28/2/20
இராணுவம்
தன் உயிரை
மண்ணுயிர்க்கு - என்று
தான பத்திரம்
எழுதி கொடுத்த
தர்மர்கள் இராணுவ வீரர்கள்!
கொடுத்த வாக்கிற்காக
கொடுமை பல கடந்து
உணர்ச்சிகளை ஒடுக்கிய
ஊமைச் சடலங்கள் !
அரை ஜான் வயிற்றுக்கு
அங்கே இங்கே
அல்லாடும் கூட்டத்திற்கு மத்தியில்
அனைத்தையும் கொடுத்து விட்ட
அமைதி புயல் கள் !
அன்பிற்காக வாழாமல்
அடிமையாகவும் இல்லாமல்
அழைப்பை எதிர் நோக்கி
வாழும் அசாத்திய மனிதர்கள்!
இன்பமாய் வாழ வழியில்லை
இயற்கையை ரசிக்க நேரமில்லை
இளமை கோலம் மாயமாய்
இனிதே கடந்து சென்றது !
பெற்றவளுக்கோ - ஓர்
ஆறுதல் கூற முடியவில்லை
வந்தவளுக்கோ பகிர்ந்து
கொடுக்க உயிருமில்லை
பேர் சொல்லும் பிள்ளைக்கோ
பாதை காட்ட பயணமில்லை
சுற்றமும் சூழ்ச்சிக்கும்
இடையில் சுழலுகிறேன் !
வீண் முயற்சி - என்று
சொல்பவர்களுக்கு மத்தியில்
விடா முயற்சியுடன்
வினை செய்ய துணிந்த
வித்தைக்கார வீரன் !
உன்னை ஊர் போற்றி
நாடு போற்றி
உலகம் போற்றி
பறைசாற்றி நிற்கிறது
வானத்தின் எல்லையாய்
நீங்கள் தான் எங்கள்
எல்லைச்சாமி என்று ..
- லதா
Kavithai Competition
ராணுவ வீரன் கவிதை
நினைவுகள்
மனம் என்னும் காட்டில் மலரும் மலர்கள்..
அதன் வாசம் மனதில் தரும் மகிழ்ச்சியின் வண்ணங்கள்..
மன கதவுகளை திறக்கின்ற சாவி..
அது விட்டு செல்லும் பல காயங்களை தூவி..
வயது நரையை தொட்ட பின்..
உறவுகள் கையை விட்ட பின்..
தேடல்
By Dinesh Kumar A P2/28/2020அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், புது கவிதை, வேதனைNo comments
இச்சிறு உலகில்,
துரிதமாக நாளும்
வெறுமையாக நானும்
கடக்கிறது.
வழக்கமாக ஆயினும்,
தனிமை பழக சிரமமாக,
செல்கிறது தினம்.
செல்லும் பாதையில்
கண்கள் இல்லை.
கவனமாக
உனைத் தேடுதலில்
மட்டுமே.
கண்ணெட்டும் தூரமே
நீ இருந்தாலும்,
உனை எங்கும் காணவில்லை,
என்னுள் தவிர..
- பாரதி
Kavithai Competition
21/2/20
காதல்
நீயும் நானும் வானமும் பூமியும் போல்!!
பூமியை தீண்டவும் இயலாத தொலைவில் வானம் இருந்தாலும், பூமிக்கு வறட்சி
என்னும் துன்பம் நிகழும் பொழுது, வானம் தன் கண்ணீராகிய மழையால் பூமியை
குளிரச் செய்கிறது
அதுபோல
உன்னை விட்டு நான் விலகி இருந்தாலும், உன் துன்பத்தை தீர்க நான் என்றும் மழையாய் ஒடோடி வருவேன்...!!!
- ஐஸ்வர்யா
Kavithai Competition
வாழ்க்கை என் கைகளில்
சிந்தித்துப் பார்த்தேன்
சிறகை விரித்து
சிரிப்பை உரைத்து
சிறந்த சிற்ப்பமாக மாற
செதுக்க செதுக்க
சிதைந்து போகாமல்
சிந்தனை குறையாமல்
செம்மரமாய் நின்றேன்
உளுக்கிய போதெல்லாம்
உதிர்ந்து போகாமல்
உறுதியை விடாமல்
உண்மையாய் நின்றேன்
விழுந்த போதெல்லாம்
எழுந்து நின்று
விடா முயற்ச்சியுடன்
நகர்ந்துச் சென்றேன்
சந்திரக்கோளும் சந்தரப்பத்தால்
மாறுபட்டு நின்றாலும்
என்றும் நான்
ஒன்றில் நின்றேன்
வெட்ட வெட்ட
மரம் வளர்வதுபோல்
தட்டத் தட்டத்
தழைத்து நின்றேன்
சரித்து பார்க்கும்
மனிதர் இடத்தில்
சரியாமல் நானும்
நிலையாக நின்றேன்
இரவும் பகலும்
நினைத்துக் கொண்டேன்
நினைவில் மட்டும்
ஒன்று கொண்டேன்
தோல்விகள் பலநூறு
சந்தித்த போதிலும்
துவண்டு போகாமல்
நானும் நின்றேன்
வறுமையால் வாடினும்
வயிற்றுப்பசியால் பாடினும்
வெற்றியென்ற மலரைப்பெற
விதையாகப் புதைந்தேன்
வழியை அமைத்து
வலியை மறந்து
வாழ்வில் பறந்து
செல்ல வேண்டும்
என் வாழ்க்கை
என் கைகளில்
அல்லவா .....?
- தமிழ்த்தேன் கவிஞன்
Kavithai Competition
அம்மா
ஒய்வறியா உழைப்பூற்று
உன்னத பெண்மணி
உன்னை என்னி கவிபடைத்தேன்
காவியாமாக.
அம்மா என அழைத்து அமுதமொழியில் தாலாட்டி
ஆன்றோர்கள் ஆசியுரைக்க
எத்தனை காவியம் அளித்தாலும்
உமக்கு எதுவும் நிகராகுமோ மண்ணில்
நீயே என் மகிழ்வூற்று
எனக்கு கிடைத்த வரம் அன்றோ
நீங்கள் எங்களை
ஆயிரம் முறைத்திட்டினாலும் எம்மை
வழிநடத்தி நற்வழிப்படுத்த நீப்பட்ட பாடு
பிரசவலிக்கும் அப்பாற்பட்டது என்பதை அறிவேன் அம்மா
ஓய்வுக்கு விடைக்கொடுத்து
ஓயாது உழைத்து கொண்டே இருக்கிறிர்கள்
எங்களுக்காக வயாதானதை அறியாது.
எனது வயதின் ஆயுளையும் கொடுப்பேன்
உமக்காக இறைவனிடம்
- இரா.சரண்யாராஜா
Kavithai Competition
அப்பாவின் அன்பை வேண்டும் அவள்
உன்னதமான உறவுகள் வாழ்வில் இல்லாவிடினும்.,
வாய்த்த உறவுகள் விநோதமாய் அமைந்துவிட்டால் வாழ்வை கடத்துவது சற்று கடினம்தான்.....
தந்தையிடும் முத்தத்தில் சாராய வாடை கலந்திருப்பதில் எனக்கு வருத்தமில்லை,
முத்தமே கிடைக்கவில்லை என்பதுதான் யுகிக்கமுடியா பரிதவிப்பு....
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை இன்றளவும் உணரமுடியா அவள் எனும் நான்....
எமக்கு
வாய்த்த தந்தையை கண்டு சமூகம் ஏசுவதை கேட்டு எனக்கு கோபமில்லை,
இருப்பினும் என் தந்தையை இப்படி வளர்திட்ட சமூகத்தின்மீது கோபம் வராமல்
இருந்துவிடுமா என்ன???
அப்பா எப்போது வருவார் என்று வாசலில் கண்வீசும் மகள்களுக்கு மத்தியில்...
என் குடிகார அப்பாவை வெளியே தள்ளி கதவடைத்த அவள் எனும் நான்.....
நான் எதிர்பார்க்கும் குணத்துடன் இனி ஒரு தந்தை எனக்கு கிடைக்கபோவதில்லை ...
கிடைத்தாலும் அதை என் மனம் எப்படி கிரகித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை...
தாய்ப்பட்ட துன்பம்...
ஊர் சொன்ன சொற்கள்...
எண்ணிலடங்கா அவமானம்....
இதையெண்ணி வருந்தியதைவிட...
எப்போது வருவார் அப்பா
எப்போது தருவார் முத்தம்
என்பதை மட்டுமே மனம் வேண்டி விசும்புகிறது...
மேற்கண்ட வரி(லி)கள் உங்கள் பார்வைக்கு....
இதோ என் தந்தைக்கு ஓரே வேண்டுகோள்...
" அப்பா நம் வீட்டில் ,நடு கூடத்தில் என் பிணம் கிடக்கும் வேளையிலும் நீ உயிரோடு இருக்க வேண்டும்....
என் உடலைவிட்டு பிரிந்து சென்ற என் உயிர் ,நம் வீட்டு வாசலையே பார்த்திருக்கும்....
அப்போதும் உன் முத்தத்தை வேண்டி காத்திருக்கும் அவள் எனும் நான்....."
- அரவிந்த்
மூன்றெழுத்தில் முற்றும் மறந்தேன்
By Dinesh Kumar A P2/21/2020அம்மா, அன்பு, கவிதை, கவிதை எழுது, கவிதை போட்டி, காதல், புது கவிதைNo comments
வார்த்தைகள் சேர துடிக்கும் நொடி
விழி பேசத்தொடங்கிய தருணம்
மூன்றெழுத்து.
உன் இதயத்துடிப்பை உன் விழி வழி என்னுள் செலுத்திய தருணம் மூன்றெழுத்து.
உணர்வுகளின் எழுச்சியில் உடல் அசைவுற்று தன்னிலை மறந்த தருணம் மூன்றெழுத்து.
விடியலை மறந்து இரவின் மடியில்
விழி மூட மறுத்து, உன் நினைவில் உருகிய தருணம் மூன்றெழுத்து.
என்னை என்னுள் தொலைத்து உன்னில் தேடிய தருணம் மூன்றெழுத்து.
உன்னை மறக்க நினைத்த மௌனத்தின் தனிமையை
சத்தம் இட்டுக் கலைத்துச் சென்றது, என் மனதில் உன் முகம்பதித்த மூன்றெழுத்து.
பெண்மையின் உச்சம் தொட்ட
மறு நொடி வெட்கம் ததும்பிய தருணம் மூன்றெழுத்து.
வெறும் மூன்றெழுத்தில் என்னை முழுவதுமாய் அவன் உயிரில் கடத்த எப்படி முடிந்தது காதலே?
- அனுஷாயினி
Kavithai Competition
இவளும் பெண்ணே
ஏழ்மையின் சிகரமாய்
விளங்கியவள்
எழுத்தறிவு இன்றி திகழ்ந்தவள்
மாதுளை அழகுடையவள்
மனம் கவரும் பேச்சுடையவள்
தித்திக்கும் இனிப்பில் தேன் கலந்த நிறம்முடையவள்
தீச்சுடராய் மின்னும் கண்ணுடையவள்
எண்ணங்களை எரித்து ஏக்கத்தை புதைத்து
கைம்பெண்ணாய் காலம் கழிக்கிறாள்..
வாழ்நாளை வருத்தி..
- இளவரசன்
Kavithai Competition
19/2/20
வாரும் மனிதா
கனவுகள் கானல் நீராகிப் போகுதம்மா.......
கண்ணீரின் கதைகள் தொடருதம்மா......
அடியும் உதையும் வாழ்வை சூரையாடுதம்மா.....
இளம் பிஞ்சுகள் என்றும் பாராமல் சீரழிக்கும் காலம் தொடருதம்மா........
பெண்ணினம் கொதித்து கொந்தளிக்குதம்மா.........
சில கொடியவரின் கோரத்தை பாருமம்மா........
விடுதலை அடைந்த நம் நாடு இன்றும் பயத்தால் நடுங்குதம்மா........
பெண்ணினம் தனிமையில் நடப்பதற்கு வழிகள் கூட இங்கு இல்லையம்மா........
வாரும் மனிதா
உனக்கும் மனிதாபிமானம் இருந்தால்
பெண்ணினத்தை போற்ற அல்ல
18/2/20
காதல் (கவிதை போட்டி)
பூமகளின் பூச்சுடரே!
பூப்பதுயார் பூங்கவியோ..
இயற்றுகிறேன் இலக்கியம்தான்
காவியமே! நான்உனக்கு..
கலைமகளின் தலைமகன்நான்
சிற்பிகிறேன் சிலைஉனக்கு..
தேனொழுக தேவலோகம்
வற்றுமெனில் உனைவியக்க..
அற்புதம்ஏது நிகழ்ந்தனவோ
பூவுலகில் பிறந்தவள்நீ!!
கொட்டும்மழை மேகங்களே!
சுடர்விட்டுவ௫து என்அழகு..
உரிமையோடு கோ௫கிறேன்
தயங்காமல் நீபழகு..
தேவதை உந்தன் நினைவுகளோ
ஒ௫திங்கள் மறைவதில்லை..
காலம் கடந்து போனாலும்
இ௫க்கும் எத்தன் ஜுவன்வரை..!
- எழிலரசன்
16/2/20
ஏக்கம் (கவிதை போட்டி)
கரு மேகம் சிந்திய வெண்துளிகளில்
எல்லாம் பூமியில் உயிர் துளிர்க்கிறது
மேனி சிந்தும் வெண்துளிகள் எல்லாம்
கதிராகி நிற்கிறது
அவள் உடலில் சிந்திய வெண்துளியோ
பட்டு போயி நிற்கிறது ..(கருவுறாமல்)
அவள் கண்கள் சிந்தும் வெண்துளியோ
தலையணையில் மறைகிறது ...
ஏக்கம் தீருமா ..!
அவளின் ஏக்கம் தீருமா !!
- சரோ சரண்
Tamil Kavithai Competition
13/2/20
பெண்ணே...!!!
வழி இல்லா உன்
விழியில் பிறக்கிறேன்...!!!
வருத்தம் எதுவுமில்லை
வாழ்ந்த நாட்களுக்கும்
வாழும் நாட்களுக்கும்
வரம் நீ கிடைத்தால்
போதும்...!!!
வாழ்வே வசந்தமாய்...!!!
வாழ்வே ஆனந்தமாய்...!!!
வரமாய் தவமாய்....!!!!
ஏனோ
வரம்...!!!
வாரம் ஆனாலும்
மாதம் ஆனாலும்
வாழ்வது உன்னோடு
தான்...!!!
வாழ்ந்து கொண்டு
இருப்பதும் உன்னோடு...!!!
பெண்ணே...!!!
உவமை போல் என்னில்
பயின்ற அணி நீ...!!!
உருவகம் போல் என்னில்
உருவாக்குகிறாய்...!!!❣️
10/2/20
அன்பு தாயே (கவிதை போட்டி)
கனம் தாங்கி என்னை கருவில் ஏந்தினாய்!
மரண வலியை சில மணித்துளியில் அனுபவித்தாய்!
இரத்தம் முறித்து எனக்கு அமுதலித்தாய்!
சத்தமிட்டு அழும்போதெல்லாம் முத்தமிட்டு அனைத்தாய்!
சோர்ந்து விழும்போதெல்லாம்
என்னோடு சேர்ந்து நின்றாய்!
பொய்யான இந்த உலகில்
நான் கண்ட உண்மை நீயே
என் அன்பு தாயே...
- மு.மங்கை
Tamil Kavithai Competition
7/2/20
புல்வெளி (கவிதை போட்டி)
பனித்துளி மெதுவாய்க் கண்ணுறங்க
மெத்தை ஆனது
மெத்தை ஆனது
மாந்தர்கள் அமர்ந்து கதைபேச
கூடம் ஆனது
கூடம் ஆனது
பசு தன்பசி ஆற்ற
உணவு ஆனது
உணவு ஆனது
விலங்கு தன்நோய் தீர்க்க
மருந்தும் ஆனது
மருந்தும் ஆனது
பசுமைப் புல்வெளி அதைக் காக்க
மறந்தும் போனது
மறந்தும் போனது
காலம் அதன் கையில்
சுவடும் போனது
சுவடும் போனது
பூமிதான் பச்சை நிறம்
இல்லாமல் போகுமோ?
இல்லாமல் போகுமோ?
வெறும் தேசியக்கொடி வண்ணம்
என்று மாறிடுமோ?
என்று மாறிடுமோ?
- விசு