நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/1/25

நட்பே சிறந்தது

சோகமான நாட்களையும் சந்தோஷமாக மாற்றுவது நட்பு!

ஆறுதல் கூற அன்பாய் சாய் கைகள் கோர்க்க கவலைகள் மறக்க

என்றும் வேண்டும் நட்பு என் அன்னை கூட வரமாட்டாள்...

என்னுடைய இறுதி ஊர்வலத்தில் ஆனால் என் நண்பன் வருவான்...

கலந்து கொள்வதற்கு அல்ல! என்னை சுமந்து செல்வதற்கு!!

பழகிய நாட்கள் பலவும் என் நெஞ்சில் என்றும் நட்பே சிறந்தது!!!

8/1/25

உன் கரம் பிடித்து

என் முதுகில் குத்திய தோழரே

நீ தடுமாறி கீழே விழுகின்ற போது 

உன் கரம் பிடித்து தூக்கிவிட்டு
 
தான் நான் கீழே விழுவேன்

தோழரே உனக்கு எப்படியோ
 
எனக்கு நட்பு உயர்வானது 

4/9/24

நம் நட்பு

 விண்ணில் ஆயிரம் பூக்கள் பூப்பது  உண்டு.. 

அதேபோல் நம் மனதில் பூக்கள் ஒரு பூ அது நம் நட்பு... 

27/8/24

நட்பும் நலம் விரும்பியாக

 நட்பும் நலம் விரும்பியாக நாட்டம் கொள்ளுதே
 
என்னிடம் நடை பயணம் செய்திட! எல்லாம் நாட்களும் ....

18/8/24

நண்பனின் மவுனம்

 தினம் தினம் திட்டும் அப்பாவை  

விட திட்டாமல் நகரும் 

நண்பனின் மவுனம் கொடியது!..

21/7/24

நட்பே

எங்கோ பிறந்து ஓர் இடத்தில் சந்தித்து பழகி

இரத்த பந்தம்  இல்லாமல் உனக்காக நான் இருக்கிறேன்

என்று  சொல்லும்  ஒரு உறவு நட்பே.......

அடிக்கடி சண்டையிட்டு  பிரிந்தாலும்

ஒரு நிமிடம் கூட பேசாமல்

இருக்க முடியாது- உனக்கும் எனக்கும்.....

என் மனதில் நீங்கா....உன் மனதில் நான்......

என்றும் என்றென்றும்...... நட்பே.......

17/3/24

நட்பு என்னும் படகில்

 நட்பின் ஆழம் கடலிடம் கேள் நட்பின் பெருமையை காற்றில் கேள்

நட்பின் அகலத்தை வாழிடம் கேள் நட்பை அடைந்தவர் பெற்ற ஒளியை 

சூரியனிடம் கேள் இவற்றின் முடிவை அறிந்தவனுக்கு நட்பின் முடிவு தெரியும்!!!!

அன்பு என்னும் கடலில்; நட்பு என்னும் படகில்; கரையடையாது....... 

கடலில் நீந்துவோம்; மீன்களைப் போல!!!!! 

பறக்கும் பறவைகளாகும் இருக்கும் நாம் - கீழிருக்கும் பள்ளத்தை

எண்ணி பயப்பட வேண்டாம்; குடும்பம் என்னும் வலையில் மாட்டு வதற்கு முன்;

நமக்கு கொடுத்த நேரத்தை கொண்டாடி மகிழ்வோம்!! குதுகலமாய்!! 

9/3/24

உயிர் போன்ற நட்பு

 பொன்னான உலகத்தில்
பொன் போன்ற நட்பு! 

கலை நிறைந்த உலகில்
கவலைப் தீர்க்கும் நட்பு!
 
செழிப்பான உலகில்
செம்மையான நட்பு! 

வளம் நிறைந்த உலகில்
வஞ்சனை இல்லா நட்பு!
 
சோர்வான என் உள்ளத்தில்
சோலை போன்ற நட்பு!
 
இளகிய என் மனதில் 
இன்பம் தரக்கூடிய நட்பு!
 
உறுதியான என் உள்ளத்தில்
உயிர் போன்ற நட்பு!
 
ஆக்கம் நிறைந்த உலகில்
ஊக்குவிக்கும் நட்பு!
 
நாளும் என்னுள் நிறைந்த 
நட்பு! நட்பு! நட்பு! 

நீ என்னுடன் இருப்பதால்

  உயிர் கொடுக்க ஆசைதான்
 உயிரான நண்பர்களுக்காக...... 

அழுது பார்க்க ஆசைதான்-உன் மடியில்
விழுந்து தலைசாய்வதற்காக...... 

நிறைய கண்ணீர் சிந்தவேண்டும்
நீ துடைக்க வருவாய் என....... 

எப்பவும் சிரிக்க வேண்டும்
நீ என்னுடன் இருப்பதால்......... 

12/2/24

என்றென்றும் நீயெனக்கு நண்பனே

நண்பன் என்ற ஒரு சொல்லே
உலக மக்களின் ஆதரவு-கீழே 
விழும் முன்னே தாங்கி பிடித்திடித்திடும் 
கரம் கொண்டான் நண்பனே

கோடையிலே நீராய் குளிர்ச்சியில் தீயாய்
தீபமாய் இருப்பான் நண்பன்-காலமது
புறந்தள்ளும் உலகமது உடைத்தெறியும் ஆதரவு 
கரமாய் அன்பு நண்பனே

பட்டியலில் சேர்க்கவில்லை இருந்தாலும் தெய்வமவன்
தோல்வியில் தன்னம்பிக்கை கொடுப்பான்-வெற்றியில்
மனநிறைவு அடைவான் இணைபிரியா சந்தோஷம்
உறவறியா அப்பாசம் நண்பனே

பூமியதுதூக்கி எறிந்தாலும் உன் மடியில்
விழவேத்தான் ஆசை கொள்வேன்-கர்ணன் 
வழி நடப்பேன் உனக்கென உயிர்கொடுப்பேன்
என்றென்றும் நீயெனக்கு நண்பனே 

8/1/24

நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்

கண்களும் இதயமும் ஒரே நேரத்தில் கலங்கும்,
  
காலம் பிரித்தாலும், மீண்டும் சந்திக்க மனம் ஏங்கும், 

அது தான் நட்பு... காதலின் பிரிவால் ரணமாகிய 

இதயத்திற்கு நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்... 

நட்பின் பிரிவை ஒருபோதும் ஏற்காது நம் மனம்.... 

எப்போதும் நட்பும் நண்பனும் நம் நலம்.   

28/11/20

மன்னிக்க மறந்த நட்பிற்காக

 

natpu kavithai in tamil

கரையிலே நான் நடக்கையிலே ,

மறுபுறம் நீ வருகையிலே,

என் பார்வையில்,

நான் உன்னை சிரிக்கையிலே ,

உன் பார்வையிலே ,

நீ என்னை வெறுக்கையிலே,

நீயோ நகர்ந்து செல்லையிலே ,

நானோ நகர நினைக்கையிலே ,

என் நகர்வோ நடுங்கியது,

நீ நகர்ந்து சென்ற பாதையிலே

-அபர்ணா

Kavithai Competition

24/11/20

ஆசான்

 

aasiriyar kavithai in tami

அறிவு கண் திறந்து..!

கனவு பாதை வகுத்து..!

கற்றாலும் கல்வியும்

மட்டும் கற்றுக் தராமல்..!

வாழ்க்கை கல்வி

கற்று கொடுத்து..!

வாழ்க்கை பாதை

அமைத்துக் தந்து..!

ஒவ்வொரு மாணவரின்

கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!

பின்னால் ஆசிரியர் 

என்ற...

மாபெரும் துணை

உண்டு..!

மாபெரும் வெற்றி

உண்டு..!


                                           - பாரதி

Kavithai Competition


27/12/19

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

friends kavithai tamil
நட்பு
என்று தெரியா அன்பு அது
அறியா வயது ... குட்டை பாவாடை
போட்ட நாட்கள் அவை ... அத்துனை
*அழகானவை*...

*வெள்ளியும் ஞாயிறும்*
தொலைக் காட்சி காணுகையில்
கையில் தொலைக்கா நேசம்
விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ...

பதினாறு தாண்டா பருவமது
பாவாடை தாவாணி வீதி உலாவில்
அரும்பு மீசை தொடரும் போது
அச்சம் கொண்டு கை பிடித்து
நடையில் வேகம் காட்டும் அவை... அத்துனை *பாதுகாப்பானவை*...

கல்லூரியில் விலங்காத விலங்கியல்
நானும் ... தடுமாறும் தாவரவியல்
நீயும் படித்து முடித்து சின்னதொரு
கையேட்டில் கையெழுத்து
வாங்கி விடைபெற முடியா ஆனாலும்
மணம் முடித்து விடைப்பெற்றோம்
*விடுமுறையில்லா இயந்திர வாழ்வில்*...

அழைப்பு வரதான் செய்கிறது காலங்கள் மாறினாலும் ...

இரு ஒரு நிமிசம் *இடைவேளையில்*
பேசுகிறேன் என நீயும் ...

அவருக்கு *சட்னி போடுகிறேன்*...
இரு கூப்பிடுகிறேன் என நானும் ...

*உதடுகள் நான்கும் உரைக்க* தான் செய்கிறது ... காலத்தின் வேகத்தில் ..

ஆயினும்
உள்ளம் நினைக்க தான்
செய்கிறது *நட்பினை* ...

*முப்பது அகவையினை* தொட்டது
அல்லவா அது ...
பசுமை மாறா நினைவினை
சுமந்த வண்ணம் நாளும் ...

- அம்மு தண்டபாணி

Tamil Kavithai Competition

10/3/17

மிட்டாய்

sweet love kavithai Tamil

உனது இதழ் பட்டு
இனிப்புச்சுவை
குறைந்தது
இனிப்பு மிட்டாயில் !!!

- தினேஷ் குமார் எ பி

10/6/15

என் நண்பன்!

birthday kavithai friend in tamil

ஈவுலகில் நான் இருந்தாலும் இல்லை என்றாலும்
எனது தாய்க்கு இன்னொரு மகன் இருப்பன் அவன் என் நண்பன்!

தினேஷ் குமார் எ பி

9/9/14

நண்பர்கள் அதிகம்

friendship kavithai in tamil

எனக்கு அதிகமான
நண்பர்கள் இருக்கிறார்கள்
என்பதில் எனக்கு
முகநுாலில் {Facebook} அல்ல
முகம் அறிந்து!
                                                              - AP Dinesh Kumar

14/8/14

சுதந்திர தினம் பள்ளியில்!

Indian independence day kavithai in tamil

அதிகாலை எழுந்து! பள்ளி சீருடை அணிந்து!
ஜாதி ,மதம் பார்க்காமல் கொடியை தாங்கும் குண்டூசி!
மேகங்கள் களைந்து! வருசையில் நின்ற நட்சத்திரம்!
கொடி வான்மேல் உயர்ந்து!
தலைமை ஆசிரியரின் கொடி ஏற்றம்!
சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம்!
செய்தவர்களுக்கு வீர வணக்கம்!
சிறுவர்களின் கலையாட்டம்!
விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு விருது!
ஆட்டம் பாட்டம் முடிந்தவுடன் கைகள் நிறைய இனிப்பு!
ஒவ்வொரு குழந்தை முகத்திலும் சிரிப்பு!

                                                                                - Dinesh kumar A P

14/7/14

கல்லூரிகாலம் கவிதை

Tamil kavithai about college life

கல்லூரிகாலம்
அது ஒரு காலம்
மனதில் மழை பெய்த காலம்...

வாழ்க்கையில் பூ தூவப்பட்டதும்
இளமைக்கு சிறகு முளைத்ததும்
மகிழ்ச்சிக்கு அர்த்தம் பிறந்ததும் இக்காலமே..

‘’சொல்வதற்கு வார்த்தை இல்லை’’
என்ற வர்ணனைக்கு உட்பட்ட காலம்...

நினைக்க..நினைக்க..
கூடி மகிழ்ந்த நினைவுகளை சேகரித்துக் கொள்ள
இன்னொரு இதயம் உருவாக்கு என்று
என் புலன்களுக்கு புத்திமதிசொல்லும் காலம்..

வட்டதட்டைசுற்றி
வட்டமாய் அமர்ந்து
கழுவாதகைகளால் சோறூட்டி
வேற்றுமையை கழுவிக்கொண்ட காலம்…

மே மாத கத்திரியில்
மொத்த ஊரும் வெயிலை ஒதுங்கியிருக்க,
ஊர்சுற்ற உறவு படைத்த
ஓர் உதவியாளன் இந்த கல்லூரி...

இதோ,
நினைத்தால் வந்து சேர்கிறது..,
நடந்து சென்றபாதையெல்லாம்
கால்களுக்கான கூட்டணி...
கூடியிருந்த வேளையெல்லாம்
இவ்வுலகம் மறந்து சொர்க்கம்...

உதவுகின்ற தருணங்களில்
மாற்று உருவமாதாபிதா...
பிரிந்து நிற்கும் பொழுதெல்லாம்
தயக்கம் தங்காததாபத்தோடும்
மறுமுறை பார்க்க எண்ணும் ஏக்கத்தோடும்...


என் விதிரத்தின் தோல்களில்
சுருக்கம் முளைத்துவிட்டது..,
இன்னமுமே,
தோள்கொடுக்கும் பிரிவினர் தொட்ட என் கைகளில்
தொட்டுக்கொண்டேயிருக்கும் ரேகைபதிவுகளுக்கு சுருக்கமில்லை.

திருமணவழியே துணையை எண்ணுகையில்
ஒரு விரல்போதும்...
பிள்ளையை சார்ந்து துணையை எண்ணுகையில்
அதிகப்பட்சவிரல் ஆறோ ஏழோ தலைதூக்கும்...
கல்லூரி அளித்ததுணையை எண்ணிப்பார்க்கையில்
மனசாட்சிப்படியே,
பத்து விரல்பத்தவில்லை.

எப்பொழுதெல்லாம்
வேதனை சுமந்துகண்ணீர்சுரக்கின்றேனோ
அப்பொழுதெல்லாம்
கண்ணீர்துடைத்து
வேதனைக்கு கொள்ளிவைக்கும் கைகளெல்லாம்
கல்லூரி அறிமுகப்படுத்தியகைகளே!

அங்கே,
கொடுத்த பொருளை திருப்பிக்கொள்ள
அதிகாரம் காட்டினால்
அடி கொடுக்கும் கூட்டம்...
கடனாய் ஒன்று வாங்கையிலே
அனுமதி கேட்டால்
அழுகை இடும் ஜாதி...

வாழ்க்கை விடுதியில் விழுந்தவுடன்
வீட்டு உறவுமனம் கிள்ளும்...
மறுத்ததில்லை ...ஏற்றுக்கொள்கிறேன்.
நித்தியமாய்,
விடுதி மூடி வீடு திறந்தவுடன்
விடுதியில் இணைந்தகைகள்உயிரை அள்ளுகிறது.

கடந்த கால கல்லூரிவாசிகளே!
உன் மனதில்,
கல்லூரி காலம் ஒரு திரைப்படம் என்றால்,
வாழ்நாள் வரை ஓடுகின்ற திரைப்படம் அதுவே!

உள்ளத்துபடியே பார்த்தால்
அது காலம் அல்ல...
ஒற்றுமையின்காவியம்
ஒன்றிணைந்த ஜீவியம்
கோடிவிரல் சேர்ந்தெழுந்த நட்போவியம்..
                           
- ஹரிதாஸ் (வைர ஹரன்)

With emotional Tamil kavithai (poems) and motivational words, you may unlock the beauty of college life. With this collection of college life kavithai in Tamil, you can relive nostalgic college recollections and the painful conclusion of college life. Share the spirit of your academic adventure with relevant college quotes in Tamil, and bask in the allure of Tamil poems about life. With our collection of college life recollections quotes in Tamil, you can enter the world of emotions and nostalgia. Whether you're feeling nostalgic or want to share your college life experiences, our Tamil kavithai and quotes can help. Discover the essence of college life with our collection of Tamil college kavithai.


15/9/13

வெட்கம் கலந்த புன்னகை

tamil kavithai about love failure

தினம் தினம் உன்னிடத்தில்
வெட்கத்தை காணும்
 என்னுள் சிதறும் புன்னகை
 சிந்தித்து கொண்டே சொல்கிறது ...
வெட்கப்படும் ஆண்கள்
வெட்கப்பட்டே வெட்கத்தை
அழகக்காக்குகிறார்கள்
உன்னை போல...
நன்றி 
-தோழி சக்தி