கண்கள் கலங்கி தினமும் நின்றேன்
கைகளாய் நீ துடைக்க வந்தாய்
கால்கள் தடுமாறி வாதையில் விழுந்தேன்
கதவுகள் பல திறந்து பாதை தந்தாய்
தூக்கமின்றி என்னைக் காத்துக் கொண்டு
என் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றித் தந்தாய்
கர்ப்பத்திலிருந்து இறக்கிவைத்து
சிற்பமாக என்னை செதுக்கி தந்தாய்
மடியில் தவழும் வாய்ப்பைத் தந்தாய்
மண்ணுலகில் நீயே வாழ்க்கை தந்தாய்
பகைவரையும் நேசிக்கும் அன்பை தந்தாய்
பாவத்தையும் சகிக்கும் பண்பை தந்தாய்
மன்னிக்கவும் மறக்கவும் கற்றுத் தந்தாய்
மனிதநேயத்தை பரிசாய் தந்தாய்
உலகமே தெரியாமல் நீ வளர்ந்தும்
என் உலகமே நீதான் என்றாய் இன்னொரு பிறப்பு
நான் எடுத்தாலும் அன்பு பெண்ணே நீயே என் தாய்