30/3/20

பெண் ஒரு உன்னத படைப்பு

womens quotes


பெண் ஒரு உன்னத படைப்பு !அவள்

அகத்தில் அன்புடனும் ,

புறத்தில் பண்புடனும் ,

பெண்மைக்கு உண்மையுடனும் ,

பிரமிக்க வைக்கும் திறமையுடனும் ,

பொறுமைக்கு இலக்கணமாய் ,

புனிதத்திற்குப் பொருத்தமாய் ,

அடக்கம் அறிந்தவளாய் ,

அகங்காரம் தொலைத்தவளாய்,

அன்பிற்குப் பணிபவளாய் ,

பார் முழுதும் வலம் வருபவள் .

அவள் மேன்மை மறந்தார்க்கும் ,

பெண்மையினை எதிர்த்தார்க்கும் ,

அயர்ந்தவர்க்கும் அறிவுறுத்தி ,

பெண்மையில்லையேல் அகிலமில்லை என ,

அவள் பெருமைதனை நிலைநாட்டி ,

அவள் கொண்ட குறிக்கோளை மறவாது ,

தொடர்ந்து வாழ்வில் பயணித்து ,

அனைவரின் வாழ்வையும் உயர்த்திட ,

ஒன்றுபட்டு செயல்படும் அவள்

ஓர் உன்னத படைப்பே !  

-து.தீபா. எம்.ஏ, எம்ஃபில் , பி.எட்

Kavithai Competition


 

பு(பி)ரிதலின் பெருந்தன்மை

kavithai pirivu

அவனின் மனைவியான 

எனது காதலி

இன்னும் அப்படியே 

புன்னகைக்கிறாள்  !

என்னை ஏமாற்றக் கூடாது

என்பதற்காக 

என்னை விட்டு பிரிந்தவள் அவள் ! 

சுற்றயல் அழுத்தங்களால்  

நடித்துக் காட்டவென்று புறப்பட்டு

தூண்டப்பட்ட 

உணர்வு மயக்கத்தில்

எனக்காக வைத்திருந்த 

அந்தரங்க முதல்களை 

பறிகொடுத்த அப்பாவி !

காதலை அசிங்கப்படுத்தக் கூடாதென்பதற்காக 

எனது நினைவுகளுடன் 

அவனுடன் வாழ்கிறாள் 

வண்டுக்கு தேனைக் கொடுத்து

நறுமணத்தை இரசிகனுக்கு கொடுக்கும் புஷ்பம் போல !

என்னுடன் அவள் 

இலகுவாக இணைந்திருக்கலாம் 

இரகசியங்களை மறைத்துக் கொண்டு

ஆனால் 

போராடியே பிரிந்தாள் 

உண்மைகளைச் 

சொல்லிச் சொல்லி !

அவள் என்னைப் பிரிந்ததால் 

நாங்கள் இன்னும் 

பிரியாத பிரியமான காதலர்களே !

அவள் 

இன்னும் அப்படியே

புன்னகைக்கிறாள்

அப்போது

எல்லாப் பூவனங்களும் 

தலை குனிந்து நிற்கின்றன

நாங்களும் காதலித்துப்

பிரிந்திருக்கலாமென்று ! 

- எஸ். ஜலால்டீன்

Kavithai Competition

 

வாழ்க்கை

life kavithaigal-tamil

ஒரு நொடி போதும் அவமானத்திற்கு
ஒரு அவமானம் போதும் பல துன்பங்கள் வருவதற்கு
ஒரு துன்பம் போதும் பிறரைப் புரிவதற்கு
ஒரு புரிதல் போதும் அன்பு உண்டாவதற்கு
ஒரு அளவில்லா அன்பு போதும் எதிர்பார்ப்பு உண்டாவதற்கு
ஒரு எதிர்பார்ப்பு போதும் கோபம் உருவாவதற்கு
ஒரு கோபம் போதும் தோல்வி உருவாவதற்கு
ஒரு தோல்வி போதும் முயற்சி உண்டாவதற்கு
ஒரு முயற்சி போதும் போராடுவதற்கு
ஒரு போராட்டம் போதும் நம்பிக்கை உண்டாவதற்கு
ஒரு நம்பிக்கை போதும் துணிவு உண்டாவதற்கு
ஒரு துணிவு போதும் புன்னகை நிலைப்பதற்கு
ஒரு புன்னகை போதும் எதையும் எதிர்கொண்டு வாழ்வதற்கு

- நிவேதா ராதாகிருஷ்ணன்

Kavithai Competition

கவிதையின் காதலன்

kavithai tamil image

நிலவொளியில் இமை பார்த்து நிழல் தாரகையின் வருகைக்காக நிஜமாய் குடைபிடிக்கிறேன் நின் பாதச்சுவடு தேடி...

- லதா

Kavithai Competition

 

21/3/20

ஏகாந்த நிலவு நீ

nila patriya kavithaigal

சித்தம் குலைந்து உன்னை சித்தரிக்கும் சிலையாக நான் இருக்கிறேன்

அம்மம்மா  அகல விரித்து வைத்து உன்

கருவிழிகள் என்னை

ஒரு நிமிடம் சித்தனாக்கிவிட்டதடி

கொவ்வைச் செவ்வாய் திறந்து

எனை நீ அம்மா என்றழைக்கயிலே

 கொள்ளை இன்பம்

கொண்டேன் அடி

கண்பட போகுதுன்னு உன்னை பொத்தி வைக்க 

இவ்வையகத்தில்

உன்னை பெற

உவகை கொண்டேனடி 

அழகான உன் அழகை ஆதரித்து

உனை வளர்க்க ஆவல் எழும்புதடி

நெற்றிப் பொட்டில் வையம் உணர்த்தும் உன் லாவன்யத்துக்கு வார்த்தைகள் இல்லையடி என் கண்ணம்மா

 பூவாக. நீ சிரித்தால் என் மனதில் பூரிப்பு தோன்றுதடி

என் கவலையெல்லாம்

தீர்த்து வைத்த ஏகாந்த நிலவு நீயடி

- பாலகிருஷ்ணன்

Kavithai Competition

 

எப்படி தடுப்பேன்

rain kavithai in tamil images
Rain kavithai in Tamil images

கொட்டும் மழைதனை குடைவிரித்து

எப்படி தடுப்பேன்

என் கன்னக்கதுப்புகளை முத்தமிட்டு

கொஞ்சிக் கொண்டு வழிந்தோடுகையில்

நிலத்தில் விழும் சடசடப்பு ஓசைகளை

எவ்வாறு தடுப்பேன்

சுற்றி இருக்கும் நிசப்தங்களை

சுருட்டி முழுங்கி ஓய்கையில்

ஓய்ந்த பின் இருக்கும் சூழலை

எப்படி இரசிக்காமல் இருப்பேன்

விழுங்கிய நிசப்தங்களை ஒரு நொடியில்

வஞ்சனையின்றி தந்து செல்கையில்

தன் வண்ணத்தை வானிடமே

விட்டு வரும் வேளையில்

எப்படி கொண்டாடாமல் இருப்பேன்

தீண்டும் கணத்தில் அது

என் நிறம் கொள்கையில்

எத்தனை வடிவங்கள்

இந்த தண்ணீருக்கு மட்டும்

இருந்தும் தீண்டும் ஸ்பரிசத்தில்

நம்மை திமிரச் செய்வதென்னமோ

மழைநீர் மட்டும் தான்…!

- பிரியதரிஷினி செல்வநாயகம்

Kavithai Competition