30/1/20

வாழ்க்கையின் ஓர் சிறு பயணம் (கவிதை போட்டி)

life quotes kavithai
விடுகதைக்கு விடை தேடும் வாழ்க்கைப் பயணத்தில்,
அறிமுகம் அற்ற சில அறிமுகங்கள்...
அவர்களோடு குழு ஒன்றில் கைகோர்த்து....
புன்னகையில் மொழி பேசி...
செயல் ஒவோன்றிலும்அகவை மறந்த மழலைகளாக பழகி
நம்மில் ஆர்வம் கண்டு,காலமும் அயர்ந்து,
நாளிகைபோல் கரைந்தது....
கரைந்த நாளிகைகள்,நம் நினைவலைகளின் துகள்கள் ஆகாதோ!!!
-ச. மதுமதி

Tamil Kavithai Competition



27/1/20

மகளும் ஓர் தாய் (கவிதை போட்டி)

parents kavithai
ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்
முழு வார எதிர்நோக்களின் ஆசை இவ்வோர் நாளில்
அடைந்த களிப்பில் வந்த களைப்பில்
தங்கள் கூடு நோக்கி பறக்கும் மக்கள்
கடலன்னை தனக்கென்ற தென்றலை
அலைகளுடன் கறை தள்ளிக்கொண்டிருந்தாள்
அலை இசையினிடையே தன் மூச்சுக்காற்றை
இசையென மாற்றி பசி நீங்க துண்டேந்தினான்
பேதையைத் தோளிலேந்திய தந்தை
ஆழலை ஓசை மட்டும் போதுமென்ற
நோக்கில் அவனிசை கடந்தனர் மக்கள்
பசியின் நேரமுணர்ந்த தந்தையாய்
பேதை பசி நீக்க தன் சட்டை பையில்
கை விட்டவனிடம் சிக்கியதோ பத்து ரூபாய்
பத்தாத பத்தில் மகளின் பசியாற்ற
மெதுரொட்டியும் பாலுமே கிடைத்தது
இரண்டையும் மகளுக்கே அளித்து
தன் பசியாற நீரருந்தி அமர்ந்தான்
தன் வண்ணக் கைகளில் ரொட்டியை
அழகாய் பிய்த்தெடத்து பாலில் தோய்த்து
தன் தந்தையின் பசி நீங்க 
பிஞ்சுக்கரத்தால் ஊட்டினால் அன்னையென
அடம்பிடிக்கும் குழந்தையென தலையாட்ட 
அவனைச் செல்ல அதட்டலுடனே
வாயினில் தினித்துவிட்டாள் தாயாய்
தன் முன்னே அன்னையைக் கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர் மல்கி வாரியனைத்தான் தன் தாயை
மகளும் ஓர் தாய்.
- அன்னமுரளி

காதலர் தின கவிதை (கவிதை போட்டி)

kadhalar thina kavithai tamil
என் கண்ணுள்  பொழியும் மழைக்கு
குடையாய் நீ வர வேண்டும்
உன் தொப்புள் கொடி உறவில்லை
தாலி கொடியில் உன் உறவாக வேண்டும்
நரை முதிர்த்து போன பின்பும்
உனது கரம் பிடித்து நடக்க வேண்டும்
சின்ன சின்ன சண்டைகள்
உடனே கேட்கும் சாரிகள்
நம் வாழ்க்கை பயணத்தின் ஜங்ஷன்கள்
என் உலகத்தின் காவிய தலைவனே
உன்னை எப்போது சந்திக்க நேரும்!
- கவிதாசங்கர்

25/1/20

காதல் தோல்வி (கவிதை போட்டி)

love feel kavithai
விழிகளின்
அனுமதியோடு வரும் காதல்
விழிகளின்
அனுமதியின்றி வெளியே போகிறது
கண்ணீராக....

- சரண்  

22/1/20

புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிட ஆசையா?

உங்களது படைப்புகள் அனைத்தும், இ-புத்தகமாக அமேசானில் கிண்டலில் வெளியிடுகின்றேம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, மராத்தி, கன்னடம், குஜராத்தி மற்றும் அனைத்து மொழிகளிலும், நங்கள் உங்களது படைப்புகளை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்கிறோம், என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

how to publish a book on amazon

உங்களது கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, பயணக்குறிப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, சிறுகதை, கட்டுரை, கேள்வி-பதில், கையேடு, ஆய்வறிக்கை, பயிற்சிப் புத்தகம், இலக்கணம், கார்டூன், குழந்தைகள் சிறார் இதழ், சிறுவர் கதை, காமிக்ஸ் / கிராஃபிக் நாவல், விளக்கவுரை, நாட்டுப்புறக் கதைகள், விளையாட்டு, விடுகதை, பாடப்புத்தகம், திரைக்கதை அனைத்தும் தனி இ-புத்தகமாக & பிரின்ட், எனது பப்பிளிகேஷன் மூலமாக வெளியிடமுடியும். (ஈமெயில் - apdineshk@gmail.com) மூலம் தொடப்பு கொள்ளவும்.

புத்தகம் எழுதுவது எப்படி?

  •  உங்கள் புத்தகத்தை முதலில் எழுதுங்கள்.

  • நீங்கள் ஏன் ஒரு புத்தகத்தை வெளியிட விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

  • புத்தகத் தலைப்பைத் தேர்வுசெய்க.

  • ஒரு சிறந்த புத்தக ஆசிரியரை நியமிக்கவும்.

  • புத்தக அட்டையை வடிவமைக்கவும்.

  • உங்கள் புத்தகத்தை வடிவமைத்து பதிவேற்றவும்.

    * இ-புக் என்றால் 70 சதவிகிதமும், பேப்பர் பேக் புத்தகம் என்றால் 30 முதல் 35 சதவிகித லாபமும் நிச்சயம்

    (ஈமெயில் - apdineshk@gmail.com) மூலம் தொடப்பு கொள்ளவும்.

16/1/20

திசைக்காட்டும் திருக்குறள் - (கவிதை போட்டி)

thiruvalluvar kavithai tamil

தமிழ்திருமகள் தந்த திசையெட்டும்
எம் திருகுறள் வெண்பாவில் ஈரடியாய்
குறளடி உடையது தமிழர் தந்த வரம்
மனிதனை செம்மைப்படுத்த
மனிதன் வகுத்துக்குடுத்த
வாழ்வியலை கற்றுக் கொடுக்கும்
உலகபொதுமறை பாரம்பரியம் போற்றும் நூல்
பண்பாளருக்கு பரிசாய் கிடைத்தது.
முப்பால் உணர்த்தும் முன்ணோர் பெருமை
திசை எட்டும் தித்திக்கும் புகழ்மனம்
வாழ்வியல் நெறிமுறை வளர்த்தெடுக்கும்
அறிவு ஊற்றாய் விசாலமான பார்வைக்கு வழிகாட்டும்
உத்ரவேதம்தனை வேதமாய் நினைத்து
படித்தால் இளயசமுதாயதயம் பயன்பெறும்
வாழ்வு செழிக்கும் வளம் கொழிக்கும்
பாகுபாடில்லா அனைவரும் சமம்
பொதுவுடைமை கருத்தை எடுத்துக் கூறுவது மிகச்சிறப்பு
இரண்டே அடிகளில் ஏழேச் சொற்களில்
உலகையே அளந்த ஒரு நூல்
எத்தனை அழகு
மனிதன் முதல் மாமன்னன் வரை
மலைத்துப் போகும் மிகச்சிறப்பு
அறிவியலும் உளவியலும் வியந்துப் போகும்
பொதுமறையாய்
திசைஎட்டும் தமிழ் மனம் வீசும் தமிழ் விளக்காய்
ஒளிவீசும் தமிழரின் வீரத்தையும் விவேகத்தையும்
எட்டுத்திக்கும் எடுத்துரைக்கும்
உலகமே போற்றும் பொதுமறையாய்
ஒளவைப் போற்றும் அறநூலாய்
செந்நாபோதரை போற்றி புகழவேண்டுமய்யா
முப்பால் உரைக்கும் அறம் பொருள் இன்பம் வீடு
நெறிமுறைக்கு சான்று எதையும் சுருங்கச் சொல்லி விளங்க
வாக்குவண்மைக்கு குறலடியே சான்று
உலகத்தத்துவத்தை எடுத்துக்கூறும் ஒப்பற்றநூல்
ஈரடிநூல் வெண்பாவின் குறட்பாக்களில் தனது வலிமையை உணர்த்தும்
தமிழ் இலக்கியக் கருத்துக்களை எடுத்தியம்பும் எழுத்தாணியாய்
தமிழர் நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணியாய்
எத்தனை அழகு  மின்னிடும் பொன்னாய்
உரக்க சொல் உலகிற்கு
- சரண்யா. ஆர்

Tamil Kavithai Competition

திருக்குறள் சிறப்பு கவிதை: Explore the timeless wisdom of Thirukkural through exquisite Tamil kavithai. Discover the profound verses of Thiruvalluvar in Tamil and Kavithai dedicated to Thirukkural. Delve into the world of poetic expressions inspired by the moral and ethical values of Thirukkural.

கன்னத்தில் விழும் குழி - (கவிதை போட்டி)

kanna kuzhi kavithai in tamil
சிரிக்கும் போது சிலருக்கு கன்னத்தில் விழும் குழியை பற்றி உருவக கவிதை.

எத்தனையோ முறை நான் இடறி விழுந்தும் உன் கன்னத்தில் ஆழவட்டம் அமைக்கிற அந்த குழியை ஏன் நீ மூடாமல் இருக்கிறாய்.....

அலை இல்லாத உன் கன்னத்தில் அது என்ன நீர் சுழி.....

ஈரமாகி விட்ட உன் கன்னத்தில் அது என்ன சங்கு சக்கரம்.....

ஆழ் கடல் தீவில் அது என்ன அமிழ்ந்து தோன்றும் அதிசய தீவு.....

இது என்ன இயற்கை உனக்கு மாத்திரமே காட்டுகின்ற சலுகையா.....

பூவரச மொட்டு உன் கன்னத்தில் எப்படி வந்தது.....

பாதரச பூவே நீ உள் வாங்கிய மனித பூச்சிகள் ஏராளம்.....

சதை சுழிப்பே நீ விஷம் தான். என் உயிர் நெருப்பை ஊதி வளர்க்கிற விஷம்.....

உன் தொப்புள் எப்படி சருக்காமல் கன்னம் வரைக்கும் ஏறி வந்தது.....

- அப்துல் ஹக்கீம் பாஷா

Tamil Kavithai Competition


8/1/20

அப்பா - (கவிதை போட்டி)


appa kavithai in tamil

மூன்று எழுத்து மந்திரம்  என் தந்தை

அறிதாய் எனக்கு கிடைத்தது அன்பு பொக்கிஷம்

உன்னைப் போல் யாரும் இல்லை

இவ்வுலகில்

உன் ஆசைகளை துறந்து

எங்களை சீறாட்டி பண்பாய் பாசமுடன் வளர்த்து

ஆனந்த வாழ்வியலை  அன்பாய் எங்களுக்கு

காட்டினீர்கள்

விபத்து ஒன்று நடக்கவில்லையெனில்

விருட்சமாய் வளர்ந்த நாங்கள்

உள்ளகோவிலை  உயர்வாய் அமைத்து உங்களை கொண்டாடி மகிழ்கிறோம் இன்று

என்ன ஆச்சரியம்

துன்பம் ஒன்று வரும்போது அதை துனிவாய் கையாலும் அழகு

துன்பம் ஒன்று வரும்போது

உங்கள் மார்பில் சாய்ந்து அழ துடிக்கிறது

என் மனம்

நடக்கும் தூரம் கொஞ்சம் வா மகளே

நளினமாய் நடைப் பயின்று என் நகைச்சுவையை  ரசித்து

மனமகிழ்ந்து கொடுக்கு முத்தம்

எத்தனை பேரானந்தம்.

இன்றும் என் இன்பநினைவுகளில்

நீங்கா நினைவுகள்

நிதம் தவித்து அழுகிறது  நிஜத்தை எண்ணி

பாசத்தில்

எனக்கு மறு குழந்தையாக

உங்களை சுமக்க ஆசைப்படுகிறேன் இன்று

உங்கள் பிரிவையென்னி

குருடனாய் பிறந்த உங்கள் பார்வை தான் குறைந்ததே தவிர

அறிவு பார்வை எவ்வளவு விசாலமானது

படிப்பறியா மேதை  பாமரரும் போற்றும் வகையில் வாழ்ந்து பரமனின் பாதம் நோக்கி சென்றாயே

நினைக்கையில் மனம் பிரமித்து பெருமைக் கொள்ளும்

என் முதல் மாதிரி என்றும் நீங்கள் மட்டும்தான்

உழைப்பு , கடமை, கண்ணியம், மனிதநேயம், பாசம், பரிவு இவை எல்லாம் உயர்வாய் உயரமாக இருந்ததால் தானோ கடவுள் எங்களை தவிக்க விட்டு உம்மை அழைத்து கொண்டாரோ

விதி வலியது  கைவண்டி இழுத்தாலும் கண்ணீயமாய் எங்களை வளர்த்தீர்கள்

தீபாவளி பொங்கல் என்றால் இமையொரம் கனவு தோன்றும் மூன்பே

புத்தாடை வாங்குவிர்கள் பூரிப்பை புன்னகையால் காட்டுவீர்கள்

பாப்பா என்று அழைக்கையிலே பக்கத்து வீட்டுகாரும் வியப்பாய் பார்பர்

கண்பட்டு விட்டது அப்பா நம் அன்பிற்கு

அவ்வளவு அழகு வார்த்தையிலே அன்பு

நடையும் நளினமும் இனி யாருக்கு வரும்!

கண்பட்டு விட்டது அப்பா நம் அன்பிற்கு

மந்திரமாய் மாதவமாய் நீ கிடைக்க என்ன தவம் செய்தேன் நான்.

என் அப்பா என்று அழைக்கையிலே ஆசானும் வியப்பாரே பள்ளியிலே

தோழனும் , தந்தையும், இரண்டற கலந்த கவிதை நீங்கள் எமக்கு.

சொர்கம் தனிளே சொகுசாய் வளர்த்து

சோதனையில் விட்டு சென்றாய்

சொந்தமும் ஏங்கும் பந்தமும் ஏங்கும் உமது பிரிவை எண்ணி.

நினைத்துவாடும்  உங்கள்  நீங்கா நிழல்கள்

கவலை என்று நினைத்தாளே கண்ணீர் வரும் ஊற்றாய்

கதறும் என் கண்கள் உம்மை நினைத்து.

- சரண்யா ஆர்

Tamil Kavithai Competition



அம்மா - (கவிதை போட்டி)

mother tamil kavithaigal
உருவம் தோன்றும் முன் ஓர் அறிமுகம் உன்னுடன்....
உன்னுள் ஓர் உயிராய் உருண்டோடி,
உன் இதயத்துடிப்பின் மெல்லிசை கேட்டு சிறக்கடித்தேன் உன் கருவறையில் !!!
என் விழிகள் திறக்காமல் ,உன் கருவறையில் கைகோர்த என் முதல் தோழியே....
நான் இவ்வுலகம் தொட,
உண்ணுயிர் மறந்து என்னுயிர் காத்தாய் ....
முதன்முதலில் இவ்வுலகின் ஓசை கேட்டு அஞ்சினேன்...
என்னை உன் இதையத்தோடு கட்டி அணைத்தாய்,
அழுகை மறந்தேன் என்னவள் வாசம் கண்டு..
என்னவள் மடி தவழ்ந்து,
மழலையாக அவளை வலம் வந்தேன்..
என்னவள் கண்கள் சிவக்க,என்னை துயில் கொள்ள செய்த என் தேவதை...
பள்ளியில் அடி வைக்க, அவள் மடி இறங்கினேன் ...
பணியில் அமரும் பொழுது,அவள் கை பிரிந்தேன்...
இன்றும் என் மனம் அழைக்கிறது...
அம்மா, உன் மடி தா
தலைசாய்ந்து,
ஒரு துயில் கொள்ள வேண்டும்,
இதரணியை மறந்து!!!!

- ச. மதுமதி

Tamil Kavithai Competition


புத்தாண்டே கற்றுக்கொடு - (கவிதை போட்டி)

new year kavithai in tamil

அமைதியினை அள்ளிக் கொடு
அன்பாய் இருக்க கற்றுக்கொடு

ஆழ்நெஞ்சில் ஈரம் கொடு
ஆட்சியர் நல்லாட்சிக்கு கற்றுக்கொடு

இல்லாமையை நீக்கிக் கொடு
இல்லறமே நல்லமாக்கிட கற்றுக்கொடு

ஈனர்களின் அழிவைக் கொடு
ஈகையை வளர்க்கக் கற்றுக்கொடு

உன்னத மனிதர்கள் அள்ளிக் கொடு
உண்மையுடன் செயலாற்ற கற்றுக்கொடு

ஊனமற்ற மனதைக் கொடு
ஊக்கம் வளர கற்றுக்கொடு

எல்லாம் எல்லாம் பெருக்கிக் கொடு
எளிமையுடன் வாழ கற்றுக்கொடு

ஏமாற்றங்களை நீக்கிக் கொடு
ஏற்றத்திற்கான முறையைக் கற்றுக்கொடு

ஒற்றுமையின் உன்னதம் கொடு
ஒன்றாய் இனைந்திட கற்றுக்கொடு

ஓலச்சத்தங்கள் அற்றுக் கொடு
ஓர் மனிதமெனக் கற்றுக்கொடு

ஔடதம் ஒழித்துக் கொடு
ஔவை வரிகளின் வாழ்க்கை கற்றுக்கொடு

கொடு புத்தாண்டே கற்றுக்கொடு
- அன்னமுரளி