love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
love லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25/10/23

தாய் தமிழ் கவிதை

 அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! 

உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா

 வண்ணம் கண்ணிமையென காத்து  நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு 

துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே

 வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ

        அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!       

தாய்




24/11/20

மானே மரகதமே

 

gramathu kadhal kavithai tamil

சிவத்த மேனிக்காரி

கண்டாங்கிச் சேலைக்காரி

அச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதே

மாமன் மனசுக்குள்ள முழுவதும்

நிறைஞ்சிருக்க

கழனி எல்லாம் நிறைஞ்சு போச்சு

ஆத்தோரமா  மாந்தோப்பில் காத்திருக்கேன் நானே

பாத்து பாத்து நடவு

செய்தா

பக்குவமா நெல்மணி பார்க்கலாம் கண்ணால

கதிரும் வெளஞ்சிடும்

கவலைகள் தீருமே

காளை மாடு பூட்டி

சந்தைக்கு

போகலாம் வெள்ளாமை

நிறைய வரும்

தைப் பொறந்தா கண்ணாலம் கட்டிடலாம்

இணைந்து சந்தோசமாக வாழலாம் ராசாத்தி


- உமா பாலகிருஷ்ணன்

Kavithai Competition


15/7/16

இமைகள் உதடுகள்!

Tamil Kavidhai Mutham

நீ தோளில் சாய்ந்த போது - உனது
இமைகள் உதடுகளாக மாறினால்
முத்தம் வேண்டும் - கன்னத்தில்
அல்ல எனது இதழில் அன்பே!

- தினேஷ் குமார் எ பி


8/1/16

எதிர்கால கவிதை!


எதிர்கால கவிதை!

இதுவரை உன்னை  பார்க்கமால்

போனது எனது இறந்தகாலம்!..

உன்னை மட்டுமே நினைத்து கொண்டுருக்கிறேன்

இது எனக்கு நிகழ்காலம்!..

நீ மட்டுமே வாழ்க்கை என்றால்

அதுதான் எனக்கு எதிர்காலம்!...

- தினேஷ் குமார் எ பி