3/12/23

நம்மை காக்கும் இயற்கையே

 இயற்கை  காப்பது நமது பொறுப்பு,  
அதில் காட்ட வேண்டாம் வெறுப்பு, 

 இயற்கை என்பது நமது பொதுவுடமை,
 அதைக் காப்பதே நம்தலையாய கடமை, 

 இன்று மரங்களிடம் நாம்காட்டும் நேசம், 
 அதுவே நம் சந்ததிகள் சுவாசிக்கும் சுவாசம்,
 
பகைஇல்லா வாழ்க்கையை கொடுப்பதை விட, 
புகையில்லா சூழலை  வழங்கிடுவோம் நம்குழந்தைகளுக்கு, 

நீலவண்ணம் கொண்ட நம்பூமி  மீதிலே,  
பச்சைவண்ணம்  பூட்ட புதுசபதம் ஏற்போம், 

 மனிதன்இன்றி இயற்கையால் செழிக்க முடியும், 
  மரங்கள்இன்றி நம்இதயம் எவ்வாறு சுருங்கிவிரியும், 
 
ஆளுக்கொருமரம்  வளர்க்கும் காலம் வரும்,  
அதுவே நல்லதொரு பாடம் கற்றுத்தரும்,

  நம்சந்ததிக்கு சொத்துகள் சேர்ப்பதில் பெருமைஇல்லை, 
 நல்லதொரு இயற்கையை உருவாக்க பொறுமைஇல்லை, 

 புத்தகங்களின் பாரம் வளைக்கட்டும் தண்டுவடத்தை,  
காற்றுஉருளைகள் பிடித்துவிடக்கூடாது அந்த இடத்தை,

 நாம் எவ்வாறு காக்கிறோம் இயற்கையை, 
தன்னாலே நம்மை காக்கும் இயற்கையே,

 இயற்கை என்பது கடவுளின் வரமாகும், 
அதுவே மனிதஇனத்தை காக்கும் அரனாகும்,

 நமது இயற்கை நமது பொறுப்பு, 
அதை காப்பதே நமது சிறப்பு,  

0 Please share your thoughts and suggestions!: