அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17/12/24

அற்புத வடிவம்

 அம்மா மனதுக்கு ஆறுதலையும் உடலுக்கு தெம்பையும் தரும்

அற்புத சொல் அம்மா உச்சரிக்கும் உதடுகளுக்கு 

உத்வேகம் தரும் அட்சய பாத்திரம் அம்மா எல்லா 

உயிர்க்கும் பொதுவான மூல மந்திரம் அம்மா உணவில் கூட

உயர்ந்தவைகளை பிள்ளைக்கு தரும் தியாக பிரம்மம்


4/11/24

வியர்வை துளிகள்

 என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அம்மா கடிந்துரைக்கு

நான் சிந்தும் கண்ணீர் துளிகள்...
 
என் வாழ்க்கையில் வெற்றி பெற்றும் வியர்வை துளிகள்.... 

26/10/24

என் உலகமே

கண்கள் கலங்கி தினமும் நின்றேன்

கைகளாய் நீ துடைக்க வந்தாய்

கால்கள் தடுமாறி வாதையில் விழுந்தேன்

கதவுகள் பல திறந்து பாதை தந்தாய்

தூக்கமின்றி என்னைக் காத்துக் கொண்டு

என் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றித் தந்தாய்

கர்ப்பத்திலிருந்து இறக்கிவைத்து

சிற்பமாக என்னை செதுக்கி தந்தாய்

மடியில் தவழும் வாய்ப்பைத் தந்தாய்

மண்ணுலகில் நீயே வாழ்க்கை தந்தாய்

பகைவரையும் நேசிக்கும் அன்பை தந்தாய்

பாவத்தையும் சகிக்கும் பண்பை தந்தாய்

மன்னிக்கவும் மறக்கவும் கற்றுத் தந்தாய்

மனிதநேயத்தை பரிசாய் தந்தாய்

உலகமே தெரியாமல் நீ வளர்ந்தும்

என் உலகமே நீதான் என்றாய் இன்னொரு பிறப்பு 

நான் எடுத்தாலும் அன்பு பெண்ணே நீயே என் தாய்

19/10/24

என் இதயத்தில்

அம்மா நீ என்னை உன் க௫வறையில் சுமந்தாய்...

நான் உன்னை என் இதயத்தில் வைத்து சுமக்கிறேன்... 

கடவுளிடம் ரே ஒ௫ வரம் கேட்கிறேன்...
 
பணம்வேண்டாம் பொ௫ள் வேண்டாம்...
 
எனக்கு அடுத்து ஒ௫ பிறவி இ௫க்குமெனில்...
 
நான் உன்னை என் க௫வில் சுமக்க வேண்டும்...
 
நீயே எந்தன் மகளாக பிறக்க வேண்டும் அம்மா....

14/10/24

கடவுளின் மருவுருவமே

 கடவுளின் மருவுருவமே! 

உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,

உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,

 நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!

நான் சுவாசிக்கும்  காற்றே அவள் தான் அம்மா.....

21/7/24

தாயின் பாசம்

தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!

மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!

எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!


14/7/24

பெண்மையின் ‌பேரழகு

 அவள் பெண்மையின் ‌பேரழகு

என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு

பதுசாய்  என்னை வளர்த்திட,

அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை

ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,

ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,

ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,

ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,

அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......


3/7/24

தாயின் மடி சொர்க்கம்

கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன்..
 
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால் துன்பங்கள்

 வரும் தருணம் தாயின் மடி சொர்க்கம்.

முகத்தை காணும் முன்பே நேசிக்க தெரிந்தவள் 

தாய் மட்டுமே தாயை வணங்குவோம்

தாய்மையை போற்றுவோம். 

30/6/24

உறவா உயிரா

 அம்மா என் உறவா, உயிரா?

இன்னும் நான் அறியவில்லை,

இவளை தாண்டும் ஒரு அன்பை!!

இன்னும் நான் நினைக்கவில்லை,

இவளை விடவும் வேறன்பை!!

என் வானம் இருண்டாலும்,

எனது கண்ணில் ஒளியாவாள்!!

எவர் விட்டுப்போனாலும்,

என்னை பெற்ற கடமை விட்டுக்கொடுக்காது பேசிடும்!!

காரணம் இன்றி தாங்கின உறவு,

காலங்கள் கடந்தாலும் என்றும் போதும்

இவள் சேய் என்ற ஓர் உணர்வு!!




2/5/24

கடவுள் வடிவில்

 கடவுள் வடிவில் கருணை கொடுத்தாய்,

கருப்பையில் சுமந்து பெற்றாய்,

உன் கரம் பிடித்து உலகம் சுற்ற,

வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்,

நல்லன்பு மட்டும் என்னிடம் கொடுத்தாய்,

பல வலிகள் கொண்டு உழைத்து,

உன்கரமோ காய்த்து போக,

என் பிஞ்சு கரத்தை மெருகூட்டினாய்,

உன் மனம் உடைத்து, என் மனம் படைத்தாய்,

உன் காலடி அடைய நான் என்ன செய்வேன்,

உன் வாழ்வை அடைய,

என் கண கொடிகளும் ஏங்க,

பல வழி உண்டு என்றாலும்,

எவ்வழியும் தொற்றுபோகும்,

உன் அன்பின் முன்னே,

கருணை வடிவ கடவுளின் முன்னே...❣️


17/3/24

தாயே என்றும் உனக்காக நான்

மாதவிடாய் காலத்தில் கஷ்டப்பட்டாய்....

மாதவிடாய் நின்ற காலத்தில் மகிழ்ச்சியடைந்தாய்....

ஏனென்றால் நான் கருவுற்றிருப்பனோ என்ற எண்ணத்தில்.... 

நான் வளர வளர நீ என்னை நினைத்தாய்...

என்னுடைய சின்ன சின்ன அசைவுகளை உணர்ந்தாய்... 

அதை தந்தையிடம் கூறி அவரையும் மகிழ வைத்தாய்..... 

பத்து மாதங்கள் கழித்து என்னை ஈன்றெடுத்தாய்..... 

கருவறையில் இருந்து நான் வெளிவரும் பொழுது நீ அழுதாய்!!! 

நான் வந்த பிறகு என்னைப் பார்த்து மகிழ்ந்தாய்....!!! அன்னையே....

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்..

 அதனால் பிறக்கையில் அன்று அம்மாவுடன் நானும் அழுதேன்...!!! 

கல்லறையில் நீ உறங்கச் சொன்னால் கூட உறங்கு வேன்.. 

"அம்மா" நீ வந்து தாலாட்டு பாடினால் போதும்!!!! 

தாயே என்றும் உனக்காக நான்!!!! 





9/3/24

உன்னை நினைத்தேன்

          பசி என்று வந்தேன் உன் வறுமையை மறைத்து விருந்தளித்தாய்! 
                 
காலில் முள் குத்திவிட்டது என்றேன் உன் கத்தி காயத்தை
   
மறந்து மருந்திட்டாய்! தனிமையில் தவிக்கையில் 
  
உன்னை நினைத்தேன் தங்கமே என்று கண் முன் வந்து நின்றாய்

எதற்காக இத்தியாகம் என்றேன் என்னை மணமுடித்து அனுப்பிவிட்டாயே!!

அம்மா எனும் உறவு

 விடுமுறை இல்லை  உனக்கு, 

உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,

விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,

ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,

மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,

நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,

வெளிக்காட்டாத உன் உணர்வு,

உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,

நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,

இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,

இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,

இவ்வுலகில் அம்மா எனும் உறவு,

ஆண்டவன் அருளின் படைப்பு.....


17/2/24

நிலை தடுமாறி நிற்கிறேன்

 அன்பினை அமுதாக்கி  தந்தவளே

உயிரையும் மெய்(உடல்)யினையும் தந்த

 உனக்கு உயிர் எழுத்திலும் சரி 

மெய் எழுத்திலும் சரி வர்ணிக்க 

வார்த்தை கிடைக்காததால் நிலை தடுமாறி

 நிற்கிறேன் இந்த வரிகளை முடிக்காமல்.

15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


4/2/24

உன் உயிரே என் மூச்சு

நான் பிறந்ததும் என்னை தூக்கிய முதல் கை

நான் வளர்ந்ததும் நான் சாய்ந்த முதல் தோல் 

நான் அழுகும் போது என் கண்ணீரை துடைத்த முதல் ஜீவன்

நான் சிரிக்கும் போது அதை ரசித்த முதல் உள்ளம்

நான் வணங்கும்  தெய்வம் நான் சிரித்தாலும் அழுதாலும்

எனக்காக துடிக்கும் ஒரே மணம் இந்த உலகில் 

நான் மதிக்கும் ஒரே உயிர் நான் வளரும் பொது 

அதை பார்த்து சிரிக்கும் ஒரே நல்ல உள்ளம் இவ்வனைத்து

 வார்த்தைகளுக்கும் ஒரே  அர்த்தம் " அம்மா" 

உன் உயிரே என் மூச்சு நான் சிரிப்பதும்
 
உன்னாலே நான் அழுவதும் உன் முன்னே

30/1/24

உன்னை நினைத்து நினைத்து

மணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து உருவான உதயமடா நீ!

 என் உயிரோடு உனை சேர்த்து கருவோடு இணைந்தவனடா நீ!

என் வயிற்றில் கை வைத்து ரசித்ததுண்டு நான்!

 ஆறாம் மாதம் நீ அடையும் போது ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தவளடா நான்!

நீ பிறக்க போகும் தருவாயில் என் வயிற்றிலேயே இறந்தவனடா நீ!

உன் முகம் கூட பார்க முடியாத பாவியடா நான்

 பத்து வருடமாக உன்னை நினைத்து நினைத்து அழும் பேதையடா நான்!

என்று உன்னோடு வந்து சேர்வேனோ ஆவியாய் நான்.

28/1/24

மகள் எழுதும் முதல் கவிதை

 அம்மா என்கிற அழைப்பும் , தாய்மை என்கிற தத்துவமும்

 ஒரு பெண்மையை உணர்ந்தவளுக்கு மட்டுமே தெரியும்.  

அம்மா  யாரோ நீ யாரோ நான், ஏனோ என்னை பெத்தெடுத்தாய்,

ஏனோ என்னை உருவாக்கினாய் உன் பாசமோ, 

கண்டிப்போ என்னை வளர்த்தது... உன் அன்போ,

அணைப்போ என்னை மிகைத்தது... உன் பாசத்தில் பாகுபாடு உண்டோ..

 உன் அன்பில் அரவணைப்பு உண்டோ.. உன் முத்தத்தில் காமம் உண்டோ..

 உன் பாதுகாப்பில் பயம் உண்டோ. இவை அனைத்தும் 

உனக்கும் எனக்கும் இடையில் மட்டுமே நிகழும் .. 

என்ன உறவோ இருந்துவிட்டு போகட்டும் . இறுதி வரை இருப்போம்.. 

உனக்காக நானும்,எனக்காக நீயும்.. 

அருகில் இருந்தால் அரவணைத்து சொல்லிருபேன, 

தொலைவில் இருக்கிறாய்.. தூது அனுப்புகிறேன் அம்மா  பிரியமானவளுக்கு 

உன் பிரியமுள்ள மகள் எழுதும் முதல் கவிதை...  

இறுதி சுவாசம் உள்ள வரை உன்னை காபேன் அம்மா ....


தாய்மை என்ற பாந்தம்

  தாய்மை 🌹திருமணம் முடிந்த பெண்ணின் எதிர்பார்ப்பு 

தாய்மை என்ற அந்தஸ்தை அடைய தவிக்கின்ற  உள்ளம்

தனது நிலைமை அறிந்தும் ஒவ்வொரு மாதமும்  எதிர்பார்த்து
       
சோகத்தில் வாடிப் போன முகம்

மனைவிக்கு ஆறுதலளித்த  உன்னதமான கணவரின் ஆசையும்

என்றாவது ஓர் நாள் அவ்வாசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்

வருஷங்களும் கடந்து விட்டதே

வருடங்கள் மாறினாலும் மனம் எண்ணிய எண்ணம் ஒன்றே

        தாய்மை என்ற பந்தத்தை அடைகின்ற காலமும் வந்ததே

27/1/24

நான் பட்டம் வாங்க எண்ணியவள்

 தன்னலமற்று என்னலம் காத்தாள்
 
என் வலியாற்ற தன் வலி மறைத்தவள்

 என் உறக்கம் பார்த்து தன் உறக்கம் மறந்தவள்

 பட்டையென தன்னை எரித்து 

நான் பட்டம் வாங்க எண்ணியவள் அம்மா