30/10/20

தமிழ்!

Tamil mozhi kavithai
 

தலை நிமிர்ந்து வாழ
வைப்பதும் என் தமிழ்!
உயிர் கொடுத்து வாழ
வைப்பதும் என் தமிழ்!

கண்டதுண்டு எந்தன்
தமிழ்மொழி பெருமை..!
பார்த்ததுண்டு எந்தன்
தாய்மொழி மகிமை!

பாரதம் போற்றும் தமிழ்
எங்கள் பெருமை!
பெருமைகள் போற்றும் தமிழ்
எங்கள் அடையாளம்!

தலை குனிந்து நடந்ததில்லை!
தலை நிமிர மறந்ததில்லை!
அந்நியன் முன்னும்
அடிமை என்று நினைப்பவன்
முன்னும்!

எங்கள் தமிழில் என்ன
குறை உண்டு!
எங்கள் தமிழில் எல்லாம்
நிறையவே உண்டு?

வள்ளுவன் கொடுத்த
மூப்பால் உண்டு!
கம்பன் கொடுத்த
ராமாயணம் உண்டு!

கண்ணன் சொன்ன
கீதை உண்டு!
அண்ணா கொடுத்த
திராவிட உண்டு!

பெரியார் கொடுத்த
சுயமரியாதை உண்டு!
பாரதி கொடுத்த
வீரம் உண்டு!

யான் பெற்ற இன்பம்
சொல்லி மலாது!
யான் பெற்ற தமிழே என்னை
கொல்லும் ஆயுதம்!

எந்தன் பசி தீர்ந்தது
எந்தன் தமிழ்!
எந்தன் தாகம் தீர்ந்தது
எந்தன் தமிழ்!
எந்தன் ஏக்கம் தீர்ந்தது
எந்தன் தமிழ்!

எமக்கு எல்லாம் தந்த
எந்தன் தமிழிற்கு
எம்மண்ணில் ஏது
அழிவு..?

தமிழ் வெல்க!
தமிழ் வாழ்க!
தமிழ் வளர்க!

- பாரதி

1 Please share your thoughts and suggestions!:

Unknown சொன்னது…

Nice kavidhai