21/7/24

தாயின் பாசம்

தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!

மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!

எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!


நட்பே

எங்கோ பிறந்து ஓர் இடத்தில் சந்தித்து பழகி

இரத்த பந்தம்  இல்லாமல் உனக்காக நான் இருக்கிறேன்

என்று  சொல்லும்  ஒரு உறவு நட்பே.......

அடிக்கடி சண்டையிட்டு  பிரிந்தாலும்

ஒரு நிமிடம் கூட பேசாமல்

இருக்க முடியாது- உனக்கும் எனக்கும்.....

என் மனதில் நீங்கா....உன் மனதில் நான்......

என்றும் என்றென்றும்...... நட்பே.......

மழை பாட்டு

 சில்லுனு குளிர்காற்று வீசும்  நேரம் இது,

 சில்லுனு சாரல் மழை பெயும் நேரம் இது,

கும்முன்னு மணக்குது மண்வாசம்,

குயில் கூவுது கூவுது மரத்தொரம்,

தண்ணி ஓடுது மலை ஓரம்,

ஆறு நிறைஞ்சு ஓடுது கரை ஓரம்,

குழந்தைகள் சிரிக்குது மழை போல,

வானவில் தோன்றுது மாயம் போல,

சூர்யன் எட்டிப்பார்க்குது குழந்தை  

போல, சூர்யன் மின்னுது பொன் போல...

17/7/24

வறுமை

 பசிக்கையிலே விளியோரம் கண்ணீர்.

வழிகையிலே வாய்க்கு தண்ணீர்.

தீருமா? ஏழை மகன் தாகம்.

பெண் அவளே

 உன்னில் இருந்து வந்தவள் பெண்!

எல்லை இல்லாத ஆரம்பம் பெண்!

அன்பைக் கொடுப்பவளும் பெண்!

கண்டித்து தண்டிப்பவளும் பெண்!

வழிமுறைகளை வகுத்தவளும் பெண்!

உன்னை பாதை மாறாமல் வழி நடத்துபவளும் பெண்!

துயரங்களில் உனக்கு தோள் கொடுப்பவளும் பெண்!

உன் சிரிப்புக்கு காரணக்கர்த்தாவும் பெண்!

இவ்வுலகம் பல உருவில் அவளை அறியும்

காதல்வயம் கொண்டு அவளிடம் மயங்கும்

பல அடக்குமுறைகளை அவள்மீது சுமத்தும்

சில சமயம், அரசியலும் பேசும்.

போற்றினாலும் தூற்றினாலும் வாழ்த்துபவள் பெண்!

பார்வை பல கோணங்களாயினும்

பிம்பம் ஒன்று- பெண் அவளே!



14/7/24

பெண்மையின் ‌பேரழகு

 அவள் பெண்மையின் ‌பேரழகு

என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு

பதுசாய்  என்னை வளர்த்திட,

அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை

ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,

ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,

ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,

ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,

அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......


காதல் மொழி

 தென்றல் தீண்டும் நேரத்தில் என் மனம் நிறைந்த காதலோடு காத்திருக்கிறேன்...

உந்தன் கைகளை கோர்த்து கொண்டு நான் நடிக்க பூத்திருக்கிறேன்...

தெளிவான முகத்தோடு தேன் சொட்டும் வார்த்தைகள் கொண்டு வருவாயோ!!!! .

இல்லை மலர் வனம் மயங்க இந்த மங்கையிவள் சினுங்க சிறைபிடிப்பாயோ!!!

காத்திருக்கிறேன் நான்  உந்தன் காதல் நினைவுகளோடு உறவாடி கொண்டு...

மெல்ல வந்து என் மௌனம் மொழி கேளடா....

6/7/24

நினைவுகள்

 நமக்கு எத்தனை வயதானாலும்

ஒருபொழுதும் நம்மளோட

 நினைவுக்கு வயது ஆவது

 இல்லை நம்ம உடம்புதான்

 தளர்ந்து போகிறது ஆனா

 அனைத்து நினைவுகளும்

  இளமையாகவே உள்ளன.

5/7/24

பேசா சித்திரம்

 பேசா சித்திரமும் உன்னைக் கண்டதும்

வார்த்தைகளைச் சேகரித்து வாக்கியங்களில் 

கோர்த்து தன்னுள் விமர்ச்சனம் செய்து கொள்கின்றதே.

                      

4/7/24

சமூக இடைவெளியுடன் பழகு

 மீண்டும் வந்துவிட்டது ஊரடங்கு
 
கொரோனாவை விரட்ட நமக்கும் இருக்கு பங்கு

உறவினர் ஆக இருந்தாலும் சமூக இடைவெளியுடன் பழகு

நம்மால் மற்றவர்களுக்கு ஏற்படகூடாது  தீங்கு

3/7/24

தாயின் மடி சொர்க்கம்

கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன்..
 
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால் துன்பங்கள்

 வரும் தருணம் தாயின் மடி சொர்க்கம்.

முகத்தை காணும் முன்பே நேசிக்க தெரிந்தவள் 

தாய் மட்டுமே தாயை வணங்குவோம்

தாய்மையை போற்றுவோம். 

2/7/24

உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்

 உள்ளது எல்லாம் தொலைந்தாலும் மீண்டும்

 அடைந்து விடலாம் என்றிருந்தேன் இப்போது

 உள்ளத்தை அல்லவா தொலைத்து விட்டேன்!!!

1/7/24

உன் பெயர்

 வெட்கத்தை பற்றிய

கவிதைகள் எத்தனையோ

படித்திருக்கிறேன்...

வெட்கத்தை வரவழைக்கும்

கவிதையை முதன் முறையாக 

பார்க்கிறேன் உன் பெயர் !!!