தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11/2/25

மனத்தில் உதித்திடும் வதனம்

 
இரவில் தனித்திடும் தருணம்
 
            மனத்தில் உதித்திடும் வதனம்

அரைநொடி கண்ட முகம் - இருவர்

            ஆயுளை காட்டிய சுகம்

நின்னை நேரில் கண்டால் படபடப்பு

            என்னை ஆண்ட கடமை உன் கைபிடிப்பு.

6/2/25

வரதட்சணை

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை, 

காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்..... 

தன்பிள்ளை மணம் முடித்துப்போகும் 

இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக் 

கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......

இன்றோ திருமணம் என்றாலே... 

திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........ 

ஆண்- பெண் இருவரிடமும், 

இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு...... 

உன் வாழ்க்கையில் சேரப்போவது உன் பாதியோ, 

மீதியோ அல்ல.. உன் இணை என்பதை நினைவில் கொண்டு.... 

அளவற்றப் பொருளை அல்லாமல்.... 

அளவற்ற அன்பை எதிர்பாருங்கள்..... 


25/1/25

மகாகவி பாரதியார்

கருப்பு மீசைக்காரா, என் கவிதையின் ஆசைக்காரா,

முண்டாசு பாரதியே! முக்கடலின் கவிதை நாயகனே,

எட்டயபுரத்தின் எட்டா நாயகனே,

எங்கள் கவிதை கடலின் முத்தானவன் நீ!

கவிதை படைத்து கண்ணம்மாவை ஈர்தவன் நீ!

பாரதி காதலி கண்ணம்மா என்று வாழ்ந்தவனே!

கருநிற கண்ணனே கவிதை வடிவின் நாயகனே!

உன் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்,

என்றும் பிரியாதே உன் கவிதைகள்!.......

20/1/25

வாசம் வீசும் மலரே

 வாசம் வீசும் மலரே என்மீது பாசம் காட்ட கூடாதா

வார்த்தை பேசும் மலரே என்னை பார்த்து பேசக்கூடாதா

அன்பு காட்டும் மலரே எனக்கும் அதை கொஞ்சம் காட்ட கூடாதா

அரவணைக்கும் மலரே அதுவும் நானாக கூடாதா

மௌனம் ஏன் மலரே கொஞ்சம் மனம் திறந்து பேசக்கூடாதா

8/1/25

உன் கரம் பிடித்து

என் முதுகில் குத்திய தோழரே

நீ தடுமாறி கீழே விழுகின்ற போது 

உன் கரம் பிடித்து தூக்கிவிட்டு
 
தான் நான் கீழே விழுவேன்

தோழரே உனக்கு எப்படியோ
 
எனக்கு நட்பு உயர்வானது 

தந்திரம்

தந்திரத்தால் சிங்கத்தை சிறைப்பிடித்து விடலாம்
 
தந்திரம் ஆனவனே அந்த சிறைக்குள் நீ ஒருபோதும்

செல்ல முடியாது சிறையில் இருப்பதால் சிங்கம் ஒருபோதும்
 
ஊளை இடுவதில்லை கர்ஜித்து கொண்டுதான் இருக்கிறது

மனிதனே தந்திரத்திற்கும் தைரியத்திற்கும்
 
உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள் 

7/12/24

ஒரு நாள்

 குடியை நிறுத்த நாளை நாளை என்று நாளைக் கடத்தி வந்தவன

ஒரு நாள் நிறத்தியே விட்டான் தன் உயிர் மூச்சை... 

30/11/24

நீ யார்

 ஒவ்வொரு முடிவுகளுக்கு பின்னாலும் முடியா நினைவுகள் உண்டு... 

ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் கனத்த கண்ணீர் துளிகள் உண்டு... 

மறதி மனதுக்கு சொல்லும் ஆறுதலே தவிர, மாற்றத்தே உண்டாக்கும் மந்திரம் அல்ல...

நினைவுகள் மட்டும் இல்லையென்றால் நிமிடத்திற்கு ஒரு முறை நீ யார் என்றக் கேள்வி பிறந்திருக்கும்...

26/10/24

நிலை அல்ல வெற்றி

 நிலை அல்ல வெற்றி

நிஜமல்ல தோல்வி

உன்னில் இருப்பது முயற்சி

உணர்ந்தவர்க்கு வளர்ச்சி

வாழ்வில் வரும் தடைகள்

அதுவே உனக்கு படிக்கல்

உழைத்துக் கொண்டிரு கருவி போல்

ஓடிச்சென்று இரு அருவி போல்

உழைப்பில் வரும் வியர்வை

தரும் உனக்கு உயர்வை

21/10/24

சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே

 சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே
 
மனிதன் ஆயிரம் கவலைகளை சுமக்கிறான்.

எவன் ஒருவன் தன் கவலைகளை இன்பமாக

மாற்றி இறக்கிவைக்கிறனே அவனே 

வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

4/9/24

நம்பிக்கை

 உன்னிடம் நம்பிக்கை இல்லை என்றால்.. 

சிறு கல்லைக் கூட மண்ணாக மாற்ற முடியாது.. 

ஆனால் உன்னிடம் நம்பிக்கை என்று
 
ஒன்று இருந்தல் விற்பனை கூட உன்னால் தொடமுடியும்... 

28/8/24

திறமைக்கு தலை வணங்கி

 தேரோட்டி மகன் என்று ஊர் வசைப்பாட
 
சபையில் தலை குனிந்தான் எங்கள் கர்ணன்!

ஆனால், போரில் கர்ணனை எதிர்க்க

 தேரோட்டியாகவே வந்தான் கண்ணன்!

கடவுள் என்று கொட்டம்மடித்தாலும்!

 திறமைக்கு தலை வணங்கியே! ஆகும்.

நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்

 பட்டமரம் கூட துளிர்க்கின்றதே மானிடா! -  மனம்

விட்டுப் போக ஒருநாளும் முயலாதே - தறி

கெட்டுப்போன நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்...!

எட்டிப் போன வட்ட நிலவும் உன் கிட்ட வரும்....!

வண்ண நட்சத்திரங்களும் நிச்சயம் உனை முட்ட வரும்....!

27/8/24

நம்பிக்கையுடன் நான்

 என் ஆசைகள் அனைத்தையும் கனாக்கண்டேன்....

அவைகள் நிஜமாக மாறாத என்று ஏக்கம் கொண்டேன்

சிறு உறக்கத்தின் பின் விழித்தெழுந்தேன்...

கண்ட கனவுகள் யாவும் களைந்து விட்டன கண் திருஷ்டியாக...

கண்டது என்னவோ கனவுதான் அது ஒரு நாள் 

கலையாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நான்...!!!

26/8/24

முயற்சி

 வலிகள் தந்திடும் வெற்றிப்படிகள்,

விழிகளில் நீங்கிடும் கண்ணீர் துளிகள்,

சிலந்தியின் முயற்சி, அது மகிழ்ந்து

 வாழ்ந்திடும் இல்லத்தின் நெகிழ்ச்சி......

24/8/24

தன்னம்பிக்கை

 உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்

முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு 

நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..

அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..


12/2/24

ஆலமரம் போல விரிந்து வாழ

ஆலமரம் போல விரிந்து வாழ...
 
துன்பத்தை துடைத்து எழு

கஷ்டத்தை கரைத்து எழு

கவலையை  கலைத்து நில்

வாழ்க்கை என்ற விதைக்கு 

தன்னம்பிக்கை என்ற நீரை ஊற்றி 

ஆலமரமாய் விரிந்து வாழ்வோம்!...

8/1/24

உன்னை நேசித்து பழகு

 கனவில் தோன்றாத சந்தோஷமும் இல்லை....!
  
கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை...!
  
அன்பில் மயங்காத உயிர்களும் இல்லை...!
  
அறிவால் கிடைக்காத உயர்வும் இல்லை......!
  
உன்னை நேசித்து பழகு.... உலகம் அழகாகும்...! 

25/11/23

கண்டதெல்லாம் அதிசயம்

கண்டதெல்லாம் அதிசயம், புரிந்து கொண்டான் மனிதன். 

கண்ணில் தெரியாதவாறு படைத்ததால்,
 
காற்றின் அருமை புரியாமல் போனது.

  "அது படைத்தவன் தவறு என்று பதில் தேடாமல்,

 கொடுத்தவன் ஈகை குணத்தை நீ புகழ்பாடு!",
 
புலப்படாத காற்றையும், புகை கலந்து வீதியில் உலாவவிட்டு, 

கண்களுக்கு புலப்படுத்துவதா மனிதனின் அறிவு.
 
இனி மாசு வேண்டாம், அதை தூசாக நினைத்து தூர வீசு.
 
உன்னை மாற்றிக் கொள், இனி மின்னொளியாய் மாறி,மாற்று வழி,
 
மின் , ஒளி, என நாம் நலம்பெற, பலவகையில் பலன்தர பலயிருக்க.

9/11/23

நீயோ உனக்கான பொறுமை

 நான் விதையாக தோன்றினேன்.. நீயோ கருவாக தோன்றினாய்.. 

நான் செடியாக வளர்ந்தேன்.. நீயோ மானிடராக வளர்ந்தாய்.. 

நான் கனியாக மாறினேன்.. நீயோ மாறாமல் நிற்கின்றாய்..
 
என்னுடன் வா மானிடனே.! ஐம்பூதங்களையும், காலத்தையும்

 எனக்கேற்றவாறு மாற்றினேன் கனியாக மாறினேன்! 

நீயோ உனக்கான பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி என 

அனைத்தையும் என்னிடம் இருந்து பெறுவாய்.. கனியாக மாறுவாய்!