25/1/25

உன் பார்வையில்

 உன் பார்வையில் என்னை மின்னல் படம்மெடுத்துச்செல்ல,

உன் கை வளையல் சத்தம் எழுப்பி சங்கதி சொல்ல,

உன் விரல்களோ என்திசைப்பார் என  வழிக்காட்டித்தள்ள,

உன் கால்கலோ மெல்ல, நல்ல நடைப்போட்டு என்னைக்கொல்ல,

உன் புன்னகையால் என் செவி கேட்க சந்திப்பிழைகள் பல செய்ய,

ஒருமுறை பாரடா என்னை என்று உடல்மொழியில்,

நீயும்,அருள்மொழி கூற உன் அருமை மொழி அறியாதவன் போல் நானும்,

கண்டும் காணமல், கடக்க புரிந்தும் புரியாதது போல் நடிக்க

காத்திருந்த கண்கள் சிவக்க, உன் கோபம்தனை இரசிக்க..

என்னவளே  உனை பார்த்து வியக்க, எனக்காகவே இவள் என்று நினைக்க!

காதல் தந்த போதையில் தழைக்க! சற்று ஏமாந்தப்பென்னே!

உன் முன்வந்து பின்னே, என் புன்சிரிப்பால் உன்னை திகைக்க,

காதல் கனத்தில் பிறக்க, கவிதை பல படைக்க,

அழகாய் அவள் முகம் சிரிக்க அடி அழகே உன்னை என்று என் கைகளில் இனைக்க?..

மௌனமோ தடுக்க, அதை இன்று உடைக்க, முதல் வார்த்தை விருந்து படைக்க,

சொல்லிவிடு இன்றாவது என் மனமே! அவளிடம், நீ தான் என் "பேகம்"! என்றும்..


0 Please share your thoughts and suggestions!: