6/2/24

எங்கே போனது நீதியும் நேர்மையும்

 பத்திரிக்கையாளன் காலடியில் விவசாயின் உடல்..

ஓங்கி ஓங்கி கழுத்தில் குதிக்கிறான்..

குண்டடி பட்டு பிணமான பின்னாலும்..

ஏன் இந்த கொலைவெறி தனம்..

பேனாவின் மையாக ரத்தத்தை நிரப்புவதற்கா..

அல்லது கருப்பாக்க வெகுமதியை பெறுவதற்கா..

நம் நாட்டில் கொலை செய்தால்..

உயரிய பதவியும் ஆட்சியும் கிடைக்குமல்லவா...

பாவம் அவனுக்கும் ஆசை  வந்துவிட்டதுபோல...

அல்லது பெரிய தொலைக்காட்சிகளில் நெறியாளனாகனும் போல..

எங்கே போனது நீதியும் நேர்மையும்..

காக்க வேண்டியவர்கள் குண்டுகளை துளைக்கிறார்கள்..

கடமை செய்ய வேண்டியவர்கள் கையாளாகிறார்கள்..

நம் நாடு ஜனநாயகநாடு நம்புங்கள்...

விவசாயம் எங்கள் நாட்டின் அடையாளம்..

விவசாயிகள் எங்களின் உயிரை போன்றவர்கள்..

தேர்தல் சமயத்தில் விற்கப்பட்ட வார்த்தைகள்..

அரசியல்வாதிகள் அனைத்தையும் விற்றே பழகிவிட்டார்கள்..

நாம் வெற்றுப்பேச்சை கேட்டே பழகிவிட்டோம்.. 

எதை விற்றாலும் சுட்டாலும் புதைத்தாலும்...

நாம் ஊமையாகவே  செவிடாகவே வாழவோம்..

வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்..

என்ற மந்திரத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே...


0 Please share your thoughts and suggestions!: