கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை,
தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும் நீரே...!!!
தறியாகினும் சரியாகிட உம்மிடமே மீண்டு வருவேன்...
முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!
காலடி ஆயினும் அடியேன் அதில் கிடையாய் கிடை கிடப்பேன்...
முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!
இறையும் இறைமறையும் பலத்துறையும் கற்றுக் கொடுத்தீர்...
என் குறையும் பல கறையும் அது மறையும் வரை வெளுத்தீர்...!!!
கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை...,
தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும் நீரே...!!! - எனை சரியாக்கிடும் நீரே...!!!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக