9/1/25

இரு உயிர்

இரு உயிர் இணைந்து மனைவியானால்....

பிறகு ஈன்றெடுத்த மழலையானால்.....

அதனை முத்தமிட்டு மூன்றெழுத்து.....

அம்மாவானால் காலம் செய்த கோலத்தினால்

வயதானாள் பல உருவங்கள் பெற்று.....

உறவைப் போற்றுபவள் பெண்......

தீண்டாமை

வெள்ளை நிற மனிதனின்

இரத்தமும் சிவப்பு தான்

கருப்பு நிற மனிதனின்

இரத்தமும் சிவப்பு தான்

மனிதா நிறங்களை பார்க்காதே

அவர்களின் குணங்களை பார்
 
உலகம் ஒற்றுமை காணும்......!!!

8/1/25

உன் கரம் பிடித்து

என் முதுகில் குத்திய தோழரே

நீ தடுமாறி கீழே விழுகின்ற போது 

உன் கரம் பிடித்து தூக்கிவிட்டு
 
தான் நான் கீழே விழுவேன்

தோழரே உனக்கு எப்படியோ
 
எனக்கு நட்பு உயர்வானது 

தந்திரம்

தந்திரத்தால் சிங்கத்தை சிறைப்பிடித்து விடலாம்
 
தந்திரம் ஆனவனே அந்த சிறைக்குள் நீ ஒருபோதும்

செல்ல முடியாது சிறையில் இருப்பதால் சிங்கம் ஒருபோதும்
 
ஊளை இடுவதில்லை கர்ஜித்து கொண்டுதான் இருக்கிறது

மனிதனே தந்திரத்திற்கும் தைரியத்திற்கும்
 
உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள் 

யார் புத்திசாலி

மனிதன் தன் வளர்ச்சிக்காக காடு அழித்து 

நாட்டை உருவாக்கினான் மீண்டும் நாட்டைவிட்டு 

மன நிம்மதிக்காக காட்டுக்கு செல்கிறான் 

யார் புத்திசாலி ஆதிவாசி பற்றி நீ யோசி