இன்றே வந்திடு என்னுயிரே!
விழியில் மோதி வாழ்வில் நுழைந்த
விடியலே ஔிவிளக்கே!
எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்த
ஏஞ்சலே என்னுயிரே!
வழியாய் நின்று பயணம் சிறக்க
வந்தஎன் வான்நிலவே!
செழிப்பைத் தரவே சிறப்பாய் சிரித்த
செந்தமிழ் சிறப்பினமே!
கனவில் வந்தே கவியாய் மாறியக்
காதலே கற்கண்டே!
தினமும் என்னை அன்பால் கொல்லும்
தேவியே தேனகமே
மனமும் உணவும் நீயாய் மாறி
மனத்தினை ஆள்பவளே!
தனமே தவிலே உலகே உயிலே
தவிப்பினைத் தந்தவளே!
என்றும் உன்னை நினைத்து நானே
ஏங்கியே வாடுகிறேன்!
சின்ன மலரே செந்நிற தேகமே
சீக்கிரம் வாயேன்டி!
பொன்னே புகழே புகழின் உருவே
பரவசம் தந்திடவே
இன்றே வந்தே என்னுள் இணைந்தே
என்னை வெல்லேன்டி!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக