குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21/1/25

என் முதல் பயணம்

இதுவரை உணராத சுதந்திர காற்றின் தீண்டல் தந்த சுகம்....

யாரேன்று அறியாத  சிலரின் அழகு புன்னகை....

புதிதாய் அறிமுகமான உணவுகளின் வாசனை.....

பாதுகாப்பை உணர்த்திய ஓட்டுனரின் உரையாடல்.....

பின் இருக்கையில் கொஞ்சி கொள்ளும் காதலர்களின் கிசுகிசுப்பு....

தலைகோதி என் நெற்றியில் முத்தமிட்டு செல்லும் ஜன்னல் காற்று....

முகவரி தெரியாத பக்கத்து இருக்கை நண்பரின் தோளில்

உறங்கி விழித்த போது சந்தித்த அவர் புன்னகையுடன்

இன்னும் தொடர்கிறது என் முதல் பயணம்....

30/3/20

பெண் ஒரு உன்னத படைப்பு

womens quotes


பெண் ஒரு உன்னத படைப்பு ! – அவள்

அகத்தில் அன்புடனும் ,

புறத்தில் பண்புடனும் ,

பெண்மைக்கு உண்மையுடனும் ,

பிரமிக்க வைக்கும் திறமையுடனும் ,

பொறுமைக்கு இலக்கணமாய் ,

புனிதத்திற்குப் பொருத்தமாய் ,

அடக்கம் அறிந்தவளாய் ,

அகங்காரம் தொலைத்தவளாய்,

அன்பிற்குப் பணிபவளாய் ,

பார் முழுதும் வலம் வருபவள் .

அவள் மேன்மை மறந்தார்க்கும் ,

பெண்மையினை எதிர்த்தார்க்கும் ,

அயர்ந்தவர்க்கும் அறிவுறுத்தி ,

பெண்மையில்லையேல் அகிலமில்லை என ,

அவள் பெருமைதனை நிலைநாட்டி ,

அவள் கொண்ட குறிக்கோளை மறவாது ,

தொடர்ந்து வாழ்வில் பயணித்து ,

அனைவரின் வாழ்வையும் உயர்த்திட ,

ஒன்றுபட்டு செயல்படும் – அவள்

ஓர் உன்னத படைப்பே !  

-து.தீபா. எம்.ஏ, எம்ஃபில் , பி.எட்

Kavithai Competition


 

16/1/20

திசைக்காட்டும் திருக்குறள் - (கவிதை போட்டி)

thiruvalluvar kavithai tamil

தமிழ்திருமகள் தந்த திசையெட்டும்
எம் திருகுறள் வெண்பாவில் ஈரடியாய்
குறளடி உடையது தமிழர் தந்த வரம்
மனிதனை செம்மைப்படுத்த
மனிதன் வகுத்துக்குடுத்த
வாழ்வியலை கற்றுக் கொடுக்கும்
உலகபொதுமறை பாரம்பரியம் போற்றும் நூல்
பண்பாளருக்கு பரிசாய் கிடைத்தது.
முப்பால் உணர்த்தும் முன்ணோர் பெருமை
திசை எட்டும் தித்திக்கும் புகழ்மனம்
வாழ்வியல் நெறிமுறை வளர்த்தெடுக்கும்
அறிவு ஊற்றாய் விசாலமான பார்வைக்கு வழிகாட்டும்
உத்ரவேதம்தனை வேதமாய் நினைத்து
படித்தால் இளயசமுதாயதயம் பயன்பெறும்
வாழ்வு செழிக்கும் வளம் கொழிக்கும்
பாகுபாடில்லா அனைவரும் சமம்
பொதுவுடைமை கருத்தை எடுத்துக் கூறுவது மிகச்சிறப்பு
இரண்டே அடிகளில் ஏழேச் சொற்களில்
உலகையே அளந்த ஒரு நூல்
எத்தனை அழகு
மனிதன் முதல் மாமன்னன் வரை
மலைத்துப் போகும் மிகச்சிறப்பு
அறிவியலும் உளவியலும் வியந்துப் போகும்
பொதுமறையாய்
திசைஎட்டும் தமிழ் மனம் வீசும் தமிழ் விளக்காய்
ஒளிவீசும் தமிழரின் வீரத்தையும் விவேகத்தையும்
எட்டுத்திக்கும் எடுத்துரைக்கும்
உலகமே போற்றும் பொதுமறையாய்
ஒளவைப் போற்றும் அறநூலாய்
செந்நாபோதரை போற்றி புகழவேண்டுமய்யா
முப்பால் உரைக்கும் அறம் பொருள் இன்பம் வீடு
நெறிமுறைக்கு சான்று எதையும் சுருங்கச் சொல்லி விளங்க
வாக்குவண்மைக்கு குறலடியே சான்று
உலகத்தத்துவத்தை எடுத்துக்கூறும் ஒப்பற்றநூல்
ஈரடிநூல் வெண்பாவின் குறட்பாக்களில் தனது வலிமையை உணர்த்தும்
தமிழ் இலக்கியக் கருத்துக்களை எடுத்தியம்பும் எழுத்தாணியாய்
தமிழர் நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணியாய்
எத்தனை அழகு  மின்னிடும் பொன்னாய்
உரக்க சொல் உலகிற்கு
- சரண்யா. ஆர்

Tamil Kavithai Competition

திருக்குறள் சிறப்பு கவிதை: Explore the timeless wisdom of Thirukkural through exquisite Tamil kavithai. Discover the profound verses of Thiruvalluvar in Tamil and Kavithai dedicated to Thirukkural. Delve into the world of poetic expressions inspired by the moral and ethical values of Thirukkural.

12/12/18

காதலிக்கு பிடித்த 17 விஷியம் {குறிப்புகள்}: 😍❤️👨‍💼

what do girls like in boys

1. நம்பிக்கை தருவது.💪
2. டிரஸ் நல்ல இருக்குனு சொல்றது.👗
3. கடைசி சாதம் அவுலுக்கு ஊட்டிவிடுவது.🍕

4. நெற்றியில் முத்தமிடுவது.😙
5. கார் கதவை திறந்து விடுவது.🚗
6. பொண்ணு விட்டு ஆட்களை கேர் பண்ணறது.👥
7. அவளுக்கான நேரம் ஒதிக்கிறது.⏰
8. பின்னாடி கட்டி பிடிக்கிறது.👫
9. ஏவோலோ பெரிய கூட்டத்திலும் அவளை மட்டும் தனியா ரசிக்கிறது.😻
10. (கண்ணா பாக்கணும்).👩
11. நம்ம ஷர்ட் காலரா ஏத்திவிடுறது.(பொதுவா புடிக்கும்).🙋‍♂️
12.கடைக்கு போகும் போது கூட போகணும்.👜
13. அவள் கோவம் படும்போது சமாதானம் பண்ணனும்.🦸‍♀️
14. மிஸ் பண்ணலானாலும் மிஸ் பண்ணணு சொல்லணும்.🧐
15. சந்திக்கும் போது பூ இல்லனா சாக்லட் வாங்கித்தரனும்.🍫
16. தினமும் ஒரு லவ் யூ சொல்லணும்.😍
17. பைக் ல கூட்டிட்டு போறது.🛵

நான் மிஸ் பன்னிருந்த கமெண்ட் ல போடவும்.🤩

Analysis and reached by Dinesh kumar A P — feeling crazy.