தரணியில்...நீர் துளி பல கலந்து கடலாய் படர்ந்து வெப்பமுற,
கருமேகம் கருவுற்று மழைத்துளி பிறந்தென்னை முத்தமட்டு தழுவும்.
ஆறாக பெறுத்தோட நிலவொளியும் நழுவும். பச்சிலை மரங்கள்,
இச்சையில் ஆடும் இலைகள், காற்றுடன் அன்பு பாட,
மலர்கள் மகரந்தம் வீச பொன்மாலை மயங்கும்.
பின், இரவு அது இயற்க்கை விதி இருளில் ஒளிரும் எழில்,மதி.
ஏளனம் மிகுந்து மிளிரும் எழில். எனக்கிணை ஏதென்று
ஒலிரும் பொருள். கதிரவன் உதிக்க, மின்னும் அதிகாலை துளி பனியும்,
கர்வம் கொண்டு மதியும் வெட்க்கிகுணியும்.
மாயை தரணியில்! கதிர் அவன் தன்னை போர்த்த,
தரணியின் தோற்றம் அவிழும். மாயை தரணியில்...
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக