12/2/25

நீரின் ஆழம்

 நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும்

               நீர் ஆழமென்று  ஆனால்

போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும்

     ‌ ‌ஆண்களுக்குத் தெரியாது

நீரின் ஆழம் வாழ்க்கையின் ஈரத்தை

        அழித்து  விடும்  என்று

11/2/25

மனத்தில் உதித்திடும் வதனம்

 இரவில் தனித்திடும் தருணம்
 
            மனத்தில் உதித்திடும் வதனம்

அரைநொடி கண்ட முகம் - இருவர்

            ஆயுளை காட்டிய சுகம்

நின்னை நேரில் கண்டால் படபடப்பு

            என்னை ஆண்ட கடமை உன் கைபிடிப்பு.

6/2/25

வரதட்சணை

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை, 

காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்..... 

தன்பிள்ளை மணம் முடித்துப்போகும் 

இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக் 

கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......

இன்றோ திருமணம் என்றாலே... 

திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........ 

ஆண்- பெண் இருவரிடமும், 

இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு...... 

உன் வாழ்க்கையில் சேரப்போவது உன் பாதியோ, 

மீதியோ அல்ல.. உன் இணை என்பதை நினைவில் கொண்டு.... 

அளவற்றப் பொருளை அல்லாமல்.... 

அளவற்ற அன்பை எதிர்பாருங்கள்..... 


5/2/25

காதலுக்கு மொழியில்லை

மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலே

உன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையே

காதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிது

எத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்

சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளே

கண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையே

உன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..

காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோ

பிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்

அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்

காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்

அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லை

இனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லை

அன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களே
 
உங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்

நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..

துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்

வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழி

எத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லை

இறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!

எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!
 
கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும் 

கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,

அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.

4/2/25

என்னுயிரே

இன்றே வந்திடு என்னுயிரே!

விழியில் மோதி வாழ்வில் நுழைந்த

விடியலே ஔிவிளக்கே!

எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்த

ஏஞ்சலே என்னுயிரே!

வழியாய் நின்று பயணம் சிறக்க

வந்தஎன் வான்நிலவே!

செழிப்பைத் தரவே சிறப்பாய் சிரித்த

செந்தமிழ் சிறப்பினமே!

கனவில் வந்தே கவியாய் மாறியக்

காதலே கற்கண்டே!

தினமும் என்னை அன்பால் கொல்லும்

தேவியே தேனகமே

மனமும் உணவும் நீயாய் மாறி

மனத்தினை ஆள்பவளே!

தனமே தவிலே உலகே உயிலே

தவிப்பினைத் தந்தவளே!

என்றும் உன்னை நினைத்து நானே

ஏங்கியே வாடுகிறேன்!

சின்ன மலரே செந்நிற தேகமே

சீக்கிரம் வாயேன்டி!

பொன்னே புகழே புகழின் உருவே

பரவசம் தந்திடவே

இன்றே வந்தே என்னுள் இணைந்தே

என்னை வெல்லேன்டி! 

3/2/25

உலகத் தமிழ்

உணர்ச்சிகளை உறைய வைத்து அரண் அமைத்தேன் உள்ளுக்குள்
 
தமிழ் மொழி மட்டுமே என்பதால் கவிதைகள் எழுத களைப்பில்லாமல்
 
தன்னையே கரைக்கும் கவிஞனின் உயிர் மொழியே!

வெட்கத்தில் தலைகுனிந்தாயாயென நெல்மணியவே
 
நெகிழவைக்கும் எங்களின் நெடிதுயர்ந்த தமிழ்மொழியே.!

உள்ளுணர்வுகளை உணர வைத்தாய் உம்அருமை செம்மொழியால்!

திகட்டியதுதி கழ்ந்திருக்கும் உன் செந்தமிழை சுவைத்ததால்.!

அன்னை எனஅழைத்தோம் அடிகளால் அரவணைத்துக் கொண்டாய்.!

வாலேந்தியவன் தமிழ்வீரன் சொல்லேந்தியவளே எங்களின் தமிழன்னை!...

தேமதுரத் தமிழோசையே தென்தமிழாக எம்மனதில் தேங்கியது!..

வானமெல்லாம் விரிந்தது வலையோசை வையகம்விரிந்தது எம்தமிழோசை! 

மலர்ப்போல் மலர்ந் திருந்ததால் மணம்போல் மனம்வீசுகிறாய்..!