மூன்று எழுத்து
மந்திரம் என் தந்தை
அறிதாய் எனக்கு
கிடைத்தது அன்பு பொக்கிஷம்
உன்னைப் போல் யாரும்
இல்லை
இவ்வுலகில்
உன் ஆசைகளை துறந்து
எங்களை சீறாட்டி
பண்பாய் பாசமுடன் வளர்த்து
ஆனந்த வாழ்வியலை அன்பாய் எங்களுக்கு
காட்டினீர்கள்
விபத்து ஒன்று நடக்கவில்லையெனில்
விருட்சமாய் வளர்ந்த
நாங்கள்
உள்ளகோவிலை உயர்வாய் அமைத்து உங்களை கொண்டாடி மகிழ்கிறோம் இன்று
என்ன ஆச்சரியம்
துன்பம் ஒன்று வரும்போது
அதை துனிவாய் கையாலும் அழகு
துன்பம் ஒன்று வரும்போது
உங்கள் மார்பில்
சாய்ந்து அழ துடிக்கிறது
என் மனம்
நடக்கும் தூரம்
கொஞ்சம் வா மகளே
நளினமாய் நடைப்
பயின்று என் நகைச்சுவையை ரசித்து
மனமகிழ்ந்து கொடுக்கு
முத்தம்
எத்தனை பேரானந்தம்.
இன்றும் என் இன்பநினைவுகளில்
நீங்கா நினைவுகள்
நிதம் தவித்து அழுகிறது
நிஜத்தை எண்ணி
பாசத்தில்
எனக்கு மறு குழந்தையாக
உங்களை சுமக்க ஆசைப்படுகிறேன்
இன்று
உங்கள் பிரிவையென்னி
குருடனாய் பிறந்த
உங்கள் பார்வை தான் குறைந்ததே தவிர
அறிவு பார்வை எவ்வளவு
விசாலமானது
படிப்பறியா மேதை
பாமரரும் போற்றும் வகையில் வாழ்ந்து பரமனின்
பாதம் நோக்கி சென்றாயே
நினைக்கையில் மனம்
பிரமித்து பெருமைக் கொள்ளும்
என் முதல் மாதிரி
என்றும் நீங்கள் மட்டும்தான்
உழைப்பு , கடமை,
கண்ணியம், மனிதநேயம், பாசம், பரிவு இவை எல்லாம் உயர்வாய் உயரமாக இருந்ததால் தானோ கடவுள்
எங்களை தவிக்க விட்டு உம்மை அழைத்து கொண்டாரோ
விதி வலியது கைவண்டி இழுத்தாலும் கண்ணீயமாய் எங்களை வளர்த்தீர்கள்
தீபாவளி பொங்கல்
என்றால் இமையொரம் கனவு தோன்றும் மூன்பே
புத்தாடை வாங்குவிர்கள்
பூரிப்பை புன்னகையால் காட்டுவீர்கள்
பாப்பா என்று அழைக்கையிலே
பக்கத்து வீட்டுகாரும் வியப்பாய் பார்பர்
கண்பட்டு விட்டது
அப்பா நம் அன்பிற்கு
அவ்வளவு அழகு வார்த்தையிலே
அன்பு
நடையும் நளினமும்
இனி யாருக்கு வரும்!
கண்பட்டு விட்டது
அப்பா நம் அன்பிற்கு
மந்திரமாய் மாதவமாய்
நீ கிடைக்க என்ன தவம் செய்தேன் நான்.
என் அப்பா என்று
அழைக்கையிலே ஆசானும் வியப்பாரே பள்ளியிலே
தோழனும் , தந்தையும்,
இரண்டற கலந்த கவிதை நீங்கள் எமக்கு.
சொர்கம் தனிளே சொகுசாய்
வளர்த்து
சோதனையில் விட்டு
சென்றாய்
சொந்தமும் ஏங்கும்
பந்தமும் ஏங்கும் உமது பிரிவை எண்ணி.
நினைத்துவாடும் உங்கள்
நீங்கா நிழல்கள்
கவலை என்று நினைத்தாளே
கண்ணீர் வரும் ஊற்றாய்
கதறும் என் கண்கள்
உம்மை நினைத்து.
- சரண்யா ஆர்