4/2/24

விடுதலை என்பது அடிமைதான்

 விடுதலை என்பது யாதெனக் கேட்டேன்

உரிமையின் உணர்வுகள்  என்றான் போராளி

உரிமை என்பது யாதெனக் கேட்டேன்

உனக்கானதை நீ தேர்ந்தெடுப்பதே என்றார்கள்

சிந்தித்தேன் எனக்கானதை நான் தேர்ந்தெடுப்பதா?

எனக்கான உணவையே தேர்ந்தெடுக்க முடியவில்லை

உழைத்த பணத்தையே பாதுகாக்க முடியவில்லை

கலாச்சாரத்தின் கண்ணியத்தை உயர்த்த முடியவில்லை

தமிழனின் அடையாளத்தை அடைய முடியவில்லை

சகோதரத்துவத்தில் சுயநலத்தை அழிக்க முடியவில்லை

கன்னிகளின் கற்பை காக்க முடியவில்லை

திருமணத்தில் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை

மனிதத்தின் மாண்பை உணர்த்த முடியவில்லை

இந்தியாவின் இறையாண்மையை நுகர முடியவில்லை

மதங்களின் சாயத்தை போக்க முடியவில்லை

இளமையிலும் இன்பத்தை அடைய முடியவில்லை

இயற்கையின் அழிவை தடுக்க முடியவில்லை

முடியவில்லை என்பதற்கே முற்றுப்புள்ளி இல்லை

எப்படி விடுதலை உரிமையாய் இருக்கும்

எனவே விடுதலை என்பது அடிமைதான்

0 Please share your thoughts and suggestions!: