தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!
மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...
எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?
நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால்
நான் பெற்ற செல்வம் என்னைக் குப்பையாக்கிவிட்டதே என்று...
அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!
கன்னத்தில் முத்தமிடுவாள்! சோறூட்டுவாள் வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாள்!
வரலாற்றை அறிவும் அவள் வழியில்...விஞ்ஞானம் அவள் காலடியில்...
மருத்துவச்சி என பெயரும் உண்டு அவளுக்கு! அதை அறியாத நாம் மண்டு!
அவள் இல்லையெனில் வரலாறு எங்கே! பணத்தை சேர்த்து என்ன செய்தோம்
வரலாற்றை தொலைத்தோமே! வாழ்க தமிழ்நாடு!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக