வறுமை என்றால் என்ன? என்று என் தந்தையிடம் கேட்டேன்!
அவர் இரு குழந்தைகளை என் கண்ணில் காட்டினார்!
ஒரு பணக்கார வீட்டில் உள்ள குழந்தை சாப்பிட மறுத்து,
தட்டில் இருந்த இட்லியை தூக்கி அடித்தது!
தெருவில் நின்ற இன்னொரு குழந்தை அந்த
ஒரு இட்லிக்கூட கிடைக்காதா?
என்று ஏக்கத்தோடு அந்த வீட்டை எட்டிப்பார்த்தது!
இதோ பார் மகளே! என்று! அப்பொழுது புரிந்தது!
கிடைத்தவருக்கு அது அர்ப்பம்!
கிடைக்காதவருக்கே அது அமிர்தம் என்று!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக