24/11/20

மானே மரகதமே

 

gramathu kadhal kavithai tamil

சிவத்த மேனிக்காரி

கண்டாங்கிச் சேலைக்காரி

அச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதே

மாமன் மனசுக்குள்ள முழுவதும்

நிறைஞ்சிருக்க

கழனி எல்லாம் நிறைஞ்சு போச்சு

ஆத்தோரமா  மாந்தோப்பில் காத்திருக்கேன் நானே

பாத்து பாத்து நடவு

செய்தா

பக்குவமா நெல்மணி பார்க்கலாம் கண்ணால

கதிரும் வெளஞ்சிடும்

கவலைகள் தீருமே

காளை மாடு பூட்டி

சந்தைக்கு

போகலாம் வெள்ளாமை

நிறைய வரும்

தைப் பொறந்தா கண்ணாலம் கட்டிடலாம்

இணைந்து சந்தோசமாக வாழலாம் ராசாத்தி


- உமா பாலகிருஷ்ணன்

Kavithai Competition


0 Please share your thoughts and suggestions!: