29/8/24

தயக்கம்

 இன்னும் காத்திருக்கின்றன பிறிதொரு
 
கணத்தில் சொல்லிக் கொள்ளலாம் எனத்
 
தள்ளி வைக்கப்பட்ட வார்த்தைகள்....

மௌனம்

 வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது

அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ

அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்

அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்

மௌனத்தின் இளைப்பாறலில் என்னை

 நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்... 


28/8/24

மேகத்தின் மோகம்

 கார்மேகமாய் தனிமையில் திரிந்தேன்; 

வண்ணமுகிலாய் என் வானம் வந்தாய்;
 
நாம் உரச மின்னலாய் என்னுள் கலந்தாய்;
 
என் மனதில், நீ முழுமதியாய் வளர்ந்தாய்!
 
நம் மோதலைக் கண்டு வானம், கரம் தட்டி மகிழும்;
 
நம் காதலைக் காண, புவியெங்கும் புன்னகை பூக்கும்!
 
உயிர்வளியாய் நீயும், நீரியமாய் நானும்,
 
வாழ்வில் ஐக்கியமானால் மாரியாய்
 
உலகம் சென்று, பூவின் மடி சாய்வோம்! 

கானல் நீராய்

 இருண்ட இரவின் மதியின் புன்னகையில்

நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...

கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்

நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!


திறமைக்கு தலை வணங்கி

 தேரோட்டி மகன் என்று ஊர் வசைப்பாட
 
சபையில் தலை குனிந்தான் எங்கள் கர்ணன்!

ஆனால், போரில் கர்ணனை எதிர்க்க

 தேரோட்டியாகவே வந்தான் கண்ணன்!

கடவுள் என்று கொட்டம்மடித்தாலும்!

 திறமைக்கு தலை வணங்கியே! ஆகும்.

நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்

 பட்டமரம் கூட துளிர்க்கின்றதே மானிடா! -  மனம்

விட்டுப் போக ஒருநாளும் முயலாதே - தறி

கெட்டுப்போன நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்...!

எட்டிப் போன வட்ட நிலவும் உன் கிட்ட வரும்....!

வண்ண நட்சத்திரங்களும் நிச்சயம் உனை முட்ட வரும்....!

தோழியின் அறிவுரை

 நீ கண்ணாய் இருந்தாள்- அவர் உன் இமையாய் காத்திட

அவர் காற்றாய் இருந்தாள்- நீ கொடியாய்  பரந்து  அவர் புகழ் பாடிட

நீ சமைத்தாள்- அவர் அதை அமிர்தமாய்  கொண்டிட

அவர் வீட்டினை கட்டினால் - நீ கோயிலாய் ஆகிட

 எப்பொழுதும் பாசத்தையும் அன்பையும் கொண்ட

 இல்லறத்தை அன்பும்; அரனு வழி நடத்திடு என் தோழி

ஊமை காதல்

 விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது 

காணவில்லையே என்பதற்காக அல்ல 

கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக 

அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால் 

புரியாத  காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன் 

காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!


27/8/24

தூய்மை இந்தியா

 சாலையோரம் திகைத்து பார்த்தபடி இருந்த சிறுவனை

பார்த்த அந்தப் பொரியவர், என்னவாயிற்று என்றார்?

சிறுவன் கூரிய பதிலைக்கேட்டு சற்று கலங்கியபின் மௌனமாக சென்றார்.

ஐயோ! இந்த வண்டி இங்கு வரை வந்த விட்டதே,

வந்தால் என்ன நமக்கு பெரிய சாலை கிடைக்கும் அல்லவா!

உங்களுக்கு சாலை கிடைக்கும் அனால் எங்களுக்கு! 

வீடு கூட இருக்காது கலங்கியபடி நூறடி தொலைவில்

 சாலையொர தார்ப்பாய் போர்த்தபட்ட கொட்டகையை

 காண்பித்தான் வாழ்க(தூ)ய்மை இந்தியா! திட்டம்..


நட்பும் நலம் விரும்பியாக

 நட்பும் நலம் விரும்பியாக நாட்டம் கொள்ளுதே
 
என்னிடம் நடை பயணம் செய்திட! எல்லாம் நாட்களும் ....

என் உள்ளம்

என் உள்ளம் நோகுதடா என் ஆசை கண்ணாலா....

உன் கரம் பற்றாமல் என் நடைபாதையின்

தூரம் நீண்டு போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் ஆசை தீர்க்காமல் என் நித்திரை இரவுகள்

செலவாகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் தலையணை சேராமல் என் கூந்தல் மல்லிகை எல்லாம்

வாடிப் போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் அழைப்புகள் இல்லாமல் என் அலைபேசி ஓசை

ஜீவனின்றி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் இதழ் ஈரங்கள் என் கண்ணக்குழி நிறைக்காமல்

தூரம் விளகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...






நம்பிக்கையுடன் நான்

 என் ஆசைகள் அனைத்தையும் கனாக்கண்டேன்....

அவைகள் நிஜமாக மாறாத என்று ஏக்கம் கொண்டேன்

சிறு உறக்கத்தின் பின் விழித்தெழுந்தேன்...

கண்ட கனவுகள் யாவும் களைந்து விட்டன கண் திருஷ்டியாக...

கண்டது என்னவோ கனவுதான் அது ஒரு நாள் 

கலையாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நான்...!!!

பெண் சுதந்திரம்

 பாதையாவும் பாதம்படும்வரை வெற்றிடமே!

சோலையாவும் மழைபெய்யும்வரை போர்களமே!

கோழையாக நீ இருக்கும்வரை 

கேலியாகத்தான் ஊர் நகைக்கும்!

பேதைபோல மனம் பதைக்கும்!

ஆம்! உண்மை சற்று கசக்கும்!

ஆகையால், துணிந்து சபை ஏறிவிடு,

ஒருகை பார்த்துவிடு அடிமைப்பெண்ணே!

தலை நிமிரட்டும்! விழித்திமிரட்டும்!

மடமை உடையட்டும்! மெய்யியல் மலரட்டும்!

புதுமை பிறக்கட்டும்! பெண்ணியம் சிறக்கட்டும்!

யார் ஆதிக்கமாக இருந்தால் என்ன?

ஆணாதிக்கமாக இருந்தால் என்ன?

அதட்டும் உதடுகள் அடங்கட்டும்.

அடிமையென்னம் ஒழியட்டும்.

விடுதலை விடியட்டும்! பெண் சுதந்திரம் அடையட்டும்!


26/8/24

என் அன்பே

 உன் பார்வை என் மீது படாத தருணம்

உன் குரல் கேட்காத தருணம் 

என் பேரை நீ அழைக்காத தருணம்
 
உன் சிரிப்பை சுவாசிக்காத தருணங்கள்
 
என் நெஞ்சை விஷமுள்ளால்

நெய்தாற்போல் வலிக்கிறது என் அன்பே!

காதல்

 ஒரு காத தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அவன் ..

ஏனோ கோனி இருக்கும் கண்மையினை பார்த்துவிட்டு ...

அலைபேசியில் திறுத்துகிறான்...

ஆயிரம் நொடி கண்ணாடியின் உள்ளீடாய்

இருந்த முகப்பில் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தும் ..

அவள் கண்ணுக்கு அகப்படவில்லை எதுவும் .

அவளின் அவனே காண்கிறான் எல்லாம் ...

அவளின் உள்ளீடாக இருந்து கொண்டு💞

முயற்சி

 வலிகள் தந்திடும் வெற்றிப்படிகள்,

விழிகளில் நீங்கிடும் கண்ணீர் துளிகள்,

சிலந்தியின் முயற்சி, அது மகிழ்ந்து

 வாழ்ந்திடும் இல்லத்தின் நெகிழ்ச்சி......

24/8/24

இவ்விரவு நீளாத

 பொழுது விடியும் என்று தெரிந்தும்

 உன் முகம் என் கனவில் தெரியும்

 என்பதற்காக இவ்விரவு நீளாத

 என்று பேராசையோடு தூங்குகிறேன்

அன்பு காதலியே

 உன்னிடம் பேசும் போது
 
பொழுதுப்போக்காகத்தான் தெரிந்தது

உன் பேச்சின் மென்மையைக் கண்டு

 என் மனம் பூத்துக்குலுங்குகின்றது

 என் அன்பு காதலியே......... 

தன்னம்பிக்கை

 உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்

முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு 

நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..

அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..


குருவின் அருமை

 கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!!

தறியாகினும் சரியாகிட உம்மிடமே மீண்டு வருவேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

காலடி ஆயினும் அடியேன் அதில் கிடையாய் கிடை கிடப்பேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

இறையும் இறைமறையும் பலத்துறையும் கற்றுக் கொடுத்தீர்...

என் குறையும் பல கறையும் அது மறையும் வரை வெளுத்தீர்...!!!

கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை...,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!! - எனை சரியாக்கிடும்  நீரே...!!!

குழந்தைத் தொழிலாளி

 தேய்ந்த தோள்களிலே சாய்க்கும் சுமைகளுண்டு.

தள்ளாடும் தேகத்தை பந்தாடும் வலிகளுண்டு.

கல்லோடும் மண்ணோடும கரகாட்டம் நாளுமுண்டு.

கயிறோடும் பயிரோடும் சதிராடும் ஆட்டமுண்டு.

அனலோடும் புனலோடும் சடுகுடு ஆட்டமுண்டு.

கந்தகத்தில் குளியலுண்டு காலத்தின் அலங்கோலம்.

கால் வயிற்று கஞ்சிக்கு காடு மலை திரிந்ததுண்டு

மருண்ட விழிகளிலே மயக்கத்தின் மருட்சியுண்டு. 

பிஞ்சு விரல்களுக்கு நஞ்சோடும் நட்புமுண்டு.

பூந்தளிர் மேனியெங்கும் பிரம்புகளின் தழும்புமுண்டு. 

பிள்ளைக் கனியமுதின் பேரின்பக் காப்பியத்தின்

அவல நிலை கண்டு அல்லலுறும் அன்னை மனம்.

சில்லறை சில கண்டு அள்ளிட தினம் நின்று

துள்ளிடும் தந்தையின் தள்ளாடும் நிலை கண்டு

உள்ளிலே உயிர் சுருண்டு உறவதின் நிலை மறந்து

கொள்ளியின் கொதிப்பெனவே கொதித்திடும் மனம் கனன்று.


23/8/24

இவன் சாதனை

 அரங்கத்தில் இவன் செய்த சாதனையை பார்த்து

 அனைவரும் கைத்தட்டி பெருமிதம் அடைய,

 இரு கண்கள் மட்டும் கைகுப்பி அழுது கொண்டு இருந்தது, 

ஏனென்று பார்த்தால் இவனை ஈன்றெடுத்த

 தாயின் கண்களுக்கு மட்டும் இவன் சாதனையை

 விட இவனுடைய வலிகள் மட்டுமே அந்த

 தாயின் கண்களுக்கு தென்பட்டு இருந்ததாம்...

உன்னை நினைக்க

 அந்நாளில் அரட்டை அடிக்காமல், உறங்க சென்றேன்.

இந்நாளில் கனவிலாவது அரட்டை அடிக்க,

உறங்க சென்றேன். தேடுகிறேன் அவளை!

மீண்டும் தேடுகிறேன் அவளை!

என் தூக்கம் தெளிந்து உன் போதையில் தொலைந்த

என்னையும் இன்று தேடுகிறேன்.

என்னோடு பேச உன்னையும் தேடுகிறேன்.

இருநாள் பேசிய மயக்கம் பலநாள் தெளியவில்லை.

பலநாள் பேச விரும்பும் மனதும்

ஒருநாள் கூட உன்னை நினைக்க மறக்கவில்லை.

மனித சாதி

 ஓசோன் ஆடை கலைந்து;

மானமிழந்த பூமிதனைக் கொன்று;

மரணமெய்தக் காத்திருக்கும்

மனித சாதி, திருந்தப்போவதில்லை!


22/8/24

பாரதியின் படைப்புகள்

 அழகிய நீர்த்தடாகம். பரந்து விரிந்து வானம். பச்சை நிற புல்வெளி.

பூத்துக் குலுங்கும் மலர்கள். மயில்களின் நடனம். பறவைகளின் கீச்சல்கள்.

கிளிகளின் பாஷைகள். தேன் குடிக்கும் வண்டின் முயல்கள்.

மரங்கள் ஒன்றொடொன்று உரசும் ஊடல்கள்.

இவ்வளவு இருந்தும் எனக்கு பசி இருந்தது.

தின்றால் போதும் என்று கூறும் அளவுக்கு 

வயிற்றுப் பசி இல்லை. செவிப்பசி ஆம்.

இத்தகைய சூழலில் மனம் மறந்து செல்லக்கூடிய நிலையில் கூட,

என் செவிகளில் எதோ ஒன்று குறைபாடாகவே இருந்தது.

ஆம் அதுதான் புண்பட்ட மனத்திற்கு

மாபெரும் ஊன்றுகோலாய் இருந்த பாரதியின் படைப்பு.

கடலில் மூழ்கிய உயிர் துறக்க எண்ணியவனுக்கு கை நிறைய

 முத்துக்களை பரிசாக கொடுத்தாள் கடல் அன்னை.

ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது பாரதியின் படைப்புகளை வாசிக்கும்
 போது.

காலம் வருமென காத்திருந்து

 வாகைசூடிய நிழலாய் வெந்தனலில் வாடி 

மறைந்து ஓடி எங்கோ மலையில் ஏறி

உயிரே நீயென் உறவோ ? மாயையோ ? - என

அலப்பறித்து கேள்வி கேட்கும் மாயவனே 

செங்கதிரோனும் அந்நிலவும் சாட்சி கூற  

உற்றோறும்  நட்போறும் நீதியோறும்  பெற்றோறும் 

 கண் அகன்று கயலால் காட்சிக்காண

 என்னோடு  உறவாடிய கூற்று மறந்தாயோ

பெண்ணே நீயென் உறவெனக்  கூறி 

இது மெய்யேயென பொய் உரைத்து 

காணும் காட்சியை கானல் நீராக்கி

இன்று மன்றாட வழி வகுத்தாயே 

தீயே காற்றே புவியே மழையே 

உயிரேயெனக் கவிபாடியே நெஞ்சில் உனை

வளர்த்து இன்று உள்ளம் பொசுங்க 

காலம் வருமெனக் காத்து இருக்கின்றேன் 

உன் பொய்க்கெல்லாம் பதிலடி கூறவே !

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான்

 இந்த உலகத்தில் மூன்று எழுத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் ...

அம்மா மூன்று எழுத்து அப்பா மூன்று எழுத்து மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து அன்புக்கு மூன்று எழுத்து காதலுக்கு மூன்று எழுத்து

நட்புக்கு மூன்று எழுத்து மனம் மூன்று எழுத்து பணம் மூன்று எழுத்து

பாசம் மூன்று எழுத்து உயிர் மூன்று எழுத்து நிலம் மூன்று எழுத்து

காற்று மூன்று எழுத்து நம் விடும் மூச்சிற்கு கூட மூன்று எழுத்து தான்!!!!!!!!

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான் நண்பர்களே!!!!!!

காலம் போகுதே பாஸ்ட் அதை வீணாக்காதே வேஸ்ட்

இனி என்ன செய்யலாம் நெக்ஸ்ட் என்று யோசிப்பதே பெஸ்ட்


அதிசய பெண்ணே

 ஐம்புலம் மகிழும் அதிசய பெண்ணே உன்னை அடைந்திட வழி சொல்லடி.

உன்னை அடைந்திட வழியும் இல்லையென்றால் நான் அழிந்திட வழி சொல்லடி.


அப்பா கைக்கடிகாரம்

 அப்பா உங்கள் கைக்கடிகாரம் என்னவோ உங்களுக்குத் தான் சொந்தம்,
 
ஆனால் அதில் உள்ள நேரம் எல்லாம் எங்களின் தேவை கருதியே  நகர்ந்தன.

21/8/24

வறுமை

 வறுமை என்றால் என்ன? என்று என் தந்தையிடம் கேட்டேன்!
 
 அவர் இரு  குழந்தைகளை என் கண்ணில் காட்டினார்!

ஒரு பணக்கார வீட்டில் உள்ள குழந்தை சாப்பிட மறுத்து,

தட்டில் இருந்த இட்லியை தூக்கி அடித்தது!  

தெருவில் நின்ற இன்னொரு குழந்தை அந்த 

ஒரு இட்லிக்கூட கிடைக்காதா? 

என்று ஏக்கத்தோடு அந்த வீட்டை எட்டிப்பார்த்தது! 

இதோ பார் மகளே! என்று! அப்பொழுது புரிந்தது!

கிடைத்தவருக்கு  அது அர்ப்பம்!

கிடைக்காதவருக்கே  அது  அமிர்தம் என்று!

மரணமே போற்றி

 உயிரினங்கள் வாழ தேவனே போற்றி!! 

உலகம் சுழலும் உண்மை போற்றி!! 

ஆண்மை உணர்த்தும் பெண்மை போற்றி!! 

ஆதி நீ என சொல்லும் தாய்மை போற்றி!! 

கடந்து செல்லும் நம்பிக்கை போற்றி!! 

முடிவு உண்டு மரணமே போற்றி!! 

அன்பு உடையவர் உலகில் வாழ்க!! 

பண்பு உள்ளவர் பேச்சில் வளர்க!!  

விதைத்த விதையில் கசப்பும் உண்டு!! 

ருசித்த பழத்தில் இனிப்பு உண்டு!! 

பருவம் பாவம் பருத்தி பஞ்சு உருவமில்லாத இரக்கம்

 தான் இறைவன் உணரும்போது இவ்வுலகத்தில்

 நீயும் இல்லை உணர்வது மனிதனே இல்லை 

குருதியை மூங்கில் பையில் அடைப்பது யார்? 

குற்றம் சொல்லும் மானிடம் குறை கால் பயிர்  

என்று புரிவதில்லை உண்மையை 

உணரும்போது இவ்வுலகத்தின் நீயும் இல்லை!!


20/8/24

காதல் செய்வேன் என் கண்ணால்

 கற்பனையும் தீர்ந்து போகும் உன் அழகை வர்ணிக்க!!

 கண்ணதாசனும் தோற்றுப் போவார் உன் அழகை எழுத!!

 நா. முத்துக்குமாரும் நடுங்கித்தான் போவார் உன் நளினத்தை எழுத!

 நீ இல்லாத வாழ்க்கையை முடியாதுடி ஜீரணிக்க!! நான் வருவேன் உன் பின்னால்!!

உருக உருக காதல் செய்வேன் என் கண்ணால்!!

காரிருள் ஒன்று

  என்னைச் சுற்றி கரிந்து கொண்டே வருகிறது 

தடுமாறித் தடுமாறி இவ்வாழ்வை 

தொலைத்துக் கொண்டிருக்கிறேன்

என்னிருளில் எனைத்தேட முயல வேண்டாம் 

நீங்களும் தொலைய நேரலாம்! 

உம் தியாகமும் என்னிருளில் மூழ்கும்

என் கோப்பை மூடி என்னிருளிலே போட்டுவிடுங்கள் 

நான் தொலைந்ததுகூட இங்கே யாருக்கும் தெரிய வேண்டாம்.

என் வாழ்நாட்கள்

குறையும் என் வாழ்நாட்களை உன்னை
 
நேசித்த தினங்களாய் வரவு வைத்துக் கொள்.
 
என் வாழ்நாட்கள் சுழிந்து போனாலும்
 
உன்னை நேசித்த தினங்களாய்
 
எண்ணப்பட்டுக் கொண்டே இருப்பேன்.
 
நெஞ்சில் நிறுத்திக் கொள் உன் மீதான
 
என் பிரியங்களை எவருக்கும்
 
பங்கிட்டல்ல உரசிக்கூட தரமாட்டேன்.
 
என்றும் நீ எனக்கு அளித்த இத்தனிமையை
 
பொக்கிஷமாய் பாதுகாப்பேன். 

இவ்விறந்த காதல்

 இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் ஆகும்

இவ்விறந்த காதல் முழுதாய் அழுக்கிப் போக!

18/8/24

நண்பனின் மவுனம்

 தினம் தினம் திட்டும் அப்பாவை  

விட திட்டாமல் நகரும் 

நண்பனின் மவுனம் கொடியது!..

பாசத்தை கொடுத்த கடவுளே அப்பா

 எனக்கு உயிர் கொடுத்து உறவை 

கொடுத்து பண்பை வளர்த்து
 
பாசத்தை கொடுத்த- கடவுளே அப்பா!

அப்பாவின் நெஞ்சம்

 கஷ்டத்தை சொல்லாமல் மறைத்து

இன்பத்தை சொல்லி மகிழும்

 நெஞ்சமே அப்பாவின் நெஞ்சம்.

அன்று போல் இன்று இல்லை

 அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...

ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்

ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...

நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...??? 

இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.

வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...

மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...

நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..

நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...

பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..

நமக்குள் பாதியிலே  புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???

அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!


அர்த்தம்

 தொட்டதை விட பட்டதே அதிகம்

சந்தோசமாய் இருந்த ஓரிரு நிமிடங்களை விட 

சண்டை போட்ட மணிகளே அதிகம்.

ஆதரவை விட அவமானப்பட்டதே அதிகம்.

துணைவன் என்பதை விட 

துரோகி என்பதே பொருத்தம்.

சகிப்பு என்பதை விட

சமுக பொறுப்பு என்பதே அர்த்தம்.


தனிமை

 நீ இல்லாமல் தனிமையில் தவித்தக் காலங்கள் போய்.

நீயிருந்தும் தனிமையில் தவிக்கின்றேன் கொரோனாவுடன்!!

நிம்மதி

 மனிதனுக்கு தேவை நிம்மதி

அந்த நிம்மதியை தேடி அவன்

இல்லக்கிறான் அவனின் மதி

மதி இழந்த பிறகு அவன் அவனாகவும்

 இல்லை மனிதனாகவும் இல்லை.

உன் நினைவுகளுடன்

 உன்னுடன் சேர்ந்து ரசிக்க வேண்டிய மழையை!!!

நான் உன் நினைவுகளுடன் சேர்ந்து ரசித்தேன்!!!

கண்ணாடி

என் ஒளி அவள் மீது பட
 
வெட்கத்தில் கரைந்த என் முகம்
 
கரைந்த என் வெட்கத்தை
 
அவளின் கண்களில் பார்த்தேன்

மன அமைதி

 அமைதியான இடத்தில் ஆரவாரம் செய்யும் மனம் 

அமைதி களைந்த பின்னும் தொடர்கிறது 

நீயில்லா நேரம்

 நெற்றி வகிட்டில் பொட்டு வைக்காததற்கும்

மல்லி வேண்டாமென முல்லை சூடுவதற்கும்

மாலை வேளையில் ஓய்ந்து படுப்பதற்கும்

இட்டிலிக்கு எண்ணைப் பொடியை இணையாக்குவதற்கும்

தீண்டல் வேண்டாப் பொழுதுகளில் தள்ளியிருப்பதற்கும்

உனது அனுமதி தேவையெனில், நீயில்லா

 நேரத்தை கொண்டாடித்தான் தீர்ப்பேன்...

16/8/24

முதல் காதல்

 மீசை முளைப்பதற்குள் ஆசை முளைத்து
 
ஆழத்துளைத்து மூளை உறைந்து 
 
உடல் சிலிர்ந்து உள்ளம் போடும்
 
ஆர்ப்பாட்டத்திற்கு "முதல் காதல்" என்று பெயர்!!!!

தனிமையின் வெற்றி

 வெற்றியோ தோல்வியோ, எதையும் சமாளிக்கும்

மன உறுதியை தந்தது, என் தனிமை உலகம்!

தனிமையில் போராடுகிறேன், வெற்றி கிடைக்குமா என்று...

நான் வருந்தவில்லை ஏனென்றால்,

நான் தனிமையில் போராடுவதே,வெற்றி தான்!!!

மலர் தோட்டம்

 காற்றில் ஆடும் மலர்கள் விழிகளுக்கு

 பசுமை கொடுக்கும் ரோஜாகள்

உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்

 பச்சை பசுமையான மரங்கள்

 இது வண்ண மலர் தோட்டம்

14/8/24

நிலா

 நிலா தங்கள்முகம் வெண்மை அது போல

 தங்கள் உள்ளமும் அப்படி தானே?

உங்கள் உள்ளம் பிரகாசமானது.

பெண் உள்ளம் குடும்பத்திற்கு 

வெளிச்சம் கொடுத்து மகிழ்ந்தாள், 

நீங்களோ உலகத்திற்கே வெளிச்சம்

கொடுத்து மகிழ்வித்தாய் நன்றி நிலா.நன்றி . 

செல் இன்றி அமையாது உலகு

தொலைபேசி தொல்லையால் தொலைந்து போனது மனம்

லேண்ட் லைன் மாறி செல்பேசியாய் செல்லமாய்

மூன்றாம் கையாய் ஆனது இன்று வீட்டு உறவுகளும்

அறைக்குள்ளே அடக்கமாய் அனாதையாக செல் உடன்

பக்கத்து வீடும் தூரமாய் வேறு நாட்டு முகமறியா மனிதன்

கையடக்க ஹாய் என வீட்டிற்குள்ளே விபரீதமானவனாய்

என் நண்பனாய் என்றென்றும் உன்னுடனாய்

உலகமே நீயாக... செல் இன்றி அமையாது உலகு.......

பள்ளிப் பருவம்

தீப்பெட்டிகள் ரெயில்பெட்டிகளாகவும்,

சோடா மூடிகள் சக்கரமாகவும்,

மாறியிருந்த நாட்கள் அது...

மனம் முழுக்க மகிழ்ச்சியம்,

முகத்தில் புன்னகையும்,

குடியேறிய நாட்கள் அது...

மரத்தடியே மைதானமாகவும்,

நொன்டியே பொழுதுபோக்காகவும்,

நிலைத்திருந்த நாட்கள் அது...

பள்ளிப் பருவம் காணல் நீரானதே,

கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவுடன்......... 


13/8/24

தேங்கிய மழைநீரில்

தேங்கிய மழைநீரில்

விளையாடிய குழந்தையின்

வீடு முழுவதும்

மீன்குஞ்சுகளின் பாதச்சுவடுகள்

இன்னிசை பாடும் வண்டுகள்

  இன்னிசை பாடும் வண்டுகள்!

 தேன் உறிஞ்சும் வனத்துப்பூச்சிகள்! 

பச்சை பசேலென செடி கொடிகள்! 

அழகை பூத்துக்குழுக்கும் பூக்கள்! 

விண்ணைதோடும் மலைகள்! 

வளரேந்து நிற்கும் மரங்கள்!

 துள்ளி குத்திக்கும் மீன்கள்!

இதுவே புண் அகை சிலிர்க்கும் இயர்க்கை !

நிழலாய் நான் வாழ்கிறேன்

என் கனவுக்குள் கனவாய் நீ இருக்கிறாய்

என் கண் விழிக்குள் பல படமாய் நீ தெரிகிறாய்

நிஜமாய் நீ இருந்தாலும்

நிழலாய் நான் வாழ்கிறேன்