19/12/24

நினைவும் நீ

நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதி நீ

என்னை விட்டு நீங்காத நினைவும் நீ

வாழ்க்கையின் இருளை நீக்கும் சுடர் நீ

காயங்கள் ஆற்றும் கல்வனும் நீ

கண்ணீரைத் துடைக்கும் என்வாழ்த் துணையும் நீ

17/12/24

அற்புத வடிவம்

 அம்மா மனதுக்கு ஆறுதலையும் உடலுக்கு தெம்பையும் தரும்

அற்புத சொல் அம்மா உச்சரிக்கும் உதடுகளுக்கு 

உத்வேகம் தரும் அட்சய பாத்திரம் அம்மா எல்லா 

உயிர்க்கும் பொதுவான மூல மந்திரம் அம்மா உணவில் கூட

உயர்ந்தவைகளை பிள்ளைக்கு தரும் தியாக பிரம்மம்


7/12/24

ஒரு நாள்

 குடியை நிறுத்த நாளை நாளை என்று நாளைக் கடத்தி வந்தவன

ஒரு நாள் நிறத்தியே விட்டான் தன் உயிர் மூச்சை... 

30/11/24

நீ யார்

 ஒவ்வொரு முடிவுகளுக்கு பின்னாலும் முடியா நினைவுகள் உண்டு... 

ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் கனத்த கண்ணீர் துளிகள் உண்டு... 

மறதி மனதுக்கு சொல்லும் ஆறுதலே தவிர, மாற்றத்தே உண்டாக்கும் மந்திரம் அல்ல...

நினைவுகள் மட்டும் இல்லையென்றால் நிமிடத்திற்கு ஒரு முறை நீ யார் என்றக் கேள்வி பிறந்திருக்கும்...

28/11/24

காதல்

 நினைத்துப் பார்த்தால் அது இனிக்கும்;

நினைக்கும் போதெல்லாம் அது கசக்கும்;

உலகம் உள்ள வரை அது இருக்கும்;

இல்லையெனில் அதன்டா நரகம்.


27/11/24

தேவதை

 காத்து வாக்கில் திரிந்தவன், இன்று உன்னால் உயர்ந்தான்

உலகில் உன் வருகை உணர்ந்தவன், உலகை துறந்தான்

சட்டென விரைந்தான், கற்பனை கலந்தான், கவிதை படைத்தான்

தேவதை என்ற ஒரு ‌வார்த்தையில் கவிதையை முடித்தான்.

26/11/24

காடுகள்

 வேட்டைகார்களுக்காக காத்துக்கிடக்கின்றன காடுகள்

வெறுமையாய் விலங்குகளின்றி வெந்துபோய் கிடந்தன 

மரங்கள் வெப்பத்தினால் வரும் தலைமுறை
 
காணும் காடுகளை பாடப்புத்தகத்தில் மட்டுமே....

25/11/24

உறக்கமில்லா என் இரவு

 உறக்கமில்லா என் இரவுகளின் சொந்தகாரன் அவன்

ஊமையாய் சிந்தும் என் கண்ணீருக்கு காரணம் அவன்

ஆயிரம் முறை ஆசை கொண்டான் வெறும் உடல் மீது

நாடினான் ஓர் விலைமாது தேடினான் உடல்போதை

விளைவோ பெற்றுக்கொண்டான் ஓர் புதிய நோயை.

கத்திக்கப்பல்

 காகிதக் கப்பலானாலும் கத்திக்கப்பல் 

தான் வேண்டுமென்று நங்கூரம் என்னவென்றறியா 

சிறுபிள்ளை ஒன்று மழை நீரில் விட்டக் காகிதக்கப்பல்...

அலைகளில் அசைந்தாலும் மழையால் மூழ்கி விட்டது

சிறு பிள்ளைகளின் சிரிப்புக்காக கோமாளி வேடமிட்டாடும் தகப்பனாய் 

சற்று நேரம் நீரைக் கீரிப்பாய்ந்திருக்கலாம் இந்த கத்திக்கப்பல்...💕


22/11/24

இன்பமற்ற வாழ்க்கை

மனதோரம் எப்போதும் ஏனென்று தெறியாத ஒரு தயக்கம்

வலிகள் என்னவென்று புரியாமல் கண்களும் சிலநேரம் கலங்கும்

உதடுதள் பேச கூட தெரியாதவாறு உளரும் காரணம் அறியாமல்

படபடக்கும் இதயம் சுவாசிக்க முடியாமல் பெரு மூச்சை விட்டு

வாழ்கின்றேன் இன்பமற்ற வாழ்க்கையுடன்!

21/11/24

உன் அழகில்

 என் வாழ்வின் வரம் நீ என் அன்பின் அருள் நீ 

என்னை நேசிக்கும் தாய் நீ என் அனைத்துறவின் வடிவம் நீ 

உன் அழகில் உன்னை ரசிக்கும் ரசிகனானேன்

உன் கன்டிப்பில் உன் பிள்ளையானேன் 

என்றும் உன்னை நேசிக்கும் காதலனாக 

உனக்கு அன்பலிக்கும் கனவனாக நீ வருந்தும்

நேரங்களில் தேடும் தாய் படியாக நான் இருப்பேன்

20/11/24

உன் நினைவில்

 என் அன்பு ஆசையில் ஒரு கடிதம்

என் உள்ளத்தை நிறப்பும் மகிழ்ச்சிக்கு

என் உயிரை பரிசளிப்பேன் உண்ணாமல்

நீ இருக்க என் உயிர் தந்து உணவலிப்பேன் 

உன்னை உயிர் என்றோ அல்லது உடல் என்றோ

சொல்ல மாட்டேன் எனேன்றால் இவை என்றோ 

ஓர் நாள் அழிந்து விடும் நீ அழிவில்லா 

உலமாக வாழ என் உலகை நான் தருவேன்

அதில் நீ உயிர் வாழ என் உயிரும் நான் தருவேன்

நான் சிரிக்க உன் கவலை மறந்து நீ சிரிப்பாய் 

அந்த சிரிப்பில் மட்டுமே என்னிடம் பொய் உரைப்பாய்

உன்னோடு இருக்கும் போது உன் முகத்தில்

நான் தொலைத்தேன் நீ இல்லா நேரங்களில் 

உன் நினைவில் தான் தொலைத்தேன் 

6/11/24

உன் இதழ்கள்

உன் இதழ்களில் பூசும் சாயத்தின் மீது

நான் கோபம் கொண்டேன்

எனக்கு உரிமையான உன்  இதழ்களை

நீ பூசிய சாயம் சுவைத்ததை கண்டு...

5/11/24

நிலவும் நானும்

 அந்தி சாய்ந்த அழகிய நேரம்

கொட்டி தீர்த்த மழையின் ஈரம்

வந்து நின்றேன் வாசலின் ஓரம்

அவனை எதிர்பார்த்தே மனமும் வாடும்

ஆறுதல் கூற நீ வந்தாயோ வானின் ஓரம்

காதலுடன் காத்திருந்தோம் நானும் நீயும்.

4/11/24

வியர்வை துளிகள்

 என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அம்மா கடிந்துரைக்கு

நான் சிந்தும் கண்ணீர் துளிகள்...
 
என் வாழ்க்கையில் வெற்றி பெற்றும் வியர்வை துளிகள்.... 

26/10/24

என் உலகமே

கண்கள் கலங்கி தினமும் நின்றேன்

கைகளாய் நீ துடைக்க வந்தாய்

கால்கள் தடுமாறி வாதையில் விழுந்தேன்

கதவுகள் பல திறந்து பாதை தந்தாய்

தூக்கமின்றி என்னைக் காத்துக் கொண்டு

என் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றித் தந்தாய்

கர்ப்பத்திலிருந்து இறக்கிவைத்து

சிற்பமாக என்னை செதுக்கி தந்தாய்

மடியில் தவழும் வாய்ப்பைத் தந்தாய்

மண்ணுலகில் நீயே வாழ்க்கை தந்தாய்

பகைவரையும் நேசிக்கும் அன்பை தந்தாய்

பாவத்தையும் சகிக்கும் பண்பை தந்தாய்

மன்னிக்கவும் மறக்கவும் கற்றுத் தந்தாய்

மனிதநேயத்தை பரிசாய் தந்தாய்

உலகமே தெரியாமல் நீ வளர்ந்தும்

என் உலகமே நீதான் என்றாய் இன்னொரு பிறப்பு 

நான் எடுத்தாலும் அன்பு பெண்ணே நீயே என் தாய்

நிலை அல்ல வெற்றி

 நிலை அல்ல வெற்றி

நிஜமல்ல தோல்வி

உன்னில் இருப்பது முயற்சி

உணர்ந்தவர்க்கு வளர்ச்சி

வாழ்வில் வரும் தடைகள்

அதுவே உனக்கு படிக்கல்

உழைத்துக் கொண்டிரு கருவி போல்

ஓடிச்சென்று இரு அருவி போல்

உழைப்பில் வரும் வியர்வை

தரும் உனக்கு உயர்வை

24/10/24

நம் காதல்

 உயிருள்ள வரையில் உன்னுடன் இல்லையென்றாலும் உன் உணர்வுகளோடு..

நிஜம் இல்லை என்றாலும் நிழலாய் உன் நினைவுகளோடு..

உன் காதலை சுமப்பேன் என் காலம் உள்ள வரையில் என் கண்களோடு கண்ணீராய்......

பூக்களின் மீது தண்ணீர் துளிகள் பூக்களின் அழகை கூட்டியது நம் காதல் 

தந்த கண்ணீர் துளிகள் உன் நினைவுகளால் தினம் தினம் என்னை வாட்டியது.....


22/10/24

கற்பனையில் ஓர் உலகம்

 அன்பே நிஜத்தில் நீ இல்லை இருப்பினும் என் நினைவுகளோ
 
உன்னை தாண்டி வேறு ஒன்றை நினைப்பதில்லை.....

உன் விழி பார்க்கும் தூரத்தில் இருக்க வேண்டும்
 
என் எண்ணினேன் இன்று ஏனோ உன் விழிகள்
 
என்னை காண மறுக்கின்றன....

காலங்கள் போகின்றன உன் காதலோ தேய்கின்றன...

இருப்பினும், உன்னோடு தொடரும் என் பயணம்.....

என் கனவுகளோடு உன் நினைவுகளை
 
கோர்த்து கற்பனையில் ஓர் உலகம்....

மனிதனின் உணர்ச்சி

 ஓசையில்லா ஒரு பாடலின் ரசம்...

அலையில்லா ஒரு கடலின் இரைச்சல்...

சப்தமில்லா ஒரு குழந்தையின் அழுகுரல்...

தேனில்லா ஒரு பூவின் மணம்...

பனியில்லா ஒரு இரவின் குளிர்...

சொல்லில்லா ஒரு மொழியின் பொருள்...

வில்லில்லா ஒரு அம்பின் குறிக்கோள்...

சுவையில்லா ஒரு உணவின் தரம்...

துன்பம் துரத்தாது, துரோகம் தீண்டாது,

பகை பல்லிளிக்காது வாழும் 

ஓர் மனிதனின் உணர்ச்சிகளிவை...!!!

21/10/24

சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே

 சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே
 
மனிதன் ஆயிரம் கவலைகளை சுமக்கிறான்.

எவன் ஒருவன் தன் கவலைகளை இன்பமாக

மாற்றி இறக்கிவைக்கிறனே அவனே 

வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

இரு நிலவு

 அன்றைய பௌர்ணமி பொழுதில் இரு நிலவுகளடி.

வானத்தில் ஒரு நிலவடி மச்சியில்

பிரகாசிக்கும் நிலவோ உன்தன் முகமடி.

20/10/24

பெண்மையைப் போற்றுவோம்

 உடலுக்குள் உயிராய் அமைந்து

உறவுகளில் கனிவாய் நடந்து

கண்மணியாய் என்றும் காத்து

இன்மொழியால் அன்பை பொழிந்து

கஷ்டங்களில் ஆறுதலாய் இருந்து

தன் இஷ்டங்களை மனதிற்குள் அடைத்து

அவமானங்களை தனக்குள் மறைத்து

மேன்மையிலும் எளிமையாய் திகழ்ந்து

சோதனைகள் பல தகர்த்து

சாதனைகள் பல படைத்து

மண்ணை ஆள்வதையும் தாண்டி

விண்ணையும் வியாமுயற்சியால் அடைந்து

வையகமே வியந்து பார்க்கும்

ஒப்பற்ற புகழின் சிகரமே!

ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கின்ற

தேன்மதுர புன்னகையின் உயர்வனப்பே!

தன்னலமில்லா உன் பெண்மையை

நொடிபொழுதும் மனதால் மறவாது

இதயத்துடிப்பாய் என்றும் போற்றிடுவோம்!

தண்ணீரில் பஞ்சமோ

ஏன் இந்த நிலை? பெண்களுக்கு, கண்ணீரில் பஞ்சமோ?

தண்ணீரில் பஞ்சமோ? தெரியவில்லை எனக்கு.....,

வாட்டர்பாட்டிலில் வாசல் தெளிக்கின்றனர்!!


19/10/24

என் இதயத்தில்

அம்மா நீ என்னை உன் க௫வறையில் சுமந்தாய்...

நான் உன்னை என் இதயத்தில் வைத்து சுமக்கிறேன்... 

கடவுளிடம் ரே ஒ௫ வரம் கேட்கிறேன்...
 
பணம்வேண்டாம் பொ௫ள் வேண்டாம்...
 
எனக்கு அடுத்து ஒ௫ பிறவி இ௫க்குமெனில்...
 
நான் உன்னை என் க௫வில் சுமக்க வேண்டும்...
 
நீயே எந்தன் மகளாக பிறக்க வேண்டும் அம்மா....

அன்பு ஆசான்

 என்னவென்று தெரியாமல் வந்தேன் ஏதுவென்று புரியாமல் திகைத்தேன்
 
அறிமுகம் இல்லா எனக்கு அன்பின் ஆழம் கற்றுத்தந்தாய்
 
அகிலத்தை வெல்ல வழிகாட்டினாய் வெற்றி மாலையும் சூடவைத்தாய்
 
தோல்விகளுக்கு தோள்கொடுத்து ஆறுதல் சொன்னாய்
 
ஆசிரியராய் உன் கண்டுடிப்புகளாகவே என் வாழ்வும்  மிளிர்கிறதே!!!!

அறிவையும் அன்பையும் புகட்டி அம்மாக்கும்
 
அப்பாக்கும் இணையாக கிடைத்த உறவே!!!

உன் காலடி தொட்டு வணங்குகிறேன் கோடி நன்றிகள்
 
சொல்லிடுவேன் இறைவனுக்கு உங்களை அளித்ததால் !!!!

எந்தன் உறவே

 தனிமை கொள்கிறேன் யாவரும் நமக்கானவர் இல்லை...

என்று எண்ணும் நொடியில் என்னை தொட்டு செல்லும் தென்றலே!
 
நீ தொட்டு சென்றது எனக்காய் நீ இருக்கிறாய் என்றா?
 
என்று கேட்கும் கணத்தில் கன்னத்தில் அழகிய

முத்தாக மழைத்துளி விழுகையில் பேர் ஆனந்தம்...
 
எந்தன் கண்ணீராய் நீ வருகிறாயா எண்ணும்

தருணத்தில் சட்டென்று ஊணில் சூடானஒளி கண்டிப்பான

தந்தைப் போல்  நீவீர் யாவரும் எமக்கான எண்ணும் கணத்தில்

இருள் சூழ மனம் உடைகையில்
 
மீண்டும் என்னை தொட்டு செல்லும் தென்றல்...
 
அவளை  மேல்நோக்கையில் அழகிய அமுதமான அன்னை நிலா

என்னை கண்டு புன்னகைகிறாள் தாயாக,
 
கோடிக்கணக்கான நட்சத்திரம் என்னை கண்டு

மிளிர்கையில் கோடிஉறவுகள் கொண்டவளாய் மாறிப்போனேன்!

இயற்கை யாவும் எந்தன் உறவே

14/10/24

கடவுளின் மருவுருவமே

 கடவுளின் மருவுருவமே! 

உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,

உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,

 நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!

நான் சுவாசிக்கும்  காற்றே அவள் தான் அம்மா.....

எட்டிப்பிடிக்கும் கனவுகள்

 என்னால் எதுவும் முடியும் என்ற ஊக்கச் சொல்லே

எட்டிப்பிடிக்கும் கனவுகள் "எட்டாத்தூரத்தில் இல்லை"

என்பதை உணர்த்தி என்றென்றும் நான் வெற்றி பெற

எப்போதும் எனக்குள் ஒலித்து என்னுடனே பயணித்து
 
எனது அடையாளமாய் என்னை உயர்த்தி தனித்துவமாக்கி
 
என் முயற்சியின் பலனாய் வெற்றி பெற வாய்ப்பளிக்கும்.

13/10/24

ஆசிரியை

 அம்மா சொல்வாள் நேர்த்தியாக உடை அணி என்று;

அப்பா சொல்வார் தொலைக்காட்சி பார்க்காதே என்று;

பாட்டி சொல்வாள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் என்று;

தாத்தா சொல்வார் கைப்பேசி வேண்டாமே என்று;

சகோதரன் சொல்வான் புத்தகம் எடுத்துப் படி என்று;

ஆனால், அனைவரிடமும் நான் சொல்வேன்....

உங்களின் எல்லா முகமுமாக இருக்கும்

என் ஆசிரியை சொன்னால் மட்டுமே செய்வேன் என்று......

வாழ்க ஆசிரிய பெருமக்கள்! நன்றி

பெண்ணே

 பெண்ணே நீயோ மேகத்தைப் போன்றவள்

 நானோ வற்றிய நதியைப் போன்றவன்
 
நீ மனம் வைத்தால் என்னை காப்பாற்றலாம்

 ஆனால் நீ ஏனோ மறுக்கிறாய்.

7/10/24

புன்னகை

 உன்னால் ஆயிரம் பேரை கோபம் படுத்திவிடலாம்,

அந்த ஆயிரம் பேரையும் சிரிக்க வைத்தால் நீதான் மாமனிதன்.

2/10/24

மங்கிய நிலா

 மங்கிய நிலா மனிதரில்லா வீதிகள்

அசையா மரங்கள் துளிக் காற்றில் லாமல்

நனைந்த உடல் சொட்டு
 
அன்பில்லா மனிதர்களின் சொத்து

பேனா

 தலையில் கிரிடம் அணிந்த கர்வம்

தலைகுனிந்து எழுதும் போது இல்லையே!!!!

பட்டமோ பட்டையமோ ஏதும் இல்லை உனக்கு...

பட்டமும் பட்டமும் நியின்று இல்லை எனக்கு....

உலகை ஆளும் அரசனும் உன் உயிர் எழுத்துக்கு மயங்கிடுவான்

ஆயிரம் ஆயிரம் படைகளும் உன் ஆய்த எழுத்துக்கு அடிபணியுமே!!!


6/9/24

என் இனியவளே

 ஓ தாமரைய தேன்நிலவு நேரத்திலெல்லாம்

இச்சூரியனை காணாமல் மனம் வாடினாயோ

என் உயிரே கிழக்கு வாசலில் உன்
 
பார்வையில் தென்பட்டவுன் முகம்  மலர்ந்து
 
என்னை வரவேற்றயோ என் இனியவளே

மறக்க செய்து விடும் காலம்

 கையில் கிடைத்த களிமண் பொம்மையை

கை தவறி விடுமோ களவு போய்விடுமோ

கண் பட்டுவிடுமோ என்று கண்கள் காட்டும்
 
மாய பயத்தினால் காதல் செய்யவும் கட்டி
 
அணைக்கவும் மறக்க செய்து விடும் காலம்

காதல் விசை

 இணையத்தின் காந்த விசையால் சந்தித்தோம்..

இதயத்தின் ஈர்ப்பு விசையால் ஒன்றானோம்...

காலத்தின் உராய்வு விசையால் பல கனம் தொலைத்தோம்..

இயற்கையின் மீள் விசையால் மீண்டும் இணைந்தோம்...

நம் இருவரின் காதல் விசையால் பல பருவம் கடந்து பயணிக்கிறோம்...


4/9/24

நம் நட்பு

 விண்ணில் ஆயிரம் பூக்கள் பூப்பது  உண்டு.. 

அதேபோல் நம் மனதில் பூக்கள் ஒரு பூ அது நம் நட்பு... 

நம்பிக்கை

 உன்னிடம் நம்பிக்கை இல்லை என்றால்.. 

சிறு கல்லைக் கூட மண்ணாக மாற்ற முடியாது.. 

ஆனால் உன்னிடம் நம்பிக்கை என்று
 
ஒன்று இருந்தல் விற்பனை கூட உன்னால் தொடமுடியும்... 

தமிழ் தாய்

 "உன் பிறப்பு பொதிகை பூர்விகமோ தமிழகம்

உன் உதடு திருக்குறள் உள்ளமோ திருவாசகம்
 
உன் விரல்கள் பதீற்றுபத்து பற்களோ முத்தொள்ளாயிரம்

உன் இடை குறுந்தொகை எடையோ ஐந்தினை ஐம்பது

உன் பக்தி தேவாரம் புத்தியோ நெடுந்தொகை

உன் குணம் திருப்புகழ் மனமோ பாஞ்சலிசபதம்

அணிகலன்களாய் தலையில் சீவகசிந்தாமணி

இடையில் மணிமேகலை காதில் குண்டலகேசி கையில்
 
வளையாபதி பைந்தமிழே செந்தமிழே தமிழ்த்தாயே!!!!

எங்களின் பேச்சும் மூச்சும் உயிரும் நீதானே"

அவன்

 ஆயிரம் ஆண்களின் பார்வைக்கூறிய அர்த்தத்தை

அறியும் அவளுக்கு, ஏனோ அவன் பார்வைக்குரிய

 அர்த்தம் புரியவில்லை, அதைத் தேடிக் கொண்டே
 
தொலைந்து கொண்டிருக்கிறாள்; அவனிடம்

29/8/24

தயக்கம்

 இன்னும் காத்திருக்கின்றன பிறிதொரு
 
கணத்தில் சொல்லிக் கொள்ளலாம் எனத்
 
தள்ளி வைக்கப்பட்ட வார்த்தைகள்....

மௌனம்

 வார்த்தைகள் உதவாத போது மௌனமே துணையாகிறது

அவரவர் அகராதிகள் என்ன சொல்கிறதோ

அப்படியே அர்த்தம் கொள்ளட்டும்

அவரவர் பாஷையில் மொழி பெயர்த்து கொள்ளட்டும்

மௌனத்தின் இளைப்பாறலில் என்னை

 நானே துாசித் தட்டிக் கொள்கிறேன்... 


28/8/24

மேகத்தின் மோகம்

 கார்மேகமாய் தனிமையில் திரிந்தேன்; 

வண்ணமுகிலாய் என் வானம் வந்தாய்;
 
நாம் உரச மின்னலாய் என்னுள் கலந்தாய்;
 
என் மனதில், நீ முழுமதியாய் வளர்ந்தாய்!
 
நம் மோதலைக் கண்டு வானம், கரம் தட்டி மகிழும்;
 
நம் காதலைக் காண, புவியெங்கும் புன்னகை பூக்கும்!
 
உயிர்வளியாய் நீயும், நீரியமாய் நானும்,
 
வாழ்வில் ஐக்கியமானால் மாரியாய்
 
உலகம் சென்று, பூவின் மடி சாய்வோம்! 

கானல் நீராய்

 இருண்ட இரவின் மதியின் புன்னகையில்

நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...

கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்

நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!


திறமைக்கு தலை வணங்கி

 தேரோட்டி மகன் என்று ஊர் வசைப்பாட
 
சபையில் தலை குனிந்தான் எங்கள் கர்ணன்!

ஆனால், போரில் கர்ணனை எதிர்க்க

 தேரோட்டியாகவே வந்தான் கண்ணன்!

கடவுள் என்று கொட்டம்மடித்தாலும்!

 திறமைக்கு தலை வணங்கியே! ஆகும்.

நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்

 பட்டமரம் கூட துளிர்க்கின்றதே மானிடா! -  மனம்

விட்டுப் போக ஒருநாளும் முயலாதே - தறி

கெட்டுப்போன நம் வாழ்விலும் ஓர்நாள் வானவில் வரும்...!

எட்டிப் போன வட்ட நிலவும் உன் கிட்ட வரும்....!

வண்ண நட்சத்திரங்களும் நிச்சயம் உனை முட்ட வரும்....!

தோழியின் அறிவுரை

 நீ கண்ணாய் இருந்தாள்- அவர் உன் இமையாய் காத்திட

அவர் காற்றாய் இருந்தாள்- நீ கொடியாய்  பரந்து  அவர் புகழ் பாடிட

நீ சமைத்தாள்- அவர் அதை அமிர்தமாய்  கொண்டிட

அவர் வீட்டினை கட்டினால் - நீ கோயிலாய் ஆகிட

 எப்பொழுதும் பாசத்தையும் அன்பையும் கொண்ட

 இல்லறத்தை அன்பும்; அரனு வழி நடத்திடு என் தோழி

ஊமை காதல்

 விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது 

காணவில்லையே என்பதற்காக அல்ல 

கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக 

அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால் 

புரியாத  காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன் 

காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!


27/8/24

தூய்மை இந்தியா

 சாலையோரம் திகைத்து பார்த்தபடி இருந்த சிறுவனை

பார்த்த அந்தப் பொரியவர், என்னவாயிற்று என்றார்?

சிறுவன் கூரிய பதிலைக்கேட்டு சற்று கலங்கியபின் மௌனமாக சென்றார்.

ஐயோ! இந்த வண்டி இங்கு வரை வந்த விட்டதே,

வந்தால் என்ன நமக்கு பெரிய சாலை கிடைக்கும் அல்லவா!

உங்களுக்கு சாலை கிடைக்கும் அனால் எங்களுக்கு! 

வீடு கூட இருக்காது கலங்கியபடி நூறடி தொலைவில்

 சாலையொர தார்ப்பாய் போர்த்தபட்ட கொட்டகையை

 காண்பித்தான் வாழ்க(தூ)ய்மை இந்தியா! திட்டம்..


நட்பும் நலம் விரும்பியாக

 நட்பும் நலம் விரும்பியாக நாட்டம் கொள்ளுதே
 
என்னிடம் நடை பயணம் செய்திட! எல்லாம் நாட்களும் ....

என் உள்ளம்

என் உள்ளம் நோகுதடா என் ஆசை கண்ணாலா....

உன் கரம் பற்றாமல் என் நடைபாதையின்

தூரம் நீண்டு போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் ஆசை தீர்க்காமல் என் நித்திரை இரவுகள்

செலவாகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் தலையணை சேராமல் என் கூந்தல் மல்லிகை எல்லாம்

வாடிப் போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் அழைப்புகள் இல்லாமல் என் அலைபேசி ஓசை

ஜீவனின்றி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...

உன் இதழ் ஈரங்கள் என் கண்ணக்குழி நிறைக்காமல்

தூரம் விளகி போகையில் எல்லாம் என் உள்ளம் நோகுதடா...






நம்பிக்கையுடன் நான்

 என் ஆசைகள் அனைத்தையும் கனாக்கண்டேன்....

அவைகள் நிஜமாக மாறாத என்று ஏக்கம் கொண்டேன்

சிறு உறக்கத்தின் பின் விழித்தெழுந்தேன்...

கண்ட கனவுகள் யாவும் களைந்து விட்டன கண் திருஷ்டியாக...

கண்டது என்னவோ கனவுதான் அது ஒரு நாள் 

கலையாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நான்...!!!

பெண் சுதந்திரம்

 பாதையாவும் பாதம்படும்வரை வெற்றிடமே!

சோலையாவும் மழைபெய்யும்வரை போர்களமே!

கோழையாக நீ இருக்கும்வரை 

கேலியாகத்தான் ஊர் நகைக்கும்!

பேதைபோல மனம் பதைக்கும்!

ஆம்! உண்மை சற்று கசக்கும்!

ஆகையால், துணிந்து சபை ஏறிவிடு,

ஒருகை பார்த்துவிடு அடிமைப்பெண்ணே!

தலை நிமிரட்டும்! விழித்திமிரட்டும்!

மடமை உடையட்டும்! மெய்யியல் மலரட்டும்!

புதுமை பிறக்கட்டும்! பெண்ணியம் சிறக்கட்டும்!

யார் ஆதிக்கமாக இருந்தால் என்ன?

ஆணாதிக்கமாக இருந்தால் என்ன?

அதட்டும் உதடுகள் அடங்கட்டும்.

அடிமையென்னம் ஒழியட்டும்.

விடுதலை விடியட்டும்! பெண் சுதந்திரம் அடையட்டும்!


26/8/24

என் அன்பே

 உன் பார்வை என் மீது படாத தருணம்

உன் குரல் கேட்காத தருணம் 

என் பேரை நீ அழைக்காத தருணம்
 
உன் சிரிப்பை சுவாசிக்காத தருணங்கள்
 
என் நெஞ்சை விஷமுள்ளால்

நெய்தாற்போல் வலிக்கிறது என் அன்பே!

காதல்

 ஒரு காத தூரத்தில் நின்று கொண்டிருக்கும் அவன் ..

ஏனோ கோனி இருக்கும் கண்மையினை பார்த்துவிட்டு ...

அலைபேசியில் திறுத்துகிறான்...

ஆயிரம் நொடி கண்ணாடியின் உள்ளீடாய்

இருந்த முகப்பில் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தும் ..

அவள் கண்ணுக்கு அகப்படவில்லை எதுவும் .

அவளின் அவனே காண்கிறான் எல்லாம் ...

அவளின் உள்ளீடாக இருந்து கொண்டு💞

முயற்சி

 வலிகள் தந்திடும் வெற்றிப்படிகள்,

விழிகளில் நீங்கிடும் கண்ணீர் துளிகள்,

சிலந்தியின் முயற்சி, அது மகிழ்ந்து

 வாழ்ந்திடும் இல்லத்தின் நெகிழ்ச்சி......

24/8/24

இவ்விரவு நீளாத

 பொழுது விடியும் என்று தெரிந்தும்

 உன் முகம் என் கனவில் தெரியும்

 என்பதற்காக இவ்விரவு நீளாத

 என்று பேராசையோடு தூங்குகிறேன்

அன்பு காதலியே

 உன்னிடம் பேசும் போது
 
பொழுதுப்போக்காகத்தான் தெரிந்தது

உன் பேச்சின் மென்மையைக் கண்டு

 என் மனம் பூத்துக்குலுங்குகின்றது

 என் அன்பு காதலியே......... 

தன்னம்பிக்கை

 உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்

முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு 

நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..

அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..


குருவின் அருமை

 கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!!

தறியாகினும் சரியாகிட உம்மிடமே மீண்டு வருவேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

காலடி ஆயினும் அடியேன் அதில் கிடையாய் கிடை கிடப்பேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

இறையும் இறைமறையும் பலத்துறையும் கற்றுக் கொடுத்தீர்...

என் குறையும் பல கறையும் அது மறையும் வரை வெளுத்தீர்...!!!

கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை...,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!! - எனை சரியாக்கிடும்  நீரே...!!!

குழந்தைத் தொழிலாளி

 தேய்ந்த தோள்களிலே சாய்க்கும் சுமைகளுண்டு.

தள்ளாடும் தேகத்தை பந்தாடும் வலிகளுண்டு.

கல்லோடும் மண்ணோடும கரகாட்டம் நாளுமுண்டு.

கயிறோடும் பயிரோடும் சதிராடும் ஆட்டமுண்டு.

அனலோடும் புனலோடும் சடுகுடு ஆட்டமுண்டு.

கந்தகத்தில் குளியலுண்டு காலத்தின் அலங்கோலம்.

கால் வயிற்று கஞ்சிக்கு காடு மலை திரிந்ததுண்டு

மருண்ட விழிகளிலே மயக்கத்தின் மருட்சியுண்டு. 

பிஞ்சு விரல்களுக்கு நஞ்சோடும் நட்புமுண்டு.

பூந்தளிர் மேனியெங்கும் பிரம்புகளின் தழும்புமுண்டு. 

பிள்ளைக் கனியமுதின் பேரின்பக் காப்பியத்தின்

அவல நிலை கண்டு அல்லலுறும் அன்னை மனம்.

சில்லறை சில கண்டு அள்ளிட தினம் நின்று

துள்ளிடும் தந்தையின் தள்ளாடும் நிலை கண்டு

உள்ளிலே உயிர் சுருண்டு உறவதின் நிலை மறந்து

கொள்ளியின் கொதிப்பெனவே கொதித்திடும் மனம் கனன்று.


23/8/24

இவன் சாதனை

 அரங்கத்தில் இவன் செய்த சாதனையை பார்த்து

 அனைவரும் கைத்தட்டி பெருமிதம் அடைய,

 இரு கண்கள் மட்டும் கைகுப்பி அழுது கொண்டு இருந்தது, 

ஏனென்று பார்த்தால் இவனை ஈன்றெடுத்த

 தாயின் கண்களுக்கு மட்டும் இவன் சாதனையை

 விட இவனுடைய வலிகள் மட்டுமே அந்த

 தாயின் கண்களுக்கு தென்பட்டு இருந்ததாம்...

உன்னை நினைக்க

 அந்நாளில் அரட்டை அடிக்காமல், உறங்க சென்றேன்.

இந்நாளில் கனவிலாவது அரட்டை அடிக்க,

உறங்க சென்றேன். தேடுகிறேன் அவளை!

மீண்டும் தேடுகிறேன் அவளை!

என் தூக்கம் தெளிந்து உன் போதையில் தொலைந்த

என்னையும் இன்று தேடுகிறேன்.

என்னோடு பேச உன்னையும் தேடுகிறேன்.

இருநாள் பேசிய மயக்கம் பலநாள் தெளியவில்லை.

பலநாள் பேச விரும்பும் மனதும்

ஒருநாள் கூட உன்னை நினைக்க மறக்கவில்லை.

மனித சாதி

 ஓசோன் ஆடை கலைந்து;

மானமிழந்த பூமிதனைக் கொன்று;

மரணமெய்தக் காத்திருக்கும்

மனித சாதி, திருந்தப்போவதில்லை!


22/8/24

பாரதியின் படைப்புகள்

 அழகிய நீர்த்தடாகம். பரந்து விரிந்து வானம். பச்சை நிற புல்வெளி.

பூத்துக் குலுங்கும் மலர்கள். மயில்களின் நடனம். பறவைகளின் கீச்சல்கள்.

கிளிகளின் பாஷைகள். தேன் குடிக்கும் வண்டின் முயல்கள்.

மரங்கள் ஒன்றொடொன்று உரசும் ஊடல்கள்.

இவ்வளவு இருந்தும் எனக்கு பசி இருந்தது.

தின்றால் போதும் என்று கூறும் அளவுக்கு 

வயிற்றுப் பசி இல்லை. செவிப்பசி ஆம்.

இத்தகைய சூழலில் மனம் மறந்து செல்லக்கூடிய நிலையில் கூட,

என் செவிகளில் எதோ ஒன்று குறைபாடாகவே இருந்தது.

ஆம் அதுதான் புண்பட்ட மனத்திற்கு

மாபெரும் ஊன்றுகோலாய் இருந்த பாரதியின் படைப்பு.

கடலில் மூழ்கிய உயிர் துறக்க எண்ணியவனுக்கு கை நிறைய

 முத்துக்களை பரிசாக கொடுத்தாள் கடல் அன்னை.

ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது பாரதியின் படைப்புகளை வாசிக்கும்
 போது.

காலம் வருமென காத்திருந்து

 வாகைசூடிய நிழலாய் வெந்தனலில் வாடி 

மறைந்து ஓடி எங்கோ மலையில் ஏறி

உயிரே நீயென் உறவோ ? மாயையோ ? - என

அலப்பறித்து கேள்வி கேட்கும் மாயவனே 

செங்கதிரோனும் அந்நிலவும் சாட்சி கூற  

உற்றோறும்  நட்போறும் நீதியோறும்  பெற்றோறும் 

 கண் அகன்று கயலால் காட்சிக்காண

 என்னோடு  உறவாடிய கூற்று மறந்தாயோ

பெண்ணே நீயென் உறவெனக்  கூறி 

இது மெய்யேயென பொய் உரைத்து 

காணும் காட்சியை கானல் நீராக்கி

இன்று மன்றாட வழி வகுத்தாயே 

தீயே காற்றே புவியே மழையே 

உயிரேயெனக் கவிபாடியே நெஞ்சில் உனை

வளர்த்து இன்று உள்ளம் பொசுங்க 

காலம் வருமெனக் காத்து இருக்கின்றேன் 

உன் பொய்க்கெல்லாம் பதிலடி கூறவே !