6/2/24

எனது பள்ளி

 தேன் கொஞ்சும் கவி அரங்கில் விளையாட வந்தவளே!!

நாற்றிசையை பார்க்கையிலே நாளெல்லாம் இனிக்குதடி!‍‍!‌

'புல்லெல்லாம் வண்டூர பூவெல்லாம் தேனூர நடைபோட்டு வந்தவளே'

சுற்றி சுற்றி நான் பார்க்க நீல வானம் சிலிர்குதடி!!

உள் வைத்த முதற்படியோ மூச்சு விடா துடிக்குதடி!

முதற்வகுப்பில் நான் கேட்டேன் முணுமுணுத்த கீதமடி!

இடைவேளை கிடைத்த உடன் இடையில்லா ஓடினேன்...

"தென்றல் காற்று எனை வந்து கொஞ்ச சொல்லி அழைக்குதடி"

பூங்கா உள் சென்றாளே பூவாசம் மயக்குதடி,

மரத்தடி நிழலைத் தான் மனம் சொல்லி ஏங்குதடி....

மைதானம் உள்சென்றாலே சிறுகல் கூட இல்லையடி!!

சுற்றி வந்து நீ பாரு பூவெல்லாம் மலர்ந்திருக்கும்.....

படி ஏறி வந்தாலே, முதற்வகுப்பு தெரியுமடி உள் வந்து நீ பாரு

உன் மனது தொலையுமடி, கரும்பலகை அழகை கூட வர்ணிக்க முடியுமடி....

"கழிப்பறையின் சுத்தமே எம்பள்ளி சிறப்படி"

காற்றில் ஆடும் மரங்கண்டு எம்மனது குளிருதடி,

மரம் சூழ்ந்த எம்பள்ளி 'நீலகிரி'யின் வரமடி!!

என்னென்ன நான் சொல்ல எம்பள்ளி அருமையை,

நாளெல்லாம் நான் சொல்வேன் எம்பள்ளி பெருமையை!!

0 Please share your thoughts and suggestions!: