உண்மை மட்டுமே ஆள வேண்டும்!
பொய்மை மடிந்து வீழ வேண்டும்!!
வேலைவாய்ப்பு பெருக வேண்டும்!
நாட்டின் சாபமெல்லாம் கருக வேண்டும்!!
விஞ்ஞான உலகம் வளர வேண்டும்!
விவசாயி மனமும் குளிர வேண்டும்!!
ஊழலெல்லாம் ஒழிய வேண்டும்!
சட்டத்தின் ஓட்டைகள் யாவும் களைய வேண்டும்!!
தாய்மொழியை சுவாசிக்க வேண்டும்!
பிற மொழியையும் நேசிக்க வேண்டும்!!
மாநிலச் சண்டைகள் நீங்க வேண்டும்!
தேசபக்தி எங்கும் ஓங்க வேண்டும்!!
பெண்கள் பாதுகாப்பு நிலைக்க வேண்டும்!
குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்!!
இவ்வாறு என்தேசத்தை பார்க்க வேண்டும்!
பிற நாட்டினரும் என்தேசம் நோக்க வேண்டும்!!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக