கருங்கல்லாலான கடவுளே! உன் முகத்தைக் கண்டால் வரம்..
கருநிற கண்ணிகையான என் முகத்தைக் கண்டால் சாபமா..!
கருநிற பெண்களின் காதல் கானல் நீராகவும்
கல்யாண ஆசை கனவாகவும் கருப்பு வெள்ளை புகைப்படமாயிற்று!
காகிதப் பூக்களாவும் கண்ணீர் கடலாகவும்
கருங்கல் மனமாகவும் கரைகிறது எங்கள் வாழ்க்கை!
கருப்பி, கருவாச்சியென ஊரார் பெயர்சூட்டி அழைக்க
கருப்பின் அடையாளமாகவே இவள் சித்தரிக்கப்படுகிறாள்!
நிறத்தில் வேறுபாடு காட்டும் நிலை (மக்களின் மனநிலை)
என்று மாறுமோ அன்றே என் வாழ்வும் மலரும்!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக