27/12/19

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

friends kavithai tamil
நட்பு
என்று தெரியா அன்பு அது
அறியா வயது ... குட்டை பாவாடை
போட்ட நாட்கள் அவை ... அத்துனை
*அழகானவை*...

*வெள்ளியும் ஞாயிறும்*
தொலைக் காட்சி காணுகையில்
கையில் தொலைக்கா நேசம்
விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ...

பதினாறு தாண்டா பருவமது
பாவாடை தாவாணி வீதி உலாவில்
அரும்பு மீசை தொடரும் போது
அச்சம் கொண்டு கை பிடித்து
நடையில் வேகம் காட்டும் அவை... அத்துனை *பாதுகாப்பானவை*...

கல்லூரியில் விலங்காத விலங்கியல்
நானும் ... தடுமாறும் தாவரவியல்
நீயும் படித்து முடித்து சின்னதொரு
கையேட்டில் கையெழுத்து
வாங்கி விடைபெற முடியா ஆனாலும்
மணம் முடித்து விடைப்பெற்றோம்
*விடுமுறையில்லா இயந்திர வாழ்வில்*...

அழைப்பு வரதான் செய்கிறது காலங்கள் மாறினாலும் ...

இரு ஒரு நிமிசம் *இடைவேளையில்*
பேசுகிறேன் என நீயும் ...

அவருக்கு *சட்னி போடுகிறேன்*...
இரு கூப்பிடுகிறேன் என நானும் ...

*உதடுகள் நான்கும் உரைக்க* தான் செய்கிறது ... காலத்தின் வேகத்தில் ..

ஆயினும்
உள்ளம் நினைக்க தான்
செய்கிறது *நட்பினை* ...

*முப்பது அகவையினை* தொட்டது
அல்லவா அது ...
பசுமை மாறா நினைவினை
சுமந்த வண்ணம் நாளும் ...

- அம்மு தண்டபாணி

Tamil Kavithai Competition

0 Please share your thoughts and suggestions!: