True Love Kavithai in English | Heartfelt Poems


தாய்மை

அன்பில் அளவிட முடியாத இதயம் 
ஆக்கத்தின் ஊக்கமாய் திகழும் திலகம்
இனிமை நிறைந்த இனிப்பே இனியாள்
ஈகைத் திறனில் சிகரம் இமயம்
உள்ளம் நிறைந்த அழியாச் செல்வம்
ஊரார் மெச்சும் சேய் வளர்ப்பில் மாதா
என்றும் அழியாப் புகழின் உச்சம்
ஏற்றமிகு தரணியில் என்றும் நிலைப்பாய்
ஐம்புலன் அடக்கி தவம் செய்து பிள்ளையை பெற்று வளர்ப்பாள் தினமே
ஒன்பது நவரச அன்னம் வழங்கும் தன்னிகரில்லா தாயாம் அவளே
ஓயாமல் உழைக்கும் திறத்தால் எறும்பே
ஔஷதமாய் நிற்பாள் சேய் நலனில்
தியாகத்தின் திருவுருவம் அன்னையைப் போற்றுவோம்!

True Love Kavithai in English | Heartfelt Poems - apdineshkumar.blogspot.com Express true love with beautifully written English kavithaigal.

0 Please share your thoughts and suggestions!: