20/10/24

பெண்மையைப் போற்றுவோம்

 உடலுக்குள் உயிராய் அமைந்து

உறவுகளில் கனிவாய் நடந்து

கண்மணியாய் என்றும் காத்து

இன்மொழியால் அன்பை பொழிந்து

கஷ்டங்களில் ஆறுதலாய் இருந்து

தன் இஷ்டங்களை மனதிற்குள் அடைத்து

அவமானங்களை தனக்குள் மறைத்து

மேன்மையிலும் எளிமையாய் திகழ்ந்து

சோதனைகள் பல தகர்த்து

சாதனைகள் பல படைத்து

மண்ணை ஆள்வதையும் தாண்டி

விண்ணையும் வியாமுயற்சியால் அடைந்து

வையகமே வியந்து பார்க்கும்

ஒப்பற்ற புகழின் சிகரமே!

ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கின்ற

தேன்மதுர புன்னகையின் உயர்வனப்பே!

தன்னலமில்லா உன் பெண்மையை

நொடிபொழுதும் மனதால் மறவாது

இதயத்துடிப்பாய் என்றும் போற்றிடுவோம்!

0 Please share your thoughts and suggestions!: