சிந்தித்துப் பார்த்தேன்
சிறகை விரித்து
சிரிப்பை உரைத்து
சிறந்த சிற்ப்பமாக மாற
செதுக்க செதுக்க
சிதைந்து போகாமல்
சிந்தனை குறையாமல்
செம்மரமாய் நின்றேன்
உளுக்கிய போதெல்லாம்
உதிர்ந்து போகாமல்
உறுதியை விடாமல்
உண்மையாய் நின்றேன்
விழுந்த போதெல்லாம்
எழுந்து நின்று
விடா முயற்ச்சியுடன்
நகர்ந்துச் சென்றேன்
சந்திரக்கோளும் சந்தரப்பத்தால்
மாறுபட்டு நின்றாலும்
என்றும் நான்
ஒன்றில் நின்றேன்
வெட்ட வெட்ட
மரம் வளர்வதுபோல்
தட்டத் தட்டத்
தழைத்து நின்றேன்
சரித்து பார்க்கும்
மனிதர் இடத்தில்
சரியாமல் நானும்
நிலையாக நின்றேன்
இரவும் பகலும்
நினைத்துக் கொண்டேன்
நினைவில் மட்டும்
ஒன்று கொண்டேன்
தோல்விகள் பலநூறு
சந்தித்த போதிலும்
துவண்டு போகாமல்
நானும் நின்றேன்
வறுமையால் வாடினும்
வயிற்றுப்பசியால் பாடினும்
வெற்றியென்ற மலரைப்பெற
விதையாகப் புதைந்தேன்
வழியை அமைத்து
வலியை மறந்து
வாழ்வில் பறந்து
செல்ல வேண்டும்
என் வாழ்க்கை
என் கைகளில்
அல்லவா .....?
- தமிழ்த்தேன் கவிஞன்
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக