இதுவரை உணராத சுதந்திர காற்றின் தீண்டல் தந்த சுகம்....
யாரேன்று அறியாத சிலரின் அழகு புன்னகை....
புதிதாய் அறிமுகமான உணவுகளின் வாசனை.....
பாதுகாப்பை உணர்த்திய ஓட்டுனரின் உரையாடல்.....
பின் இருக்கையில் கொஞ்சி கொள்ளும் காதலர்களின் கிசுகிசுப்பு....
தலைகோதி என் நெற்றியில் முத்தமிட்டு செல்லும் ஜன்னல் காற்று....
முகவரி தெரியாத பக்கத்து இருக்கை நண்பரின் தோளில்
உறங்கி விழித்த போது சந்தித்த அவர் புன்னகையுடன்
இன்னும் தொடர்கிறது என் முதல் பயணம்....
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக