14/10/24

கடவுளின் மருவுருவமே

 கடவுளின் மருவுருவமே! 

உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,

உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,

 நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!

நான் சுவாசிக்கும்  காற்றே அவள் தான் அம்மா.....

எட்டிப்பிடிக்கும் கனவுகள்

 என்னால் எதுவும் முடியும் என்ற ஊக்கச் சொல்லே

எட்டிப்பிடிக்கும் கனவுகள் "எட்டாத்தூரத்தில் இல்லை"

என்பதை உணர்த்தி என்றென்றும் நான் வெற்றி பெற

எப்போதும் எனக்குள் ஒலித்து என்னுடனே பயணித்து
 
எனது அடையாளமாய் என்னை உயர்த்தி தனித்துவமாக்கி
 
என் முயற்சியின் பலனாய் வெற்றி பெற வாய்ப்பளிக்கும்.

13/10/24

ஆசிரியை

 அம்மா சொல்வாள் நேர்த்தியாக உடை அணி என்று;

அப்பா சொல்வார் தொலைக்காட்சி பார்க்காதே என்று;

பாட்டி சொல்வாள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் என்று;

தாத்தா சொல்வார் கைப்பேசி வேண்டாமே என்று;

சகோதரன் சொல்வான் புத்தகம் எடுத்துப் படி என்று;

ஆனால், அனைவரிடமும் நான் சொல்வேன்....

உங்களின் எல்லா முகமுமாக இருக்கும்

என் ஆசிரியை சொன்னால் மட்டுமே செய்வேன் என்று......

வாழ்க ஆசிரிய பெருமக்கள்! நன்றி

பெண்ணே

 பெண்ணே நீயோ மேகத்தைப் போன்றவள்

 நானோ வற்றிய நதியைப் போன்றவன்
 
நீ மனம் வைத்தால் என்னை காப்பாற்றலாம்

 ஆனால் நீ ஏனோ மறுக்கிறாய்.

7/10/24

புன்னகை

 உன்னால் ஆயிரம் பேரை கோபம் படுத்திவிடலாம்,

அந்த ஆயிரம் பேரையும் சிரிக்க வைத்தால் நீதான் மாமனிதன்.

2/10/24

மங்கிய நிலா

 மங்கிய நிலா மனிதரில்லா வீதிகள்

அசையா மரங்கள் துளிக் காற்றில் லாமல்

நனைந்த உடல் சொட்டு
 
அன்பில்லா மனிதர்களின் சொத்து

பேனா

 தலையில் கிரிடம் அணிந்த கர்வம்

தலைகுனிந்து எழுதும் போது இல்லையே!!!!

பட்டமோ பட்டையமோ ஏதும் இல்லை உனக்கு...

பட்டமும் பட்டமும் நியின்று இல்லை எனக்கு....

உலகை ஆளும் அரசனும் உன் உயிர் எழுத்துக்கு மயங்கிடுவான்

ஆயிரம் ஆயிரம் படைகளும் உன் ஆய்த எழுத்துக்கு அடிபணியுமே!!!


6/9/24

என் இனியவளே

 ஓ தாமரைய தேன்நிலவு நேரத்திலெல்லாம்

இச்சூரியனை காணாமல் மனம் வாடினாயோ

என் உயிரே கிழக்கு வாசலில் உன்
 
பார்வையில் தென்பட்டவுன் முகம்  மலர்ந்து
 
என்னை வரவேற்றயோ என் இனியவளே

மறக்க செய்து விடும் காலம்

 கையில் கிடைத்த களிமண் பொம்மையை

கை தவறி விடுமோ களவு போய்விடுமோ

கண் பட்டுவிடுமோ என்று கண்கள் காட்டும்
 
மாய பயத்தினால் காதல் செய்யவும் கட்டி
 
அணைக்கவும் மறக்க செய்து விடும் காலம்

காதல் விசை

 இணையத்தின் காந்த விசையால் சந்தித்தோம்..

இதயத்தின் ஈர்ப்பு விசையால் ஒன்றானோம்...

காலத்தின் உராய்வு விசையால் பல கனம் தொலைத்தோம்..

இயற்கையின் மீள் விசையால் மீண்டும் இணைந்தோம்...

நம் இருவரின் காதல் விசையால் பல பருவம் கடந்து பயணிக்கிறோம்...


4/9/24

நம் நட்பு

 விண்ணில் ஆயிரம் பூக்கள் பூப்பது  உண்டு.. 

அதேபோல் நம் மனதில் பூக்கள் ஒரு பூ அது நம் நட்பு... 

நம்பிக்கை

 உன்னிடம் நம்பிக்கை இல்லை என்றால்.. 

சிறு கல்லைக் கூட மண்ணாக மாற்ற முடியாது.. 

ஆனால் உன்னிடம் நம்பிக்கை என்று
 
ஒன்று இருந்தல் விற்பனை கூட உன்னால் தொடமுடியும்... 

தமிழ் தாய்

 "உன் பிறப்பு பொதிகை பூர்விகமோ தமிழகம்

உன் உதடு திருக்குறள் உள்ளமோ திருவாசகம்
 
உன் விரல்கள் பதீற்றுபத்து பற்களோ முத்தொள்ளாயிரம்

உன் இடை குறுந்தொகை எடையோ ஐந்தினை ஐம்பது

உன் பக்தி தேவாரம் புத்தியோ நெடுந்தொகை

உன் குணம் திருப்புகழ் மனமோ பாஞ்சலிசபதம்

அணிகலன்களாய் தலையில் சீவகசிந்தாமணி

இடையில் மணிமேகலை காதில் குண்டலகேசி கையில்
 
வளையாபதி பைந்தமிழே செந்தமிழே தமிழ்த்தாயே!!!!

எங்களின் பேச்சும் மூச்சும் உயிரும் நீதானே"

அவன்

 ஆயிரம் ஆண்களின் பார்வைக்கூறிய அர்த்தத்தை

அறியும் அவளுக்கு, ஏனோ அவன் பார்வைக்குரிய

 அர்த்தம் புரியவில்லை, அதைத் தேடிக் கொண்டே
 
தொலைந்து கொண்டிருக்கிறாள்; அவனிடம்

29/8/24

தயக்கம்

 இன்னும் காத்திருக்கின்றன பிறிதொரு
 
கணத்தில் சொல்லிக் கொள்ளலாம் எனத்
 
தள்ளி வைக்கப்பட்ட வார்த்தைகள்....

மௌனம்

 வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது

அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ

அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்

அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்

மௌனத்தின் இளைப்பாறலில் என்னை

 நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்... 


28/8/24

மேகத்தின் மோகம்

 கார்மேகமாய் தனிமையில் திரிந்தேன்; 

வண்ணமுகிலாய் என் வானம் வந்தாய்;
 
நாம் உரச மின்னலாய் என்னுள் கலந்தாய்;
 
என் மனதில், நீ முழுமதியாய் வளர்ந்தாய்!
 
நம் மோதலைக் கண்டு வானம், கரம் தட்டி மகிழும்;
 
நம் காதலைக் காண, புவியெங்கும் புன்னகை பூக்கும்!
 
உயிர்வளியாய் நீயும், நீரியமாய் நானும்,
 
வாழ்வில் ஐக்கியமானால் மாரியாய்
 
உலகம் சென்று, பூவின் மடி சாய்வோம்! 

கானல் நீராய்

 இருண்ட இரவின் மதியின் புன்னகையில்

நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...

கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்

நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!


திறமைக்கு தலை வணங்கி

 தேரோட்டி மகன் என்று ஊர் வசைப்பாட
 
சபையில் தலை குனிந்தான் எங்கள் கர்ணன்!

ஆனால், போரில் கர்ணனை எதிர்க்க

 தேரோட்டியாகவே வந்தான் கண்ணன்!

கடவுள் என்று கொட்டம்மடித்தாலும்!

 திறமைக்கு தலை வணங்கியே! ஆகும்.

நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்

 பட்டமரம் கூட துளிர்க்கின்றதே மானிடா! -  மனம்

விட்டுப் போக ஒருநாளும் முயலாதே - தறி

கெட்டுப்போன நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்...!

எட்டிப் போன வட்ட நிலவும் உன் கிட்ட வரும்....!

வண்ண நட்சத்திரங்களும் நிச்சயம் உனை முட்ட வரும்....!