சாரல் மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாரல் மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/10/24

எந்தன் உறவே

 தனிமை கொள்கிறேன் யாவரும் நமக்கானவர் இல்லை...

என்று எண்ணும் நொடியில் என்னை தொட்டு செல்லும் தென்றலே!
 
நீ தொட்டு சென்றது எனக்காய் நீ இருக்கிறாய் என்றா?
 
என்று கேட்கும் கணத்தில் கன்னத்தில் அழகிய

முத்தாக மழைத்துளி விழுகையில் பேர் ஆனந்தம்...
 
எந்தன் கண்ணீராய் நீ வருகிறாயா எண்ணும்

தருணத்தில் சட்டென்று ஊணில் சூடானஒளி கண்டிப்பான

தந்தைப் போல்  நீவீர் யாவரும் எமக்கான எண்ணும் கணத்தில்

இருள் சூழ மனம் உடைகையில்
 
மீண்டும் என்னை தொட்டு செல்லும் தென்றல்...
 
அவளை  மேல்நோக்கையில் அழகிய அமுதமான அன்னை நிலா

என்னை கண்டு புன்னகைகிறாள் தாயாக,
 
கோடிக்கணக்கான நட்சத்திரம் என்னை கண்டு

மிளிர்கையில் கோடிஉறவுகள் கொண்டவளாய் மாறிப்போனேன்!

இயற்கை யாவும் எந்தன் உறவே

14/8/24

செல் இன்றி அமையாது உலகு

தொலைபேசி தொல்லையால் தொலைந்து போனது மனம்

லேண்ட் லைன் மாறி செல்பேசியாய் செல்லமாய்

மூன்றாம் கையாய் ஆனது இன்று வீட்டு உறவுகளும்

அறைக்குள்ளே அடக்கமாய் அனாதையாக செல் உடன்

பக்கத்து வீடும் தூரமாய் வேறு நாட்டு முகமறியா மனிதன்

கையடக்க ஹாய் என வீட்டிற்குள்ளே விபரீதமானவனாய்

என் நண்பனாய் என்றென்றும் உன்னுடனாய்

உலகமே நீயாக... செல் இன்றி அமையாது உலகு.......

13/8/24

தேங்கிய மழைநீரில்

தேங்கிய மழைநீரில்

விளையாடிய குழந்தையின்

வீடு முழுவதும்

மீன்குஞ்சுகளின் பாதச்சுவடுகள்

21/7/24

மழை பாட்டு

 சில்லுனு குளிர்காற்று வீசும்  நேரம் இது,

 சில்லுனு சாரல் மழை பெயும் நேரம் இது,

கும்முன்னு மணக்குது மண்வாசம்,

குயில் கூவுது கூவுது மரத்தொரம்,

தண்ணி ஓடுது மலை ஓரம்,

ஆறு நிறைஞ்சு ஓடுது கரை ஓரம்,

குழந்தைகள் சிரிக்குது மழை போல,

வானவில் தோன்றுது மாயம் போல,

சூர்யன் எட்டிப்பார்க்குது குழந்தை  

போல, சூர்யன் மின்னுது பொன் போல...

9/3/24

மழை

 உன்னிடம் இருந்து என்னை காக்க
 
தான் குடை கொண்டு வந்தேன்  
 
அதிலுல்ல ஓட்டை வழியாக வந்து என்னை

நனைத்து விட்டாயே!!! வருத்தத்தில் நான்

7/1/24

மழையும் போர்தான்

 குண்டுகள் பொழிந்தன... ஆயுதம் இல்லாதவர்கள் சிதறி ஓடினார்கள்....
 
ஆயுதம் உள்ளவர்கள் கையை உயர்த்தினார்கள்.....
.
 துளியாய் சிதறின .... நடுங்கிதான் போனார்கள்.....
 
தாக்குதல் நடந்த‌பின்னரே போர் முரசு ஒலித்தது....
 
கதவுகள் சாத்தப்பட்டன... கூக்குரல்கள் இடப்பட்டன.....
 
மாடிக்கு ஓடினார்கள் காப்பாற்ற.... டீ கடைகள் குடிக்கப்பட்டன....
 
வடைக்கடைகள் நொறுக்கப்பட்டன... ரோட்டுகடைகள் காலி செய்யப்பட்டது...

 நான்கு சக்கரத்தால் இருச்சக்கரம் அடிக்கப்பட்டது..... 

சன்னல் வீடு ரசித்தது.. சனல் வீடு சபித்தது..மழையும் போர்தான்..

11/11/23

சாரல் மழை

 சாரல் மழையாய் எனை தீண்டி சிலிர்க்க வைத்து !  

மனம்தனில் குறுகுறுப்பை உண்டாக்கி! 

எந்தன் மாற்றம்தனை என்னையே விந்தையாய் 

பார்க்கும்படி செய்துவிட்டாயே கள்வா!