23/8/24

இவன் சாதனை

 அரங்கத்தில் இவன் செய்த சாதனையை பார்த்து

 அனைவரும் கைத்தட்டி பெருமிதம் அடைய,

 இரு கண்கள் மட்டும் கைகுப்பி அழுது கொண்டு இருந்தது, 

ஏனென்று பார்த்தால் இவனை ஈன்றெடுத்த

 தாயின் கண்களுக்கு மட்டும் இவன் சாதனையை

 விட இவனுடைய வலிகள் மட்டுமே அந்த

 தாயின் கண்களுக்கு தென்பட்டு இருந்ததாம்...

உன்னை நினைக்க

 அந்நாளில் அரட்டை அடிக்காமல், உறங்க சென்றேன்.

இந்நாளில் கனவிலாவது அரட்டை அடிக்க,

உறங்க சென்றேன். தேடுகிறேன் அவளை!

மீண்டும் தேடுகிறேன் அவளை!

என் தூக்கம் தெளிந்து உன் போதையில் தொலைந்த

என்னையும் இன்று தேடுகிறேன்.

என்னோடு பேச உன்னையும் தேடுகிறேன்.

இருநாள் பேசிய மயக்கம் பலநாள் தெளியவில்லை.

பலநாள் பேச விரும்பும் மனதும்

ஒருநாள் கூட உன்னை நினைக்க மறக்கவில்லை.

மனித சாதி

 ஓசோன் ஆடை கலைந்து;

மானமிழந்த பூமிதனைக் கொன்று;

மரணமெய்தக் காத்திருக்கும்

மனித சாதி, திருந்தப்போவதில்லை!


22/8/24

பாரதியின் படைப்புகள்

 அழகிய நீர்த்தடாகம். பரந்து விரிந்து வானம். பச்சை நிற புல்வெளி.

பூத்துக் குலுங்கும் மலர்கள். மயில்களின் நடனம். பறவைகளின் கீச்சல்கள்.

கிளிகளின் பாஷைகள். தேன் குடிக்கும் வண்டின் முயல்கள்.

மரங்கள் ஒன்றொடொன்று உரசும் ஊடல்கள்.

இவ்வளவு இருந்தும் எனக்கு பசி இருந்தது.

தின்றால் போதும் என்று கூறும் அளவுக்கு 

வயிற்றுப் பசி இல்லை. செவிப்பசி ஆம்.

இத்தகைய சூழலில் மனம் மறந்து செல்லக்கூடிய நிலையில் கூட,

என் செவிகளில் எதோ ஒன்று குறைபாடாகவே இருந்தது.

ஆம் அதுதான் புண்பட்ட மனத்திற்கு

மாபெரும் ஊன்றுகோலாய் இருந்த பாரதியின் படைப்பு.

கடலில் மூழ்கிய உயிர் துறக்க எண்ணியவனுக்கு கை நிறைய

 முத்துக்களை பரிசாக கொடுத்தாள் கடல் அன்னை.

ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது பாரதியின் படைப்புகளை வாசிக்கும்
 போது.

காலம் வருமென காத்திருந்து

 வாகைசூடிய நிழலாய் வெந்தனலில் வாடி 

மறைந்து ஓடி எங்கோ மலையில் ஏறி

உயிரே நீயென் உறவோ ? மாயையோ ? - என

அலப்பறித்து கேள்வி கேட்கும் மாயவனே 

செங்கதிரோனும் அந்நிலவும் சாட்சி கூற  

உற்றோறும்  நட்போறும் நீதியோறும்  பெற்றோறும் 

 கண் அகன்று கயலால் காட்சிக்காண

 என்னோடு  உறவாடிய கூற்று மறந்தாயோ

பெண்ணே நீயென் உறவெனக்  கூறி 

இது மெய்யேயென பொய் உரைத்து 

காணும் காட்சியை கானல் நீராக்கி

இன்று மன்றாட வழி வகுத்தாயே 

தீயே காற்றே புவியே மழையே 

உயிரேயெனக் கவிபாடியே நெஞ்சில் உனை

வளர்த்து இன்று உள்ளம் பொசுங்க 

காலம் வருமெனக் காத்து இருக்கின்றேன் 

உன் பொய்க்கெல்லாம் பதிலடி கூறவே !

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான்

 இந்த உலகத்தில் மூன்று எழுத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம் ...

அம்மா மூன்று எழுத்து அப்பா மூன்று எழுத்து மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து அன்புக்கு மூன்று எழுத்து காதலுக்கு மூன்று எழுத்து

நட்புக்கு மூன்று எழுத்து மனம் மூன்று எழுத்து பணம் மூன்று எழுத்து

பாசம் மூன்று எழுத்து உயிர் மூன்று எழுத்து நிலம் மூன்று எழுத்து

காற்று மூன்று எழுத்து நம் விடும் மூச்சிற்கு கூட மூன்று எழுத்து தான்!!!!!!!!

ஏன் கவிதைக்கு கூட மூன்று எழுத்து தான் நண்பர்களே!!!!!!

காலம் போகுதே பாஸ்ட் அதை வீணாக்காதே வேஸ்ட்

இனி என்ன செய்யலாம் நெக்ஸ்ட் என்று யோசிப்பதே பெஸ்ட்


அதிசய பெண்ணே

 ஐம்புலம் மகிழும் அதிசய பெண்ணே உன்னை அடைந்திட வழி சொல்லடி.

உன்னை அடைந்திட வழியும் இல்லையென்றால் நான் அழிந்திட வழி சொல்லடி.


அப்பா கைக்கடிகாரம்

 அப்பா உங்கள் கைக்கடிகாரம் என்னவோ உங்களுக்குத் தான் சொந்தம்,
 
ஆனால் அதில் உள்ள நேரம் எல்லாம் எங்களின் தேவை கருதியே  நகர்ந்தன.

21/8/24

வறுமை

 வறுமை என்றால் என்ன? என்று என் தந்தையிடம் கேட்டேன்!
 
 அவர் இரு  குழந்தைகளை என் கண்ணில் காட்டினார்!

ஒரு பணக்கார வீட்டில் உள்ள குழந்தை சாப்பிட மறுத்து,

தட்டில் இருந்த இட்லியை தூக்கி அடித்தது!  

தெருவில் நின்ற இன்னொரு குழந்தை அந்த 

ஒரு இட்லிக்கூட கிடைக்காதா? 

என்று ஏக்கத்தோடு அந்த வீட்டை எட்டிப்பார்த்தது! 

இதோ பார் மகளே! என்று! அப்பொழுது புரிந்தது!

கிடைத்தவருக்கு  அது அர்ப்பம்!

கிடைக்காதவருக்கே  அது  அமிர்தம் என்று!

மரணமே போற்றி

 உயிரினங்கள் வாழ தேவனே போற்றி!! 

உலகம் சுழலும் உண்மை போற்றி!! 

ஆண்மை உணர்த்தும் பெண்மை போற்றி!! 

ஆதி நீ என சொல்லும் தாய்மை போற்றி!! 

கடந்து செல்லும் நம்பிக்கை போற்றி!! 

முடிவு உண்டு மரணமே போற்றி!! 

அன்பு உடையவர் உலகில் வாழ்க!! 

பண்பு உள்ளவர் பேச்சில் வளர்க!!  

விதைத்த விதையில் கசப்பும் உண்டு!! 

ருசித்த பழத்தில் இனிப்பு உண்டு!! 

பருவம் பாவம் பருத்தி பஞ்சு உருவமில்லாத இரக்கம்

 தான் இறைவன் உணரும்போது இவ்வுலகத்தில்

 நீயும் இல்லை உணர்வது மனிதனே இல்லை 

குருதியை மூங்கில் பையில் அடைப்பது யார்? 

குற்றம் சொல்லும் மானிடம் குறை கால் பயிர்  

என்று புரிவதில்லை உண்மையை 

உணரும்போது இவ்வுலகத்தின் நீயும் இல்லை!!


20/8/24

காதல் செய்வேன் என் கண்ணால்

 கற்பனையும் தீர்ந்து போகும் உன் அழகை வர்ணிக்க!!

 கண்ணதாசனும் தோற்றுப் போவார் உன் அழகை எழுத!!

 நா. முத்துக்குமாரும் நடுங்கித்தான் போவார் உன் நளினத்தை எழுத!

 நீ இல்லாத வாழ்க்கையை முடியாதுடி ஜீரணிக்க!! நான் வருவேன் உன் பின்னால்!!

உருக உருக காதல் செய்வேன் என் கண்ணால்!!

காரிருள் ஒன்று

  என்னைச் சுற்றி கரிந்து கொண்டே வருகிறது 

தடுமாறித் தடுமாறி இவ்வாழ்வை 

தொலைத்துக் கொண்டிருக்கிறேன்

என்னிருளில் எனைத்தேட முயல வேண்டாம் 

நீங்களும் தொலைய நேரலாம்! 

உம் தியாகமும் என்னிருளில் மூழ்கும்

என் கோப்பை மூடி என்னிருளிலே போட்டுவிடுங்கள் 

நான் தொலைந்ததுகூட இங்கே யாருக்கும் தெரிய வேண்டாம்.

என் வாழ்நாட்கள்

குறையும் என் வாழ்நாட்களை உன்னை
 
நேசித்த தினங்களாய் வரவு வைத்துக் கொள்.
 
என் வாழ்நாட்கள் சுழிந்து போனாலும்
 
உன்னை நேசித்த தினங்களாய்
 
எண்ணப்பட்டுக் கொண்டே இருப்பேன்.
 
நெஞ்சில் நிறுத்திக் கொள் உன் மீதான
 
என் பிரியங்களை எவருக்கும்
 
பங்கிட்டல்ல உரசிக்கூட தரமாட்டேன்.
 
என்றும் நீ எனக்கு அளித்த இத்தனிமையை
 
பொக்கிஷமாய் பாதுகாப்பேன். 

இவ்விறந்த காதல்

 இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் ஆகும்

இவ்விறந்த காதல் முழுதாய் அழுக்கிப் போக!

18/8/24

நண்பனின் மவுனம்

 தினம் தினம் திட்டும் அப்பாவை  

விட திட்டாமல் நகரும் 

நண்பனின் மவுனம் கொடியது!..

பாசத்தை கொடுத்த கடவுளே அப்பா

 எனக்கு உயிர் கொடுத்து உறவை 

கொடுத்து பண்பை வளர்த்து
 
பாசத்தை கொடுத்த- கடவுளே அப்பா!

அப்பாவின் நெஞ்சம்

 கஷ்டத்தை சொல்லாமல் மறைத்து

இன்பத்தை சொல்லி மகிழும்

 நெஞ்சமே அப்பாவின் நெஞ்சம்.

அன்று போல் இன்று இல்லை

 அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...

ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்

ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...

நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...??? 

இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.

வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...

மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...

நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..

நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...

பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..

நமக்குள் பாதியிலே  புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???

அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!


அர்த்தம்

 தொட்டதை விட பட்டதே அதிகம்

சந்தோசமாய் இருந்த ஓரிரு நிமிடங்களை விட 

சண்டை போட்ட மணிகளே அதிகம்.

ஆதரவை விட அவமானப்பட்டதே அதிகம்.

துணைவன் என்பதை விட 

துரோகி என்பதே பொருத்தம்.

சகிப்பு என்பதை விட

சமுக பொறுப்பு என்பதே அர்த்தம்.


தனிமை

 நீ இல்லாமல் தனிமையில் தவித்தக் காலங்கள் போய்.

நீயிருந்தும் தனிமையில் தவிக்கின்றேன் கொரோனாவுடன்!!