28/11/20

என்னைக் காணவில்லை



unavu kavithai in tamil

 என்னைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்! 

நான் தொலைந்துவிட்டேன்! யுத்தத்திலா? அல்லது சத்தத்திலா?      

எங்கே நான் தொலைந்தேன்?

ஓரு வேலை மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருப்பேனா?

இல்லையே

நன்றாகத்தானே நானிருந்தேன்!     

அல்லது கொரோனா வார்டிலா? 

அதுவும் இல்லையே!

பிறகு என்னவாயிற்டரெனக்கு? 

பிறகு எங்கே தொலைந்தேன் நான்?

உழைப்பிலா? பிழைப்பிலா?

துப்புரவு தொழிலாளியின்

கால்களின் இடுக்கிலா? அல்லது 

அவர் துடைக்கும் தொஷக்கயிற்றிலா?

இல்லை.. அயறாமல் உழைப்பதாக சொல்லப்படும் எனதருமை மருத்துவர் கண்களிலா?

இல்லை... அங்கும் இல்லை!.....

அரசு அலுவலகங்களிலா இல்லையே!..

அரசியல் களத்திலா? இல்லை..

நெஞ்சம் பதறும் அரசு ஊழியர் நெஞ்சப்புலத்திலா? 

இல்லையில்லை!! வாய்ப்பில்லை!!

சவக்கிடங்கிலா? சாக்கடையிலா?

இல்லை!  இல்லை!

என்னை யாரும் கொலை செய்திருக்க முடியாது!!

நான் யார்க்கும் அவ்வளவு பெரிய எதிரியல்ல!!

அப்படியானல் நான் எங்கே??

சொல்கிறேன் கேளுங்கள் உறவுகளே!

வாருங்கள்! என்னுடன் வாருங்கள் !...

குப்பைத் தொட்டியில் கிடக்கிறேன் பாருங்கள்!! ஆம்! குப்பைத்  தொட்டியில் கிடக்கிறேன்

என்னைப் பாருங்கள்!

தினந்தினம் வீணடிக்கப்படும் 

உணவுகளில்! பழங்களில்! 

அங்காடி வீதிகளில்!

அரசு மருத்துவமனை நோயாளிகள் மிச்சம் வைக்கும் தட்டுகளில்!!!

ஆம்!!

பல சமயம் தொடாமல் வைக்கும் தட்டுகளிலும்!!!!

 உணவுப்பிரிவு    ஊழியர்கள் திரும்ப எடுக்காமல் விட்டுவரும் தட்டுகளிலும்!!!          

ஆம்!  புழுவாக மாறியிருக்கும் நேற்றைக்கு முந்தைய

 உணவு த்துணுக்குகளில் ! ஆம்!

உணவியல் துறை சேர்ந்த நான்!!

புழுவாக மாறியிருக்கிறேன்!!!

ஓர் அரசு புழுவாக மாறியிருக்கிறேன்!!!🙂

-முனைவர் ஞா.சத்யா ஐயப்பன்

Kavithai Competition

தாய்மை

 

thaimai kavithai in tamil

பிறந்ததிலிருந்து துயரத்தைக் காணாத ஒரு பெண் தன் குழந்தைக்காகத் தாய்மை வலியைத் தாங்குகிறாள்

தன் வலியை மறந்து தன் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கிறவள் தாய்

தனக்கு உணவில்லை என்றாலும் தன் குழந்தையின் பசியைப் போக்குபவள் தாய்

பெண்மையை உணரச்செய்வது தாய்மையே

செயின் இன்பம் தாயினால் மறைக்கப்படுகின்ற துன்பத்தில் அடங்கும்

தாய்மையை போற்ற ஒரே வழி தாயை மதிக்கவேண்டும்....அவர்களின் சொல்லை மீறக்கூடாது.....மகிழ்ச்சி அளிக்க வில்லையென்றாலும் துன்பமளிக்கக்கூடாது

-சுசிலா

Kavithai Competition

மன்னிக்க மறந்த நட்பிற்காக

 

natpu kavithai in tamil

கரையிலே நான் நடக்கையிலே ,

மறுபுறம் நீ வருகையிலே,

என் பார்வையில்,

நான் உன்னை சிரிக்கையிலே ,

உன் பார்வையிலே ,

நீ என்னை வெறுக்கையிலே,

நீயோ நகர்ந்து செல்லையிலே ,

நானோ நகர நினைக்கையிலே ,

என் நகர்வோ நடுங்கியது,

நீ நகர்ந்து சென்ற பாதையிலே

-அபர்ணா

Kavithai Competition

மண(ற)க்க

 

love failure kavithaigal in tamil


அன்றோ  கடவுளிடம்  வரம்  கேட்டேன் 

உன்னை    மணக்க 

இன்றோ    கடவுளிடம் வரம்  கேட்கிறேன்  

உன்னை    மறக்க 

ஆனால்    இந்த   இரண்டு    வரங்களும்

கிடைக்கவில்லையே      இன்றுவரை

 - நிவேதா கவிதா

Kavithai Competition

 

வாழ்க்கை

 

vazhkai kavithaigal tamil

இங்கு வாழ்க்கை என்பது

அனைவருக்கும் ஒன்று தான்..!

அதை நாம் எப்படி

வாழ்கிறோம் என்பதில் 

தான் உள்ளது..?

நம் வாழ்க்கை..!

                            -பாரதி

Kavithai Competition


25/11/20

நிவர் புயல் கவிதை - கடலில் வாழும் கடல் நீ

நிவர் புயல் கவிதை:

niver puyal kavithai

கடலில் வாழும் கடல் நீ ❤

இந்த தூரல் (புயல்)

என்னை என்னசெய்து விடக்கூடும்?⛈️

24/11/20

ஆசான்

 

aasiriyar kavithai in tami

அறிவு கண் திறந்து..!

கனவு பாதை வகுத்து..!

கற்றாலும் கல்வியும்

மட்டும் கற்றுக் தராமல்..!

வாழ்க்கை கல்வி

கற்று கொடுத்து..!

வாழ்க்கை பாதை

அமைத்துக் தந்து..!

ஒவ்வொரு மாணவரின்

கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!

பின்னால் ஆசிரியர் 

என்ற...

மாபெரும் துணை

உண்டு..!

மாபெரும் வெற்றி

உண்டு..!


                                           - பாரதி

Kavithai Competition


சரியான போட்டி

 

nila pen kavithai tamil

இதுவரை எத்தனை பெண்ணும் அந்த ஒற்றை நிலாவிடம் தோற்றதில்லை!

இதுவரை அந்த ஒற்றை நிலாவும் 

எந்த பெண்ணிடமும் தோற்றதில்லை!

                                                             - பாரதி

Kavithai Competition

மானே மரகதமே

 

gramathu kadhal kavithai tamil

சிவத்த மேனிக்காரி

கண்டாங்கிச் சேலைக்காரி

அச்சாரம் போட்டாச்சு மறைஞ்சுப் போவாதே

மாமன் மனசுக்குள்ள முழுவதும்

நிறைஞ்சிருக்க

கழனி எல்லாம் நிறைஞ்சு போச்சு

ஆத்தோரமா  மாந்தோப்பில் காத்திருக்கேன் நானே

பாத்து பாத்து நடவு

செய்தா

பக்குவமா நெல்மணி பார்க்கலாம் கண்ணால

கதிரும் வெளஞ்சிடும்

கவலைகள் தீருமே

காளை மாடு பூட்டி

சந்தைக்கு

போகலாம் வெள்ளாமை

நிறைய வரும்

தைப் பொறந்தா கண்ணாலம் கட்டிடலாம்

இணைந்து சந்தோசமாக வாழலாம் ராசாத்தி


- உமா பாலகிருஷ்ணன்

Kavithai Competition