30/1/24

கண்களால் காதல் செய்து

 மெழுகுவர்த்திக்கு உயிர் குடுக்க உயிர் வித்தது தீக்குச்சி..... அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி...... வார்த்தைகள் அனைத்தும் மௌனம் ஆகியது நீ என் அருகில் இருக்கும் போது..... விழி மொழி பேசதா என் மதி வழி மாறி தவிக்கிறது.... கண்களால் காதல் செய்து...மனதளவில் திருமணம் செய்து... கனவுகளில் வாழ்ந்த என் வாழ்க்கை நிஜம்...

உன்னை நினைத்து நினைத்து

மணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து உருவான உதயமடா நீ! என் உயிரோடு உனை சேர்த்து கருவோடு இணைந்தவனடா நீ!என் வயிற்றில் கை வைத்து ரசித்ததுண்டு நான்! ஆறாம் மாதம் நீ அடையும் போது ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தவளடா நான்!நீ பிறக்க போகும் தருவாயில் என் வயிற்றிலேயே இறந்தவனடா நீ!உன் முகம் கூட பார்க முடியாத பாவியடா நான் பத்து வருடமாக உன்னை நினைத்து நினைத்து அழும்...

29/1/24

வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே

 தொட்டவுடன் வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே! நான் தீண்டினால் உனக்கென்ன தீட்டோ?   அழகிய மலர்களும் அதில் சிறு முட்களும் இடைவெளி இல்லா கொடியென படர்ந்தாலும் என்றைக்கும் காயம்படாது என் தேகம் உன்னால் தொட்டதன் தொடர்ச்சி துவண்டது உன் உணர்ச்சி -இப்படிக்கு தென்றல்.&nb...

என் இனிய கணினியே

 என் இனிய கணினியே உன் முகம் கண்டு என் நாள் துவங்க உன் கை பிடித்து என் பயணம் தொடர உன் அறிவால் நீ என் தவறுகளை திருத்திட அதில் நான் மகிழ்ந்திட நாட்கள் செல்லுதே. வெளிப்படுத்த முடியாத கோபமும்  உன்னோடுதான் சொல்லமுடியாத சில புலம்பல்களும் உன்னோடுதான்அடைந்த இருளில்  என் கண்ணீரும் உன்னோடு தான்.மகிழ்ச்சியோடு வீடு திரும்ப என்...

28/1/24

உம்மை பார்த்த பிறகு

 நில(வு) வொன்றும் போட்டியிட வந்துவிட்டால் நிற்கதியாய் நிற்க வேண்டி இருக்கும்  கடைசி வரைக்கும் நிம்மதி இல்லாமல்!!!!!!! உம்மை பார்த்த பிறகு!!!!!?...

மகள் எழுதும் முதல் கவிதை

 அம்மா என்கிற அழைப்பும் , தாய்மை என்கிற தத்துவமும் ஒரு பெண்மையை உணர்ந்தவளுக்கு மட்டுமே தெரியும்.  அம்மா  யாரோ நீ யாரோ நான், ஏனோ என்னை பெத்தெடுத்தாய்,ஏனோ என்னை உருவாக்கினாய் உன் பாசமோ, கண்டிப்போ என்னை வளர்த்தது... உன் அன்போ,அணைப்போ என்னை மிகைத்தது... உன் பாசத்தில் பாகுபாடு உண்டோ.. உன் அன்பில் அரவணைப்பு உண்டோ.. உன்...

வானம்

 வான்மகளின் முகத்தில் வெண்மேகங்கள் பொவுடர் பூச கருமேகங்கள் திருஷ்டி பொட்டு வைக்க மஞ்சள் சூரியன் மங்கலகரமாய் பொட்டு வைத்த...

தமிழ் கவிதையின் அழகு

 நம் உணர்வுகளை உயிர் மெய் எழுத்துக்களாய் பல இலக்கணங்களை கோர்த்து அழகான வார்த்தைகளாய் மாற பிறக்கிறது கவிதைஎன்ற சொல் இதற்கு நிகர் தாயின் கருவறையில் பிள்ளை உருவாகுவது மட்டுமேவேறு என்ன கூற எம் தமிழையும் தமிழ் கவிதையின் அழகை பற்றியும். பார்கவி பாரதியாரின் பிள்ளைகள் அல்லவா ந...

தாய்மை என்ற பாந்தம்

  தாய்மை 🌹திருமணம் முடிந்த பெண்ணின் எதிர்பார்ப்பு தாய்மை என்ற அந்தஸ்தை அடைய தவிக்கின்ற  உள்ளம்தனது நிலைமை அறிந்தும் ஒவ்வொரு மாதமும்  எதிர்பார்த்து       சோகத்தில் வாடிப் போன முகம்மனைவிக்கு ஆறுதலளித்த  உன்னதமான கணவரின் ஆசையும்என்றாவது ஓர் நாள் அவ்வாசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்வருஷங்களும் கடந்து விட்டதேவருடங்கள்...

27/1/24

என் வலிகளும் கரைகிறது

 பேனாவின் மையும் கரைகிறது... என் வலிகளும் கரைகிறது ... பேனாக்களும் தீரந்து விடுகிறது... என் வலிகளும் தொலைந்து விடுகிறது...  இரண்டும் நடந்தது நானும் நீயும் கலந்ததினால்....

பாட்டி

 என் அன்னையின் அன்னை அவளோ... ‌இல்லை அன்பின் அன்னை அவளோ...  கருவறையில் போற்றும் தெய்வம் அவளோ...  அவளை அறிவாயோ?....  காலனை வென்ற காரிகை அவள்...  உதிரத்தை பாலாய் தந்த நங்கை அவள்...  வியர்வையை உணவாய் தந்த யுவதி அவள்...  என் இதழ்கள் மலர கண்டு இன்புற்ற  இளையாள் அவள்...  பண்பை பாசம் கொண்டு...

வாழ்க்கை

 வாழ்வே! உன்னை ரசிக்க கற்றுக் கொண்டால்....   வாழ்வில் துன்பம் என்பது எனக்கு இல்லை &nb...

நான் பட்டம் வாங்க எண்ணியவள்

 தன்னலமற்று என்னலம் காத்தாள் என் வலியாற்ற தன் வலி மறைத்தவள் என் உறக்கம் பார்த்து தன் உறக்கம் மறந்தவள் பட்டையென தன்னை எரித்து நான் பட்டம் வாங்க எண்ணியவள் அம்மா&nb...

26/1/24

உன் காலடியில் என் கவிதை

 அன்பு அன்னைக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் இல்லை என்பது உனக்கு தெரியாது ஈகை குணத்துடன் பிறந்ததினல் உள்ளத்து வலிமை இருந்ததினால் ஊக்கத்துடன் வலம் வருகிறாய் நாள்தோறும் எளிமையான தோற்றமும், பேச்சும் ஏற்றமான உன் வாழ்கையின் அடையாளம் ஐம்பது மணநாள் முடிந்தாலும் ஒலிக்கிறது உன் தேன் போன்ற குரல் ஓடியாடி நீ வேலை செய்தாலும் ஒளடதம்...

மருதாணி

 உனது விரல்களை பிடிப்பதாலும்.. உள்ளங்கையில் அமர்வதாலும். எத்தனை வெட்கம் பார் மருதாணிக்...

தேவை

 தேவைக்காக பழகுவது தேவையில்லையென்று நினைத்த நான்;   இன்று தேவைக்காக பழகுவது தேவை என்கிறேன்;  தேவையினால்....தேவைக்காக பழகலாம், தேவைக்காக தேவையில்லாமல் அநீதி இழைக்க கூடாது......

உன் விழிகளில்

 உன் அழகைக் கண்டு காதல் கொண்டிருந்தால், நீ வேண்டாம் என்று சொல்லியப் பிறகு,வேறொரு பெண்ணைப் பார்த்திருப்பேன்..! ஏனோ எல்லோரிடத்திலும் உன்முகம்  பார்க்கிறேன், நீ அருகில் இருந்தால் அந்த நொடியே சாகிறேன்,  என்ன  தான் விந்தையோ உன் விழிகளில்.....

25/1/24

காதல் உணர்வு

தொட்டால் சிணுங்கி போல உனை கண்டால் கரைகிறேன்!  வானின் மதியை போல உனை பார்த்தால் மகிழ்கிறேன்!இரவா பகலா உனை என்னவென்று நான் சொல்வது முள்ளா மலரா உனை என்னவென்று நான் அழைப்பது! குறை குடமாய் தழும்புது அகமே உனை கண்ணருகில் கண்டாலே பனி மழையாய் பொழியுது மனமே உன் நினைவுகள்  எந்நாளுமே! மருதமாய் நீ எனை தொடவே காகிதமாய் உன் மடி சேர்வேன்! மூச்சாய்...

24/1/24

கடந்து வந்த பாதை

 கடந்து வந்த பாதையை,மனிதா  மறந்து விடாதே!!!,  அதன் முட்கள், "நீ கடக்க வேண்டிய  பாதையின் குழிகளை  எச்சரிக்கும்"  அதன் பூக்கள்,  "அதில் உன்னை  தொடர்ந்து செல்ல  ஊக்குவிக்கு...

ஜாதி என்னும் பெயரில்

காதல் என்னும் காகிதத்தை எழுதி கொண்டிருந்தவர்களுக்கு காலம் எழுதிய கடைசி காகிதமும் கையில் வந்து சேர்ந்தது ஜாதி என்னும் பெயரில...

23/1/24

உன் சிறையில்

 உனக்காகவே உன் சிறையில் அகப்பட்டேன், விடுதலை மட்டும் செய்து விடாதே, இப்படிக்கு ஆயுள் தண்டனை கைதி ஆகிய நான்!!&nb...

என் கனவினைத் தேடி

 நேற்றைய கனவில் வந்தமர்ந்த வண்ணத்துப் பூச்சியை தேடிக் கொண்டிருக்கிறேன். எந்த தோட்டத்தில் அலைகிறதோ என் கனவினைத் தே...

கள்வனின் காதல்

 உனக்கான ஒரு சில வரிகள்..  நீ கேட்ட ஒரு கள்வனின் காதல்..  என் அவனின் காதல்.. என் மனதை பறித்து கொண்டதனால் இது கள்வனின் காதலோ இது ...கனவில்  நித்தம் என் மொத்தம் கொள்ளை செய்த காதலோ இது இல்லை நிஜத்தில் என்னையே கொள்ளை செய்த காதலோ இது.. நேரில் கண்டதும் என் அத்தனையும் உனக்கே உனக்கு என்று தோன்ற வைத்த காதலோ...

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பில், அவனே என்னவன் என என்ன வைத்த அந்த கணம்.. அவனுடனான சந்திப்பு எப்போது என்றாலும் அது முதல் சந்திப்பை விடவும் மேலான சந்திப்பாகவே மாற வைக்கும் அவனின் பார்வை, அவனின் பேச்சு, அவனின் சிறு குறும்பு அவனின் சிறு பிள்ளை தனம், அவனின் அரவணைப்பு சில நேரங்களில் கண் மூடிய படி உதட்டின் ஓரம் ஒரு முத்தம்..  &nb...

20/1/24

மதி கொண்டு வென்றிடுவாய் களத்திலே

 ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையிலே சோகங்கள் சூழ்ந்து இருக்கையிலே மாற்றங்கள் வேண்டிடும் மனம்தனிலே ஏற்றங்கள் கொண்டு வந்திடுவாய் மற்றவை வரும் காலத்திலே... மதி கொண்டு வென்றிடுவாய் களத்திலே....

விடிவு கானும் விடிவெள்ளியே

 சில்லரையாய் சிதறிய என்னை சிற்பமாய் சேதுக்கினாய் நீ உன் ஆணிவேரில் என் மூச்சு  உயிர்த்தது என்னில் பல தடைகள் வந்தாலும் படைப்புகள் உருவாக்கி கல்லரை முதல் கருவரைவரை சுமந்திட்டு  விடிவு கானும் விடிவெள்ளியே&nb...

18/1/24

மனம் மயக்கும் மாலைப்பொழுதே

 மலர்கள் மலர்ந்து மனம் மயக்கும் நேரமும்  ஒன்றிரண்டு விண்மீன்கள் ஓராயிரம் ஒளியுடன் பிரகாசிக்கும் நேரமும் உணவளிக்கும் உழவர் கூட்டம் ஓய்வெடுக்க வரும் நேரமும் பறவைகள் இரைதேடி தன் குஞ்சுகளோடு கூட்டை நோக்கி வரும் நேரமும்  ஊடலுடன் ஓடிவரும் உள்ளங்கள் விரும்புவதும் இனிய மனம் மயக்கும் மாலைப்பொழுதே!...

வாழ்க்கையே நாடக மேடை

 திரையில் நடிப்பவர் மட்டும் நடிகர் அல்ல.வாழ்க்கையில் நடிப்பவரும் நடிகர் தான்..  மனதில் கவலை இருந்தாலும் வெளியில் சிரித்து நடிக்க தான் செய்கின்றோம்.. சூழ்நிலைக்கேன சில நேரம்... தெரிந்து சில நேரம்.. தெரியாமல் பல நேரம்... வாழ்க்கையே நாடக மேடை அதில் நாம் அனைவரும் நடிகர்கள்....

9/1/24

உன் ஞாபகம் பிரியாது

 பனித்துளியும் பூவுமாம் நானும் அவளும் காதல் எனும் இளம் காதலில் சூரியன் எனும் மறுக்க முடியாத திருமணத்தால் பிரிந்து போனாய் என்னை விட்டு ஆனால் உன் ஞாபகம் பிரியாது என்னை விட...

வாழ்க்கை பயணம்

 வாழ்க்கை பயணம் வகை வகையாக போகிறது! வரிசையாக நிற்கிறது! போக்குவரத்து நிறைகிறது! படியில் பயணம் தெறிக்கிறது! அதனால் வாழ்க்கைபாதியில் தெறிக்கிறது! குடும்ப மனம் குமுறுகிறது! ஆனாலும் அதுவே தொடர்கிறது!&nb...

8/1/24

உன்னை நேசித்து பழகு

 கனவில் தோன்றாத சந்தோஷமும் இல்லை....!  கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை...!  அன்பில் மயங்காத உயிர்களும் இல்லை...!  அறிவால் கிடைக்காத உயர்வும் இல்லை......!  உன்னை நேசித்து பழகு.... உலகம் அழகாகும்...!&nb...

நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்

கண்களும் இதயமும் ஒரே நேரத்தில் கலங்கும்,  காலம் பிரித்தாலும், மீண்டும் சந்திக்க மனம் ஏங்கும், அது தான் நட்பு... காதலின் பிரிவால் ரணமாகிய இதயத்திற்கு நட்பு மட்டும் மருந்தாகும் என்றும்... நட்பின் பிரிவை ஒருபோதும் ஏற்காது நம் மனம்.... எப்போதும் நட்பும் நண்பனும் நம் நலம்.  &nb...

7/1/24

என் மனம்

 நிலவும் நிகழ்ந்து விடும் , சூரியனும் சூரிக்கி விடும்,உன் பாதம் பட்ட இடமே  பூத்து விடும், உன்னிடம் பேச தமிழும் தத்தளிக்கும், உன் பொலிவை பார்க்க பௌர்ணமியும் காத்திருக்க என் மனம் தவிப்பதில் அதிசயம் இல்ல...

காதல் மதிப்பு

 வானில் தெரியும் நட்சத்திரங்களை எண்ணிய நான்!  நீ என் மீது வைத்திருந்த பாசத்தின் அளவை எண்ண மறந்தேன டி...  காலம் வெகு வேகமாக சென்றாலும்! நான் உன் மீது வைத்த காதல் மதிப்பு ஒரு போதும் குறையாத டி...  வெட்று காகிதத்தில் உன் பெயரை எழுதிய போது! அந்த காகிதத்தின் மதிப்பு உயரந்தத டி....   என் பாசத்தை உன்னிடம்...

உன்னை காணும் அந்த நொடிப்பொழுதில்

 இரவின் இசையில் இமைகள் கூத்தாட,  உந்தன் நினைவுகள் வந்து  கதைபேசிக்கொண்டு இருக்க, உன்னை காணும் அந்த நொடிப்பொழுதில் எனது இதழ் ஓரத்தில் தோன்றும் வார்த்தைகள்  உன்னிடத்தில் சேராமல் அலைமோதுகிறது...&nb...

மழையும் போர்தான்

 குண்டுகள் பொழிந்தன... ஆயுதம் இல்லாதவர்கள் சிதறி ஓடினார்கள்.... ஆயுதம் உள்ளவர்கள் கையை உயர்த்தினார்கள்...... துளியாய் சிதறின .... நடுங்கிதான் போனார்கள்..... தாக்குதல் நடந்த‌பின்னரே போர் முரசு ஒலித்தது.... கதவுகள் சாத்தப்பட்டன... கூக்குரல்கள் இடப்பட்டன..... மாடிக்கு ஓடினார்கள் காப்பாற்ற.... டீ கடைகள் குடிக்கப்பட்டன.... வடைக்கடைகள்...

தேடல்

எதுவரை என் தேடல்................ஏன் தேடலை கண்டடையும் வரை&nb...

6/1/24

புண்ணிய மழை

 இருக்க இடமிருந்தும்  குளம்குட்டையில் குடிப்பெயர்ந்த சிறுபான்மையினருக்கான சிறப்பரசியல் புரிகிறதோ புண்ணிய ம...

என் மூச்சுக் காற்று

 எனக்கான உதிரம் தந்த ஓருயிர்  .. என்றும் இனியில்லை என்றாலும்... எதையும் மனமகிழ்வாய் தொடங்கிட... என் எதிலும் நீர் இருப்பீர் அப்பா.. என் மூச்சுக் காற்று நின்றாலும்.. என் பெயரிலும் கூட... &nb...

நிலவின் உன் அழகிய முகம்

 நிலவின் உன் அழகிய முகம் ஒன்று பார்க்கிறேன் அதனை இப்பிரபஞ்சத்திலிருந்து ரசிக்கிறேன்  ஒளியின் வேகத்தில் செல்கிறேன் உன்னை நெறுங்கிட நீயோ! பல ஒளியாண்டுகள் தூரம் விலகிட அதனால்  உன் விண்வெளி இதயத்தில் நானோ துளைநதிட உன் இருண்ட ஆற்றல் கூந்தலில் மிதக்கிறேன்  விண்வெளி நேர வளைவின் உன் கருவிழியில் விழுகிறேன் மின்னும்...

அன்பெனும் மழையால்

 நான் சிறுவயதில் அழுத போது என் அப்பா என்னை தேற்ற, நன்பர்கள் அருகில் நிற்க்க, உறவுகள் என்னை சூழ்ந்து நிற்க, என் அம்மா மட்டும் என்னை அன்பெனும் மழையால் நனைத்தது இன்றுவறை காயமல் ஈரமாய் என் நெஞ்ஜில். &nb...

3/1/24

தென்றல் காற்று என்னைத் தெடர்ந்து செல்ல

 தென்றல் காற்று என்னைத் தெடர்ந்து செல்ல சாரல் மழை பின் வந்தது அப்படியே இரசித்துக் கொண்டிந்த போது  பக்கத்து வீட்டு அம்மை தன் துணிகளை மாடியில் எடுத்துக் கொண்டிருந்தாள் ஒருப்பக்கம் மழையின் கீர்த்தனையை இரசிக்கவா இல்லை அவளின் முணுமுணுப்பை கேட்கவா என்ற குழப்பத்தை தெடர்ந்து என்னை முணுமுணுக்க செய்தது மிளகாய் பஜ்ஜியின்...

என்மீது காதலே இல்லையா

 என்மீது காதலே இல்லையா என மாறி மாறி மணிக்கணக்கில் சண்டையிட்டு அழைப்பை துண்டித்து சிறிது ஆசுவாசமாக அமர்ந்த பின்பு தான் புரிந்தது இவ்வளவு நாள் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு காதலித்துக் கொண்டிருந்தோம் என்று....