்ன என கேட்டதற்கு
மெல்லமாய் காதருகே
செல்லமாய் "காதலி" என்றது!
பெயரா? அழைப்பா? என்றேன்...
இயற்கை காதலர்கள்
நீங்கள் மட்டும் தானா?
இயற்கை உங்களை
காதலிக்க கூடாதா?
என்றவாறே பறந்து சென்றது...
காதல் சிறையில்
நான் சிக்கிக் கொள்ள
என் “காதலி”
பட்டாம்பூச்சியோ சுதந்திரமாய்
வானில்!
#ஜெயராஜனோ
Tamil Kavithai Competition
Experience the delicate beauty of butterflies through enchanting Tamil kavithai and poems. Explore heartfelt butterfly kavithai in Tamil, a poetic celebration of nature's winged wonders. Let your imagination take flight with captivating butterfly poems in Tamil, each verse a tribute to the grace and charm of these enchanting creatures. Dive into the world of butterfly kavithai, where words flutter like butterflies, painting vivid images in your mind.
5/12/19
உன் நினைவாள் - (கவிதை போட்டி)
![]() |
| Sad Tamil kadhal kavithai |
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கிறேன்
என் அன்பே...
உன் நினைவுகள் என்னை கொள்கிறது
உன் நினைவுகள் என்னை துரத்துகிறது
நான் இங்கு இல்லை
நீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்
ஆழ்கடலை போல என் உள்ளம்
அமைதியாய் இருக்கிறது
உன் நினைவாள்...
என் அன்பே...
உன் நினைவுகள் என்னை கொள்கிறது
உன் நினைவுகள் என்னை துரத்துகிறது
நான் இங்கு இல்லை
நீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்
ஆழ்கடலை போல என் உள்ளம்
அமைதியாய் இருக்கிறது
உன் நினைவாள்...
- பொற்கொடி
Tamil Kavithai Competition
28/11/19
ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)
![]() |
| love failure kavithai |
என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்....
என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்...
என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்....
நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன....
அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்
நான் காதலில் அமிழ்ந்து போகின்றேன்....
- சரண்யா சின்னக்கண்ணு























