30/1/24

கண்களால் காதல் செய்து

 மெழுகுவர்த்திக்கு உயிர் குடுக்க உயிர் வித்தது தீக்குச்சி..... 

அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி......

 வார்த்தைகள் அனைத்தும் மௌனம் ஆகியது நீ என் அருகில் இருக்கும் போது..... 

விழி மொழி பேசதா என் மதி வழி மாறி தவிக்கிறது.... 

கண்களால் காதல் செய்து...மனதளவில் திருமணம் செய்து... 

கனவுகளில் வாழ்ந்த என் வாழ்க்கை நிஜம் கான ஆசை......

உன்னை நினைத்து நினைத்து

மணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து உருவான உதயமடா நீ!

 என் உயிரோடு உனை சேர்த்து கருவோடு இணைந்தவனடா நீ!

என் வயிற்றில் கை வைத்து ரசித்ததுண்டு நான்!

 ஆறாம் மாதம் நீ அடையும் போது ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தவளடா நான்!

நீ பிறக்க போகும் தருவாயில் என் வயிற்றிலேயே இறந்தவனடா நீ!

உன் முகம் கூட பார்க முடியாத பாவியடா நான்

 பத்து வருடமாக உன்னை நினைத்து நினைத்து அழும் பேதையடா நான்!

என்று உன்னோடு வந்து சேர்வேனோ ஆவியாய் நான்.

29/1/24

வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே

 தொட்டவுடன் வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே! 

நான் தீண்டினால் உனக்கென்ன தீட்டோ? 

  அழகிய மலர்களும் அதில் சிறு முட்களும் 

இடைவெளி இல்லா கொடியென படர்ந்தாலும்

 என்றைக்கும் காயம்படாது என் தேகம் உன்னால் தொட்டதன் 

தொடர்ச்சி துவண்டது உன் உணர்ச்சி -இப்படிக்கு தென்றல். 

என் இனிய கணினியே

 என் இனிய கணினியே உன் முகம் கண்டு என் நாள் துவங்க
 
உன் கை பிடித்து என் பயணம் தொடர உன் அறிவால்
 
நீ என் தவறுகளை திருத்திட அதில் நான் மகிழ்ந்திட நாட்கள் செல்லுதே.

 வெளிப்படுத்த முடியாத கோபமும்  உன்னோடுதான்

 சொல்லமுடியாத சில புலம்பல்களும் உன்னோடுதான்

அடைந்த இருளில்  என் கண்ணீரும் உன்னோடு தான்.

மகிழ்ச்சியோடு வீடு திரும்ப என் புன்னகையும் உன்னோடு தான்.

உன் துணை இன்றி என் நாள் இல்லையே என் இனிய கணினியே 

28/1/24

உம்மை பார்த்த பிறகு

 நில(வு) வொன்றும் போட்டியிட வந்துவிட்டால்

 நிற்கதியாய் நிற்க வேண்டி இருக்கும்

  கடைசி வரைக்கும் நிம்மதி இல்லாமல்!!!!!!!

 உம்மை பார்த்த பிறகு!!!!!????

மகள் எழுதும் முதல் கவிதை

 அம்மா என்கிற அழைப்பும் , தாய்மை என்கிற தத்துவமும்

 ஒரு பெண்மையை உணர்ந்தவளுக்கு மட்டுமே தெரியும்.  

அம்மா  யாரோ நீ யாரோ நான், ஏனோ என்னை பெத்தெடுத்தாய்,

ஏனோ என்னை உருவாக்கினாய் உன் பாசமோ, 

கண்டிப்போ என்னை வளர்த்தது... உன் அன்போ,

அணைப்போ என்னை மிகைத்தது... உன் பாசத்தில் பாகுபாடு உண்டோ..

 உன் அன்பில் அரவணைப்பு உண்டோ.. உன் முத்தத்தில் காமம் உண்டோ..

 உன் பாதுகாப்பில் பயம் உண்டோ. இவை அனைத்தும் 

உனக்கும் எனக்கும் இடையில் மட்டுமே நிகழும் .. 

என்ன உறவோ இருந்துவிட்டு போகட்டும் . இறுதி வரை இருப்போம்.. 

உனக்காக நானும்,எனக்காக நீயும்.. 

அருகில் இருந்தால் அரவணைத்து சொல்லிருபேன, 

தொலைவில் இருக்கிறாய்.. தூது அனுப்புகிறேன் அம்மா  பிரியமானவளுக்கு 

உன் பிரியமுள்ள மகள் எழுதும் முதல் கவிதை...  

இறுதி சுவாசம் உள்ள வரை உன்னை காபேன் அம்மா ....


வானம்

 வான்மகளின் முகத்தில் வெண்மேகங்கள் பொவுடர் பூச

 கருமேகங்கள் திருஷ்டி பொட்டு வைக்க
 
மஞ்சள் சூரியன் மங்கலகரமாய் பொட்டு வைத்தான்

தமிழ் கவிதையின் அழகு

 நம் உணர்வுகளை உயிர் மெய் எழுத்துக்களாய்

 பல இலக்கணங்களை கோர்த்து அழகான 

வார்த்தைகளாய் மாற பிறக்கிறது கவிதை

என்ற சொல் இதற்கு நிகர் தாயின் கருவறையில் 

பிள்ளை உருவாகுவது மட்டுமே

வேறு என்ன கூற எம் தமிழையும் தமிழ் 

கவிதையின் அழகை பற்றியும். 

பார்கவி பாரதியாரின் பிள்ளைகள் அல்லவா நாம்

தாய்மை என்ற பாந்தம்

  தாய்மை 🌹திருமணம் முடிந்த பெண்ணின் எதிர்பார்ப்பு 

தாய்மை என்ற அந்தஸ்தை அடைய தவிக்கின்ற  உள்ளம்

தனது நிலைமை அறிந்தும் ஒவ்வொரு மாதமும்  எதிர்பார்த்து
       
சோகத்தில் வாடிப் போன முகம்

மனைவிக்கு ஆறுதலளித்த  உன்னதமான கணவரின் ஆசையும்

என்றாவது ஓர் நாள் அவ்வாசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில்

வருஷங்களும் கடந்து விட்டதே

வருடங்கள் மாறினாலும் மனம் எண்ணிய எண்ணம் ஒன்றே

        தாய்மை என்ற பந்தத்தை அடைகின்ற காலமும் வந்ததே

27/1/24

என் வலிகளும் கரைகிறது

 பேனாவின் மையும் கரைகிறது...
 
என் வலிகளும் கரைகிறது ...
 
பேனாக்களும் தீரந்து விடுகிறது...

 என் வலிகளும் தொலைந்து விடுகிறது...

  இரண்டும் நடந்தது நானும் நீயும் கலந்ததினால்...!

பாட்டி

 என் அன்னையின் அன்னை அவளோ... ‌

இல்லை அன்பின் அன்னை அவளோ... 

 கருவறையில் போற்றும் தெய்வம் அவளோ...

  அவளை அறிவாயோ?....  காலனை வென்ற காரிகை அவள்... 

 உதிரத்தை பாலாய் தந்த நங்கை அவள்... 

 வியர்வையை உணவாய் தந்த யுவதி அவள்...  

என் இதழ்கள் மலர கண்டு இன்புற்ற  இளையாள் அவள்...  

பண்பை பாசம் கொண்டு ஊட்டிய பாவை அவள் ... 

 வேசம் இல்லா பாசம் கொண்ட  வஞ்சி அவள்...  

உயிர் உள்ளவரை நேசம் கொண்ட  பூவை அவள்...

வாழ்க்கை

 வாழ்வே! உன்னை ரசிக்க கற்றுக் கொண்டால்.... 
 
 வாழ்வில் துன்பம் என்பது எனக்கு இல்லை  

நான் பட்டம் வாங்க எண்ணியவள்

 தன்னலமற்று என்னலம் காத்தாள்
 
என் வலியாற்ற தன் வலி மறைத்தவள்

 என் உறக்கம் பார்த்து தன் உறக்கம் மறந்தவள்

 பட்டையென தன்னை எரித்து 

நான் பட்டம் வாங்க எண்ணியவள் அம்மா 

26/1/24

உன் காலடியில் என் கவிதை

 அன்பு அன்னைக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்

 இல்லை என்பது உனக்கு தெரியாது ஈகை குணத்துடன்

 பிறந்ததினல் உள்ளத்து வலிமை இருந்ததினால்

 ஊக்கத்துடன் வலம் வருகிறாய் நாள்தோறும்

 எளிமையான தோற்றமும், பேச்சும் ஏற்றமான 

உன் வாழ்கையின் அடையாளம் ஐம்பது மணநாள்

 முடிந்தாலும் ஒலிக்கிறது உன் தேன் போன்ற குரல்

 ஓடியாடி நீ வேலை செய்தாலும் ஒளடதம் போன்ற 

உன் வார்த்தைகள் மாறாது. க ச ட த ப ற வல்லினம்

 உன் வலிமை எனக்கு அதிசயம், ங ஞ ண ந ம ன மெல்லினம்

 நீ அன்னை என்பதில் பெருமிதம், ய ர ல வ ழ ள இடையினம் 

உன் காலடியில் என் கவிதை சமர்ப்பணம் 


மருதாணி

 உனது விரல்களை பிடிப்பதாலும்..
 
உள்ளங்கையில் அமர்வதாலும். 

எத்தனை வெட்கம் பார் மருதாணிக்கு.

தேவை

 தேவைக்காக பழகுவது தேவையில்லையென்று நினைத்த நான்;
   
இன்று தேவைக்காக பழகுவது தேவை என்கிறேன்;
  
தேவையினால்....தேவைக்காக பழகலாம், 

தேவைக்காக தேவையில்லாமல் அநீதி இழைக்க கூடாது......

உன் விழிகளில்

 உன் அழகைக் கண்டு காதல் கொண்டிருந்தால்,
 
நீ வேண்டாம் என்று சொல்லியப் பிறகு,

வேறொரு பெண்ணைப் பார்த்திருப்பேன்..! 

ஏனோ எல்லோரிடத்திலும் உன்முகம்  பார்க்கிறேன், 

நீ அருகில் இருந்தால் அந்த நொடியே சாகிறேன், 

 என்ன  தான் விந்தையோ உன் விழிகளில்...🖤

25/1/24

காதல் உணர்வு

தொட்டால் சிணுங்கி போல உனை கண்டால் கரைகிறேன்! 
 
வானின் மதியை போல உனை பார்த்தால் மகிழ்கிறேன்!

இரவா பகலா உனை என்னவென்று நான் சொல்வது 

முள்ளா மலரா உனை என்னவென்று நான் அழைப்பது! 

குறை குடமாய் தழும்புது அகமே உனை கண்ணருகில் கண்டாலே

 பனி மழையாய் பொழியுது மனமே உன் நினைவுகள்  எந்நாளுமே!

 மருதமாய் நீ எனை தொடவே காகிதமாய் உன் மடி சேர்வேன்! 

மூச்சாய் நீ எனை நெருங்கிடவே முத்தமிழாய் உன்னில் இனித்திடுவேன்!

இகமே நீ ஆனால்  மறுகணமே உவகையாவேன்!  

24/1/24

கடந்து வந்த பாதை

 கடந்து வந்த பாதையை,மனிதா  மறந்து விடாதே!!!, 

 அதன் முட்கள், "நீ கடக்க வேண்டிய  பாதையின் குழிகளை  எச்சரிக்கும்"

  அதன் பூக்கள்,  "அதில் உன்னை  தொடர்ந்து செல்ல  ஊக்குவிக்கும்"

ஜாதி என்னும் பெயரில்

காதல் என்னும் காகிதத்தை எழுதி
 
கொண்டிருந்தவர்களுக்கு காலம் எழுதிய

 கடைசி காகிதமும் கையில் வந்து

 சேர்ந்தது ஜாதி என்னும் பெயரில்..