17/3/24
தாயே என்றும் உனக்காக நான்
நட்பு என்னும் படகில்
16/3/24
பிறந்த பிண்டமே வேண்டும்
இது தான் காதலா
15/3/24
என் கனவே
முயற்சி
14/3/24
அழகான காலை
13/3/24
உன்னை தேடி என்னை தொலைத்து
புதிர் நிறைந்த புத்தாண்டே
11/3/24
உந்தன் கரம் கோர்க்க
9/3/24
திருமகளே வருக
உயிர் போன்ற நட்பு
வகுப்பறை தூக்கம்
தாலாட்டு பாடவில்லை தானாக வந்தது;
ஆசிரியரை அலட்சியப்படுத்தி
ஆடாமல் ஆட வைக்கும்!!
அசைவு!!! வகுப்பறை தூக்கம்!
நீ என்னுடன் இருப்பதால்
அவள் மணம்
மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும்
மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை
என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்...
ஏனெனில் அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!
உன்னை நினைத்தேன்
மழை
அம்மா எனும் உறவு
விடுமுறை இல்லை உனக்கு,
உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,
விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,
ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,
மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,
நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,
வெளிக்காட்டாத உன் உணர்வு,
உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,
நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,
இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,
இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,
இவ்வுலகில் அம்மா எனும் உறவு,
ஆண்டவன் அருளின் படைப்பு.....
6/3/24
நினைவுகள்
நிலவின் ஒளியில் நடக்க ஆசை
உன்னோடு அந்த நிலவின் ஒளியில் நடக்க ஆசை
யாரும் இல்லாத கடல் மணலில் உன் கை கோர்த்து நடக்க ஆசை
கூண்டுக்குள் இருந்த நான் உன்னோடு வெட்டவெளியில் பறக்க ஆசை
உன் மார் சாய்ந்து தூங்க ஆசை என்றும்
உன் முதல் குழந்தையாக இருக்க ஆசை
காதலன் என்றாலே என்னைக் கட்டிப் போட்டு
அவன் கட்டுக்குள் வைப்பவன் என்று எண்ணினேன்
ஆனால் நீ என்னை கட்டி அணைத்து
உன் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறவன்
இறைவன் நம்மை இணைத்ததிற்கு ஒரு காரணம் உண்டு
அதை நாம் இணைந்து அறிவோம் (அறிந்து) செயல்படுத்துவோம்.





