28/11/20

என்னைக் காணவில்லை



unavu kavithai in tamil

 என்னைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்! 

நான் தொலைந்துவிட்டேன்! யுத்தத்திலா? அல்லது சத்தத்திலா?      

எங்கே நான் தொலைந்தேன்?

ஓரு வேலை மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருப்பேனா?

இல்லையே

நன்றாகத்தானே நானிருந்தேன்!     

அல்லது கொரோனா வார்டிலா? 

அதுவும் இல்லையே!

பிறகு என்னவாயிற்டரெனக்கு? 

பிறகு எங்கே தொலைந்தேன் நான்?

உழைப்பிலா? பிழைப்பிலா?

துப்புரவு தொழிலாளியின்

கால்களின் இடுக்கிலா? அல்லது 

அவர் துடைக்கும் தொஷக்கயிற்றிலா?

இல்லை.. அயறாமல் உழைப்பதாக சொல்லப்படும் எனதருமை மருத்துவர் கண்களிலா?

இல்லை... அங்கும் இல்லை!.....

அரசு அலுவலகங்களிலா இல்லையே!..

அரசியல் களத்திலா? இல்லை..

நெஞ்சம் பதறும் அரசு ஊழியர் நெஞ்சப்புலத்திலா? 

இல்லையில்லை!! வாய்ப்பில்லை!!

சவக்கிடங்கிலா? சாக்கடையிலா?

இல்லை!  இல்லை!

என்னை யாரும் கொலை செய்திருக்க முடியாது!!

நான் யார்க்கும் அவ்வளவு பெரிய எதிரியல்ல!!

அப்படியானல் நான் எங்கே??

சொல்கிறேன் கேளுங்கள் உறவுகளே!

வாருங்கள்! என்னுடன் வாருங்கள் !...

குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன் பாருங்கள்!! ஆம்! குப்பைத்  தொட்டியில் கிடக்கிறேன்

என்னைப் பாருங்கள்!

தினந்தினம் வீணடிக்கப்படும் 

உணவுகளில்! பழங்களில்! 

அங்காடி வீதிகளில்!

அரசு மருத்துவமனை நோயாளிகள் மிச்சம் வைக்கும் தட்டுகளில்!!!

ஆம்!!

பல சமயம் தொடாமல் வைக்கும் தட்டுகளிலும்!!!!

 உணவுப்பிரிவு    ஊழியர்கள் திரும்ப எடுக்காமல் விட்டுவரும் தட்டுகளிலும்!!!          

ஆம்!  புழுவாக மாறியிருக்கும் நேற்றைக்கு முந்தைய

 உணவு த்துணுக்குகளில் ! ஆம்!

உணவியல் துறை சேர்ந்த நான்!!

புழுவாக மாறியிருக்கிறேன்!!!

ஓர் அரசு புழுவாக மாறியிருக்கிறேன்!!!🙂

-முனைவர் ஞா.சத்யா ஐயப்பன்

Kavithai Competition

0 Please share your thoughts and suggestions!: