24/2/24

நாம் சந்திக்கும் பூங்கா

நீர்வாழ் தாவரங்கள் நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்
 
நம் அன்பில் மிதந்து பூக்களோ! பூத்துத் தரும்
 
நாம் வேண்டும் வண்ணம் பூக்களை விஞ்சும்
 
திரவியதோடு நடை பழகிக்கொண்டிருக்கும் தென்றல்.

'பிறருக்கு அனுமதியில்லை' இவ்வாசக பலகையை

பூங்காவே மாட்டிக்கொண்டது ஒருவரின்றி ஒருவர் 

வருவோமெனில் முதற்சொன்ன மூன்று சேவைகள் மூடப்படும்.

நீ சுவைத்துத்தரும் காய்கள் எனக்கு கனியாகும் 

இச்சேவை மாத்திரம் எனக்கு இங்கும் வெளியும் கிட்டும்.

நீ என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பின், இப்பூங்கா 

என்னிடம் வெறுமையை காட்டியது இப்போதோ 

வெறுப்பை காட்டுகிறது தாவரங்களா? புதர் மண்டிற்று.

பூக்களா? அவை பூப்பதேயில்லை தென்றலா?

உஷ்ணமேட்றி தகிக்கின்றது பூங்காவா? 

அது என்னை வதைக்கும் கூடமாகிப்போயிற்று.

 

0 Please share your thoughts and suggestions!: