8/11/23

அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று

 என் மனம் கவர்ந்த இளைய பிராட்டியைப் பற்றி எழுத வாய்ப்பளித்த, அந்த 
இறைவனின்

 மேல் சிறிது கோபம் தான்!!! ஏனெனில் அவளைப்பற்றி எழுத சொன்னவன், 

அவளின் எக்குணத்தைப் பற்றி வர்ணிக்க என்று என் கனாவில் கூறவில்லை!!
 
வந்தியரை மணந்தும் என்னை மயக்கும் அவள் அழகைப் பற்றி வர்ணிப்பதா?

 அருண்மொழிக்கு இரண்டாம் தாயாக திகழ்ந்தவர் அன்பைப் பற்றி வர்ணிப்பதா?
 
அரசியலில் சிறந்து என் மனம் ஆள்பவளின் அறிவைப் பற்றி வர்ணிப்பதா?

சோழ குலத்தில் உதித்த பெண் புலியின் வீரத்தைப் பற்றி வர்ணிப்பதா?

 அவளின் கருநீல கண்களைப் பற்றி வர்ணிப்பதா?
 
மல்லிகை மொட்டினை ஒத்த அவளது மூக்கைப் பற்றி வர்ணிப்பதா?

பன்னீர் மொட்டின் இதழ்களை ஒத்த அவளது இதழ்களைப் பற்றி வர்ணிப்பதா? 

கூந்தல் கோபுரமாய் எழுந்து அவள் அழகை உணர்த்தும் அழகைப் பற்றி வர்ணிப்பதா? 

 இப்படி எல்லாம் என் சிந்தனை பொன்னி நதி போல் ஓட, என் மனம் குழம்ப,

ஒரு நொடி கண் மூடி அவளைப்பற்றி நினைக்க, என் மனமும் மதியும்
 
ஒன்று சேர்ந்து சொன்னது, அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று!!!!!  

0 Please share your thoughts and suggestions!: