24/8/24

குழந்தைத் தொழிலாளி

 தேய்ந்த தோள்களிலே சாய்க்கும் சுமைகளுண்டு.

தள்ளாடும் தேகத்தை பந்தாடும் வலிகளுண்டு.

கல்லோடும் மண்ணோடும கரகாட்டம் நாளுமுண்டு.

கயிறோடும் பயிரோடும் சதிராடும் ஆட்டமுண்டு.

அனலோடும் புனலோடும் சடுகுடு ஆட்டமுண்டு.

கந்தகத்தில் குளியலுண்டு காலத்தின் அலங்கோலம்.

கால் வயிற்று கஞ்சிக்கு காடு மலை திரிந்ததுண்டு

மருண்ட விழிகளிலே மயக்கத்தின் மருட்சியுண்டு. 

பிஞ்சு விரல்களுக்கு நஞ்சோடும் நட்புமுண்டு.

பூந்தளிர் மேனியெங்கும் பிரம்புகளின் தழும்புமுண்டு. 

பிள்ளைக் கனியமுதின் பேரின்பக் காப்பியத்தின்

அவல நிலை கண்டு அல்லலுறும் அன்னை மனம்.

சில்லறை சில கண்டு அள்ளிட தினம் நின்று

துள்ளிடும் தந்தையின் தள்ளாடும் நிலை கண்டு

உள்ளிலே உயிர் சுருண்டு உறவதின் நிலை மறந்து

கொள்ளியின் கொதிப்பெனவே கொதித்திடும் மனம் கனன்று.


0 Please share your thoughts and suggestions!: